Saturday, November 22, 2008

WHATEVER HAPPENS LIFE HAS TO GO ...

Always I am thinking of my father and the second time operation put him in an unconscious state. I felt the pain when he struggled to over come his head pain. But, at the end the fate won and brought him to the heaven. Yesterday, I happen to see the film Varanam Ayiram that refreshed my old memory. I am not comparing anything from the movie to my life. But, there exist a similarity, yes, my dad passed away due to cancer. I was away from my father when he passed away due to the fact that I was the only person to earn money for his medical expenses. I still remember the last word “Poietu Vaa” from him when I was about to leaving from the hospital. I am still suffering from a (guilt??) feeling that I was not with him in his final minute stay in this world. From his day of passed away, I am always having a second opinion on the second surgery we arranged for him. We would have avoided the second surgery so that at least he might be in a conscious state until his last journey. My dad is really a role model to me and I learnt everything from him.

After all, I am a human being and I could not reverse some of the state of my life to a wished state … but I started believing so long before, as VA says, WHATEVER HAPPENS LIFE HAS TO GO …

Friday, June 20, 2008

பொழுது போக்கு

"என்னடா? ஓரே யோசனை?"

"ம்!..."

"எதைப் பத்திடா?!.."

"யாரைப் பத்தின்னு கேட்டிருக்கனும்!"

"சரி... யாரைப் பத்தி?!"

"என்னைப் பத்தி!.."

"ஹூம்..என்ன திடிருன்னு?.."

"சும்மா தான்.."

"சும்மா சொல்லுடா.."

"ஒன்னுமில்லை.."

"ஏதோ இருக்கு, நீ தீவிரமா எதைப் பத்தியோ...இல்லை..உன்னைப் பத்தி
யோசிச்சிட்டு இருந்தே!..."

"ம்..பொழுது போக வேணாமா?.."

"எவ்வளவு நேரமா??.."

"ஒரு ரண்டு, மூணு மணி நேரம் இருக்கும்!!..."

"ரொம்ப பெரிய விசயம் போல.."

"அதான் ஒன்னுமில்லைன்னு சொன்னேனே!!..."

"எங்கிட்ட சொல்லக் கூடாதா??.."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.."

"அப்ப சொல்லு..."

"ஏதாச்சும் நான் சொல்லலைன்னா விட மாட்ட போல இருக்குது.."

"எனக்குப் பொழுது போக வேணாமா?!..."

Thursday, May 1, 2008

புவி வெப்பமயமாதல்

புவி வெப்பமயமாதல் தடுப்பது குறித்து சில நல்ல கருத்துக்கள் கீழ்க்கண்ட தளத்தில்

http://maravalam.blogspot.com/2007/06/20_24.html

என்னால் இயன்றதை செய்ய போகிறேன்... முதற்கட்டமாக செயல் 20...

Saturday, April 19, 2008

பிரிவு உபச்சாரம்

முன்பெல்லாம் ஒரு அலுவலகத்தில் இருந்து இன்னொரு அலுவலகத்திற்கு மாறுவது என்பது அத்தி பூத்தாற் போல் நடக்கும் ஒரு விசயமாகத்தான் நான் அறிந்து வைத்திருக்கிறேன், ஒரு சில விதி விலக்குகளைத் தவிர!!!. ஆனால் இன்று வேலை மாற்றம் செய்யாதவர்கள் விதி
விலக்குகளாக ஆகி இருக்கிறார்கள் இந்த கணிப்பொறி துறையில்!!!

இதோ இன்றோடு ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
என்னுடன் பணி புரிந்தோர் பலர் இன்று வேறு அலுவலகங்களில்!!

ஒவ்வொரு பிரிவு உபச்சார நிகழ்ச்சியின் போதும் என் உடன் பணி புரிவோர் பிரிகையில் ஒரு சிறிய வருத்தம் மேலோங்குவதை என்னால் தடுக்க இயலவில்லை. என்ன காரணத்திற்காக இந்த மாறுதல்கள்???

பணமா?? அப்படி என்றால் ஒரே மாதிரியான வேலைக்கு ஏன் வேறுபாடான சம்பள விகிதம்??
திறமைக்கு ஏற்ற வேலை??? அப்படி என்றால் தொடர்ச்சியான மாறுதல்களுக்கான காரணம் என்ன??? மன அழுத்தம்??? இது எல்லா இடத்திலும் ஏறக்குறைய அதிகமாகத்தான் உள்ளது.
ஒரு சிலரே குடும்பத்துடன் இருக்க வேண்டி மாறுகின்றனர்.

