Friday, June 20, 2008

பொழுது போக்கு

"என்னடா? ஓரே யோசனை?"

"ம்!..."

"எதைப் பத்திடா?!.."

"யாரைப் பத்தின்னு கேட்டிருக்கனும்!"

"சரி... யாரைப் பத்தி?!"

"என்னைப் பத்தி!.."

"ஹூம்..என்ன திடிருன்னு?.."

"சும்மா தான்.."

"சும்மா சொல்லுடா.."

"ஒன்னுமில்லை.."

"ஏதோ இருக்கு, நீ தீவிரமா எதைப் பத்தியோ...இல்லை..உன்னைப் பத்தி
யோசிச்சிட்டு இருந்தே!..."

"ம்..பொழுது போக வேணாமா?.."

"எவ்வளவு நேரமா??.."

"ஒரு ரண்டு, மூணு மணி நேரம் இருக்கும்!!..."

"ரொம்ப பெரிய விசயம் போல.."

"அதான் ஒன்னுமில்லைன்னு சொன்னேனே!!..."

"எங்கிட்ட சொல்லக் கூடாதா??.."

"அப்படியெல்லாம் ஒன்னுமில்லை.."

"அப்ப சொல்லு..."

"ஏதாச்சும் நான் சொல்லலைன்னா விட மாட்ட போல இருக்குது.."

"எனக்குப் பொழுது போக வேணாமா?!..."

1 comment:

  1. tried my best to read everything..still couldnt understnd last line :(

    ReplyDelete