என் மனது அளவுக்கு அதிகமான மகிழ்ச்சிக்கோ துக்கத்திற்கோ ஆட்படும் பொழுது பெரும்பாலான சமயங்களில் மழையும் என்னுடன் சேர்ந்து கொள்ளும். மழைக்கும் எனக்கும் எப்பொழுது அப்படி ஒரு பந்தம் ஏற்பட்டது என்பதை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு என் நினைவுகள் பசுமையாக இல்லை... எனக்கும் மழைக்குமான சம்பந்தத்தை விட்டு விடுவோம். சென்னைக்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்? என்று கேள்வி எழும் அளவிற்கு விடாது மழை பெய்து கொண்டிருந்த ஒரு காலை வேளையில் இந்த சீர்மிகு சென்னை என் வரவினை அங்கிகரித்து பரந்து விரிந்த தன் மடியில் எனக்கொரு இடம் கொடுத்து மகிழ்ந்தது.
“மகீ..”
“எங்கே இருக்க?”
“கிண்டில இறக்கி விட்டுட்டாங்க...”
“ஆட்டோ பிடிச்சு அசோக் பில்லர் - மாந்தோப்புக் காலனின்னு கேட்டு வந்துடு”
எங்கே போயி எப்படி ஆட்டோ பிடிக்கிறது? இதே நம்ம ஊர்னா நம்ம வீட்டுல இருந்துகிட்டு கைய அசைச்சாலே ஆட்டோ வந்துடும்... ஏமாத்திருவாய்ங்கன்னு வேற சொன்னாய்ங்களே? அப்படியே என் சட்டைப் பையினைத் தொட்டு தடவிப் பார்த்தேன். வெளிப் பாக்கெட்டில் இருநூறு ரூபாயும், உள் பாக்கெட்டில் அம்மா தந்த ஆயிரத்து நானூறு ரூபாயும் இருந்தது. பேண்ட பாக்கெட்டில் சில்லரைக் காசுகள்.. அப்பாவோட ட்ரெயினிங்... ஆங்.. அப்பா.. இப்ப எப்படி இருப்பார்? மருத்துவமனையில் எனக்கும் அவருக்குமான உரையாடல் இன்னும் ஒரு முறை ஓடத் தொடங்கியது.
“மைதீ..”
“......”
“எனக்கு ஒன்னும் ஆகாது.. கவலைப்படாதே.. கிளம்பிப் போ..”
“இல்லை...”
“வேலைதான் முக்கியம்.. கிளம்பிப் போ..”
“ஏற்பாடு பண்றேன்..”
அதுவரை சிறுசிறு வியாதிகளினால் மட்டுமே அவதியுற்ற வரை முதன்முறையாக இதயவலியும் அணுகி தனக்கென தனியிடம் பிடித்துக் கொண்டது. எதையும் தாங்கும் இதயத்திற்கே வலி.. நான் எல்லாம் எம்மாத்திரம்? .. யோசித்துக் கொண்டே நிமிர்ந்த பொழுது என்னுடன் பயணித்த என் ஊர்க்கார இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
“பாஸ்...”
“சொல்லுங்க”
“எனக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு தரமுடியுமா?”
“அதோ .. அங்கே இருக்கே...”
“எனக்கு இங்க இடம் எல்லாம் பழக்கம் இல்லை... எவ்வளவு கொடுக்க வேணும்னு தெரியாது.. மழை வேற விடாம பெய்திட்டிருக்கு..”
“எங்கே போகணும்?”
“பில்லர்- மாந்தோப்புக் காலனி”
“வாங்க...”
அங்கு தேங்கி இருந்த தண்ணிர் குட்டையைத் தாண்டி ஆட்டோ நிற்கும் இடத்திற்கு போவதற்குள் ஒரு சிறு சாகசமே நிகழ்த்த வேண்டி இருந்தது. எல்லாம் என்னுடைய பொதி மூட்டையினால் தான்... பெரிய ...................... மாதிரி வீட்டில் இருந்த எனது உடைகளையும் புத்தகங்களையும் ஒரே பையில் கட்டி தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு இருந்தேன்... சென்னைக்குக் கிளம்பும் முன் எல்லா வண்டிகளும் பில்லர் வழியாகத் தான் செல்லும் என்று உறுதிப் படுத்திக் கொண்டதின் விளைவாகத் தான் அத்தனை பெரிய மூட்டை.. இல்லாவிட்டாலும் அவ்வளவு பெரிதாகத் தான் எடுத்து வந்திருப்பேன்.. அது வேறு விசயம்... அதோ ஆட்டோ வந்தாகி விட்டது.. ஊர்கார இளைஞன் ஆட்டோவை அணுகி...
