ஒரு மாதத்திற்கு முன்பு கால் பிசகியதால் உண்டான வலி! நீண்ட நேர அலுவல் காரணமாக முதுகு வலி! சிறுநீரக கல்லினால் வயிற்றில் உண்டான வலி! இத்தோடு தலைவலியும் உடல் வலியும்!! மொத்தத்தில் என்னை முடக்கிய ஒரு செவ்வாய்கிழமை!!!...
எத்தனை அறிவுரைகள், எத்தனை அன்பு உள்ளங்கள்!!! என்ன உபயோகம்? உதாசினப்படுத்தியதனால் வந்த விளைவா?? ஏன் இந்த வரட்டு பிடிவாதம்?? கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா??
தம்மையும், தன் குடும்பத்தினரையும் பேணுதல் வேண்டித்தான் அனைவரும் வேலைக்கு செல்கிறோம் இல்லையா??. அப்படியென்றால் எனக்கு ஏன் இத்தனை பிரச்சினைகள்? எட்டு மணி நேரம் வேலை என்பது அலுவலக நியதி, அப்படியிருக்க எனக்கு மட்டும் ஏன் அதிக நேரம் எடுக்க வேண்டும்?
1. எனக்கு குறைந்த நேரத்தில் அதிகப்படியான வேலை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்.
2. கொடுக்கப் பட்ட வேலை எனக்கு அறியாதவையாயிருக்க வேண்டும்.
மேற் சொன்ன இரண்டுமே இல்லை. எனக்கு வேலை அத்துப்படி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒப்பேற்றும் அளவுக்குத் தெரியும். பின்ன என்னதான் பிரச்சினை??.
1. திட்டமிடுதல்
2. நுனிப் புல் மேய்வது.
3. அதீத கவனம்.
4. அடி பணிதல்.
என்னிடம் திட்டமிடுதல் இம்மியளவும் கிடையாது என்பதை நான் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வேலையை ஆரம்பிக்கும் முன் எந்த எந்த இடத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும், வேலையை முடிப்பதற்கு உண்டான அனைத்தும் உள்ளனவா?, வேலையின் எந்த பகுதியில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்?, வேலைக்கு உள்ளீடு எது? வெளியீடு எது?, இவ்வாறு அனைத்தையும் தீர்மானித்து விட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். ஒரு கட்டிடத்தை நிர்மாணிக்க திட்டமிடுதல் போல!
தனது குறிப்பேட்டில் ஒவ்வொரு படியையும் எழுதியபின் ஆரம்பிப்பதால் மிக எளிதாக தனது வேலையை தவறாமல் முடிக்க முடிவதாக நண்பனிடம் வினவிய போது தெரிவித்தான்.இந்த இடத்தில் ஒரு தடுமாற்றம் தவறாக திட்டமிட்டு விட்டால்? அடுத்த முறை திருத்திக் கொள்ள வேண்டியதுதான்!! வேறு என்ன செய்ய? திட்டமிடுதலுக்கென்றே நிறைய நூல்கள் உள்ளனவாம். எனக்கு இந்த இடத்திலும் பயம்... கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாகி விடக் கூடாது.... அதனால் படிப்படியாக செல்ல திட்டமிட்டாக வேண்டும்... ஓஹோ திட்டமிடுதல் தொடங்கியாயிற்று!!
சரியாக புரிந்து கொள்ளாதது அல்லது புரிந்து கொண்டதை சரி பார்க்காமல் விடுவது, இவை எல்லாம் என் உடன் பிறந்தவை!... நுனிப் புல் மேய்வதற்கு மிக அருமையான உதாரணங்கள்!!!.. பிரமீடு கட்டச் சொன்னால் முக்கோண வடிவத்தில் ஏதோ கட்டி வைப்பது போல!!!...
தவறு இழைத்து விடக்கூடாது என்னும் அதீத கவனத்தினாலேயே தவறு இழைக்க வாய்ப்பு உண்டு. என்ன தவறு வர வாய்ப்பு உள்ளது என ஆராயாமல், தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்ற குறிக்கோளுடன் மட்டுமே இயங்குவதை உதாரணமாக கூறலாம். அதீத கவனத்தின் விளைவாக என்னுள் அழுத்தம் அதிகரிப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.
என்ன வேலை கொடுத்தாலும் யோசனையின்றி ஒப்புக் கொள்வது என்னிடமுள்ள மிகப் பெரிய நோய்!!!... ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே உழைப்பதாய் முடிவெடுத்தால் இந்த பிரச்சினையைத் தீர்த்து விட முடியும் இல்லையா?? என்ன சம்பள உயர்வு கிடைக்காது. ஏன்? நல்ல புரிதலினாலும் நல்ல திட்டமிடுதலினாலும் அழுத்தமின்றி குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக் கொடுக்கும் போது நமக்கான சம்பள உயர்வு தானாக தேடி வரும் இல்லையா??
-------------------------
என்னப்பா... நேத்தைக்கு லீவு?
உடம்பு சரி இல்லைங்க!!
இப்ப எப்படி இருக்கு?
பரவாயில்லைங்க!!
சரி!... பழைய வேலையில கொஞ்சந்தான பாக்கி இருக்கு?
ஆமாங்க!!
ஒரு புது வேலை வந்திருக்கு... மே பதினைஞ்சுக் குள்ள குடுக்கணும்... ஓகே வா???
ஓகேங்க!!!..
த்தா பாடு... உன்னைய திருத்தவே முடியாதுடா!!! ... நாயீ.... உனக்கு இன்னொரு செவ்வாயோ புதனோ காத்திருக்குடா... அப்படின்னு என் மன சாட்சி திட்டியது உங்க வரைக்கும் கேட்டிருக்கும்னு நான் நினைக்கவே இல்லீங்கோ!!!!..