புரியாத புதிர்தான் போங்கள்!!!..

நண்பரிடம் வினவினேன். கீழ்கண்டவை பதிலாக;

"இன்று அளவிற்கு அதிகமாக வாய்ப்புகள் குவிந்து கிடப்பது கூட மாறுதலுக்கு ஒரு முக்கிய காரணம். குறுகிய காலத்திற்குள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்க ஆரம்பித்து இருப்பதும் ஒரு காரணம்!. எது எப்படி ஆயினும், மாறுதல்கள் புதியவர்களுடன் வேலை செய்வதற்கும் புதிய சூழ்நிலைகளை அறிந்து கொள்வதற்கும் இந்த பிரிவு உபச்சாரங்கள் ஒரு காரணமாக அமைந்துள்ளது".

சரிதானோ???

மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்ற எல்லாமே மாறிக் கொண்டு தானே இருக்கிறது.... பிரிவு உபச்சாரங்கள் தொடரட்டும்...

Thursday, April 17, 2008

விடிவு காலம்

உயிர் கொடுத்திட்ட உறவு
உயிரை விட்டுவிட்ட வேளையிலே!!!

உடன் பிறந்திட்ட உறவு
என் உயிர் மாய்க்க பாய்கையிலே!!!

அன்பை ஊட்டும் உறவு
பணத்திற்காக பகைமை பாராட்டையிலே!!!

இழப்புகளும்
உறவுகளின் பகைமையும்
துரோக தீண்டல்களுமே
வாழ்க்கையாகி போகினையோ!!!

இறைவா!!
விடிவு காலம் வேண்டாம்
விடியாமலே போகும் ஒரே ஒரு
இரவு கொடு போதும் எனக்கு!!!
கோடி வணக்கங்கள் உனக்கு!!!

Sunday, March 9, 2008

Today's learning

IGNORE THE COMMENTS, BUT NOT THE ISSUE!!!
EXPERIENCE IS WHAT YOU GOT WHEN YOU DIDN'T GET WHAT YOU WANTED!!!

Snap Award

We have got a team (Dhanda, Ashok and myself) snap award on this Friday for STM1 card development. Actually, I have entered in the later phase of development. Upto that, I was working in the optical card which has the switching functionality in it.

I did get lot of support from every one, especially from my managers..that allowed me to take the decisions freely. I was working in the performance monitoring module and at that time I just aware what it is. One of my manager (Sang) brought us (Dhanda and me..do you remember Dhanda??) to the board room and explained the things very nicely.. I am still admiring about the knowledge on each modules what Thala has..I would like to become like "Thala" one day..

A lot of sleepless days went, because I am basically a hard worker..not that much Smart.. Lot of occasions where my managers, colleagues behind me on the delivers.. I am thankful to every one.

I am thanking every one who has directly/indirectly helped me to get such award. Now, Anna has taken over the responsibility of maintaining the card. A small amount of time was needed to ramp up her self :). Last but not least, I am thanking to my previous manager Malathi for making us visible to every one by nominating to this award.

I am dedicating this award to My father, though he is not with us, I still belive he left his strong blessings with me..

SNAP AWARD

உன் உழைப்பினில்
உயிர் வளர்க்கிறேன்!!!

உன் வழியில்
உயர உயர செல்கிறேன்!!!

எத்துனை உயரம்
சென்றிடினும் நெஞ்சு கனக்கிறது!!!
நீ இல்லை என்ற
உண்மையை மறுக்க முடியாத போது!!!

என்றும் உனது ஆசிகளுடன்
பயணத்தை தொடர்கிறேன்...
உன் வழியினிலே....

Sunday, March 2, 2008

நின்னைச் சரணடைந்தேன்

பாரதிக்கு நிகர் பாரதியே!!!!

நின்னைச் சரணடைந்தேன்
=======================

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்னை)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட (நின்னை)

நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)

தேடியதில் கிடைத்தது

கடைசி மூன்று வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது!!!!!

களம் கண்டேன்
May 14, 2007 by kuttipisasu

காதல்களம் கண்டேன்

இளைப்பாற விடவில்லை - நீ

இதழுடைந்த புன்னகையில்

போர்முரசு கொட்டி

இளக்கிவிட்டாய் மனதை,

பருவ சாக்காட்டில்

பட்டறிவு ஏதுமின்றி

விழுப்புண் பெற்றுவிட்டேன்!

நிலைமை துறந்து

நெடுங்கனவை மறந்தேன்

உன்னினைவின் எச்சம்

கண்களில் கசிய

நின்னை சரணடைந்தேன்

Posted in கவிதை | No Comments