“பில்லர் போகணும்.”
“ஐம்பது ரூபாய் ஆகும்..”
“இங்க இருக்க பில்லருக்கா?”
“மழை பேஞ்சுகினே இருக்கு... தோ .. பாரு.. தண்ணி எப்டி கொளமாட்டம் கிடக்குதுன்னு..”
“நாப்பதுன்னா ஓ.கே..”
“பாத்து சொல்லு சார்... யாரும் வரமாட்டாங்க...”
“அதெல்லாம் போலாம்...”
எனக்கு இதுபோல் வாடகை பேசி இதற்கு முன் பழக்கமே கிடையாது. ஒரு முறை குதிரை வண்டியில் போகும் பொழுது எனது அத்தை குதிரைக் காரனிடம் பேரம் பேசி சண்டை இட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது. பேசாமல் கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து எனது ஊர்க்கார ரிடம் ஜாடையாக சொல்லி விடலாம் என்று அவரின் முகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.
“கையில வச்சுகிற லக்கேஜீக்கே தனியா சார்ஜ் பண்ணனும்...”
“அது வெறும் துணி தான்... பில்லர் - மாந்தோப்புக் காலனி.. நாப்பது.. இறக்கி விட்டிருங்க...”
என்னிடம் திரும்பிய அந்த இளைஞன் .. “வழக்கமா.. முப்பது தான்.. மழை பேயறதுனால குறைக்க மாட்றான்”
“ரொம்ப நன்றி பாஸு..”
“பார்ப்போம்” என்று சொல்லி முடித்த அடுத்த விநாடிகளில் கிண்டி பேருந்து நிறுத்தத்தில் கரைந்து போயிருந்தான். சாலைகளில் ஆங்காங்கே இருந்த பள்ளங்களில் நிரம்பியிருந்த தண்ணீரை எல்லாம் வெளியேற்றி ஒரு செயற்கை அலையை ஏற்படுத்திய வண்ணம் ஒருவழியாக பில்லரை அடைந்தாகி விட்டது. எனது பொதி மூட்டையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினேன்...
“பாய்...”
“ஹே .. ராஜ்... ” ஒரே ஆச்சரியமாக இருந்தது.
“பஸ்ஸுக்கு ஒன்னும் ஆகலையே...?”
“நம்ம வர்ற பஸ்ஸுக்கு ஏதாவது ஆகுமா என்ன?”
“பாய் .. நீங்க வந்ததுனால தான் கேட்டேன்.. பஸ் ஏதோ ஒரு பக்கம் இறங்கிப் போயிட்டதா கிண்டி பக்கம் பேசிக்கிட்டாங்க...”
“ராஜ்...” செல்லமாக இடுப்பில் குத்தினேன்...
வீட்டிற்குள் நுழைந்தோம்... அது ஒரு எட்டுக்கு எட்டு அடி அறை... இரண்டு ஷெல்புகள்.. அந்த அறையினை ஒட்டினாற் போல் நான்கிற்கு நான்கில் ஒரு கழிவறை... ஒரு கதவு தாழிட்ட நிலையிலேயே இருந்தது....
“ராஜ்.. இந்த கதவை திறங்க .. இதை ஏன் பூட்டி வச்சிருக்கீங்க.. அந்த ரூமையும் பாக்கணும்”
“அதுக்கு ஓனர் சம்மதிக்க மாட்டாரு பாய்”
“ஏன் ராஜ்?”
“ஏன்னா .. அவரு அங்கதான் தங்கி இருக்காரு..”
“ராஜ்.. நான் உருள்றதுக்கே இந்த இடம் பத்தாது...”
“வேற வீடு பாத்துரலாம் பாய்... கொஞ்ச நாளைக்கு நாங்க சுதானமா தூங்கனும் .. இல்லை மகீ..”
“சரி.. கொஞ்ச நேரம் இந்த கட்டைய சாய்க்கிறேன்.. ஒட்றான். .ஓட்றான்.. ஓட்டிக் கிட்டே இருந்தான்... முதுகு வலியே வந்திருச்சு..”
சிறிய அறையாக இருந்தாலும் அது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. உருண்டு கொண்டே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.. பேச்சு சுவாரஸ்யத்தை என் செல்போன் குறுக்கிட்டது..
“சொல்டா ராம்..”
“எங்கேடா இருக்க?”
“பில்லர்.. மகீ ரூம்ல..”
“ஒ.கே. தேனாம்பேட்டை வந்துருடே.. ஹெச் .ஆர் கிட்ட பேசிட்டேன்...”
“தேனாம்பேட்டையா?”