Wednesday, April 22, 2009
Friday, April 10, 2009
மக்களவை மாநிலங்களவை
சின்ன வயசில படிச்சது... முரளிக்காகவும் இங்கே...
மேலவை கீழவை என்றால் என்ன?
இந்திய பாரளுமன்றம் இரண்டு அவைகளால் ஆனது. ஒன்று மேலவை மற்றொன்று கீழவை. இவை முறையே மாநிலங்களவை மற்றும் மக்களவை என வழங்கப் படுகிறது.
மக்களவை என்றால் என்ன?
மக்களால் பொதுத் தேர்தலில் தேர்ந்தேடுக்கப் படும் உறுப்பினர்களால் ஆன அவை. மொத்தம் ஐநூற்றி ஐம்பத்து இரண்டு உறுப்பினர்களால் ஆன அவை.
இவர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
மக்களவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்?
ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் ஒவ்வொரு உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். நாடு முழுவதும் பல தொகுதிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் இருந்து மக்களவைக்காக ஒருவர் வீதம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
மக்களவை கூட்டத் தொடர் பற்றி?
மக்களவை கூட்டத் தொடர் ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப் படுகிறது. இவை முறையே நிதிநிலை, குளிர்கால, மழைக் கால கூட்டத் தொடர் என்று வழங்கப் படுகிறது.
மாநிலங்களவை என்றால் என்ன?
மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படும் உறுப்பினர்களைக் கொண்ட அவை. இது இருநூற்றி ஐம்பது உறுப்பினர்களைக் கொண்டது.
இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப் படுகின்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்?
ஆறு ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட இப்பதவிக்கு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூர்த்தியாகும்.
அதிகாரம்?
ஒரு சட்டம் இயற்ற வேண்டுமெனில் இரண்டு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். தீர்மானம் நிறைவேற்றுவதில் ஏதேனும் முரண்பாடு ஏற்படும் பொழுது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத் தொடர் கூட்டப் படும். எனினும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை காரணமாக மக்களவைக்கு அதிக அதிகாரம் கிடைக்கிறது.

ஒசியன்’ஸ் தேர்டின்
சென்ற வாரம் இந்த படத்தைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. சாதரணமாக என் நண்பன் ஒரு படத்தினை விமர்சிப்பது என்பது ஒரு வரி பதிலாகத் தான் இருக்கும். ‘ஒரு தடவை பார்க்கலாம்’. இந்த படத்திற்கான வர்ணனை சற்று அதிகமாக இருக்கவே என்னுள் சிறிது எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
வழக்கமான கதை தான்.
தன் குரு ஸ்தானத்தில் இருப்பவரின் சொத்துக்களை ஏமாற்றி பறிக்கும் ஒருவனை பழி வாங்குவது தான் கதை.ஆனால் எப்படி பழிவாங்கப் படுகிறான் என்பதில் தான் ஸ்வாரஸ்யமே அடங்கி உள்ளது.
கதைப் படி வில்லன் பல சூதாட்ட விடுதியின் உரிமையாளர். நமது ஹீரோவின் குருவை ஏமாற்றி பறித்த இடத்திலும் ஒரு சூதாட்ட விடுதி ஒன்றை நிர்ணயிக்க முடிவு செய்து அதற்கான வேலையையும் ஆரம்பிக்கிறான். இதற்கிடையே சொத்தை இழந்த அதிர்ச்சியில் குரு படுத்த படுக்கையாகிறார். விசயம் கேள்விப் பட்டு தனது குழுவுடன் ஊர் திரும்பும் நாயகன் பழி வாங்கும் திட்டத்தைத் தீட்டத் தொடங்குகிறான்.
ஹீரோ ஒவ்வொரு அடியும் மிக கவனமாக மிக நிதானமாக எடுத்து வைப்பது பழிவாங்குதலின் இன்னொரு பரிணாமத்திற்கு நம்மை இட்டு செல்கிறது. அதாவது அவனது சொத்தை பறித்து நடுத் தெருவிற்கு கொண்டு வருவதே அவர்களது நோக்கம் அன்றி அவனை கொல்வது அல்ல.
முக்கியமான காட்சிகளாக, வில்லனுக்கு பைவ் ஸ்டார் விருது கிடைக்க விடாமல் தடுப்பதற்கான திட்டம், தாயம் தயாரிக்கும் இடத்தில் இருந்து மாற்றியமைத்து அதனை பின் தொடர்வது, இப்படியாக படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரமிப்பாகவும், அலுப்பு ஏற்படுத்தாமலும் செல்கிறது.
வில்லனை பழிவாங்க அவனுடைய எதிரியுடன் கை கோர்ப்பதும் , அவன் நாயகனின் குழுவை ஏமாற்ற முற்படும் போது அவனே எதிர்பாரத வகையில் அவனையும் ஏமாற்றும் இடத்தில் ஒரு சபாஷ்.
இறுதியாக இவர்களது முன்னேற்றங்களை அவர்கள் விட்டுச் செல்லும் கடிதங்கள் மூலம் அறிய வரும் குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறது.
இந்த படத்தின் இயக்குநர் ஸ்டீவன் சோடர்பர்க். இவரின் மற்ற படங்களை பார்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஜ்யார்ஜ் கூளுனியின் அலட்டல் இல்லாத நடிப்பு மனதை கவருவதாய் இருக்கிறது.
படத்தை இவ்வாக்கியத்துடன் முடிக்கிறார்கள்.
“See you when I see you”.

Subscribe to:
Posts (Atom)