“ஆபிஸுக்கு பக்கத்தில தான்டா.. கிளம்பி வா.. ரூமுக்கு ரெண்டு பேர்.. நம்ம ரூமில.. நீயும நானும் தான்... ஏஸி.. வாட்டர் ஹீட்டர்.. எல்லாம்.. எப்ப வர்ற?”
“இல்ல.. நான் இங்கேயே.. மக்கள் கூட”
“டேய் .. இது ப்ரீ தான்டா.. பதினைந்து நாள்ல நம்ம வேற இடம் பார்க்கணும்.. ஆஃபர்ல போட்டிருக்கேடா...”
“இல்ல...”
“வர்றியா.. இல்லையா?”
“பத்து நிமிஷத்தில கூப்பிடறேன்டா..”
செல்லை ஒரு ஒரமாக வைத்து விட்டு ராஜிடமும் மகீயிடமும் விசயத்தைப் பகர்ந்தேன். அடுத்த சில மணிநேரங்களில் தேனாம்பேட்டை வந்தடைந்தேன். “J.R.C” என்று எழுதி இருந்ததை வாசித்தேன். .. எல்லாவற்றையும் ஒருவாறு செட்டில் செய்து விட்டு வாசலில் இருந்த டீக்கடைக்கு வந்தோம்... மழை தூறிக் கொண்டே இருந்தது...
“பாய்..இனிமே ஒரே என்ஜாய்மென்டதான் போங்க...”
“ஏஸி ஒத்துக்காது ராஜ்..”
“அதில்ல பாய்.. பக்கத்தில தான் S.I.E.T”
“அது என்ன ராஜ்..”
“நடிக்காதீங்க.. பாய்..”
“ராஜ்... எனக்குத் தெரியாது .. சொல்லுங்க..”
சொன்னார்.சிரித்தேன்.
என் செல்போனுக்கு வீட்டிலிருந்து அழைப்பு வர செல்லைக் காதிற்குக் கொடுத்தேன்..
“சொல்லும்மா..”
“வீட்டுக்கு வந்தாச்சுப்பா...”
“என்ன சொன்னாங்க?”
“இருதயம் ரொம்ப பலவீனமாயிடுச்சாம்.. மாத்திரை மருந்து கொடுத்திருக்காங்க...”
“சரி.. கடைக்குப் போக வேணாம்னு..”
“போயாச்சு...”
“அம்மா...” அதிர்ந்தேன்.
“அப்புறமா போன் போடுறேன்...”
என் திடீர் கோபத்தினால் உண்டான வெப்பக் கனலை மழைத்துளிகள் சாந்தமாக்க முயற்சி செய்து கொண்டு இருந்தன...!
Sunday, January 31, 2010
கல்லறைக் காதலன்...!
ஒவ்வொருவரும் தமது மனதில் நிறைய ஆசைகளை வளர்த்துக் கொண்டு இருக்கிறோம்.அதில் எத்தனை ஆசைகள் நிறைவேறுகின்றன? எத்தனை ஆசைகள் நிராகரிக்கப் படுகின்றன? எத்தனை ஆசைகள் முயற்சி செய்யப்பட்டு தோல்வியைத் தழுவுகின்றன? இப்படி கேள்விகள் எழும் போது ஏதோ ஒன்றில் நமது ஆசைகள் வகைப்படுத்தப் படும் இல்லையா? முயற்சி செய்யாமலே ஆசைகள் நிறைவேற்றப் படவேண்டும் என்ற எண்ணத்திறகு என்ன பெயரிடுவது? இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆசைகள் நிறைவேற்றப் படவில்லை என்று புலம்பி தீர்ப்பது முறைதானோ? நடைமுறைக்கு ஒத்து வராத சில ஆசைகள் நிறைவேற்றப் படமாலே செத்து மடிகின்றன. நிறைய பேரின் மனதில் இப்படி பட்ட ஆசைகள் ஒரு சிறு குழந்தை போல் பிறந்து ஒரு மனிதனாய் வளர்ந்து அதனுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டோ செய்யப்படாமலோ முதிர்ச்சி அடைந்து ஒரு கல்லறையில் முடிகின்றன. என் மனதில் நிறைவேற்றப்படாத ஆசைகளின் கல்லறைகள் ஏராளம்.. கடந்து போன தினங்களில் ஒரு நாள் சில மாதங்களுக்கு முன் என் மனதில் தோன்றிய ஆசை ஒன்றிற்கு ஒரு கல்லறை அமைக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது.
இந்த தருணத்தில் நடிகர் ஒருவரின் பேட்டி ஒன்று ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை... .. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற தர்க்கத்திற்கு வரும் போதே... கடவுள் என்ற ஒருவர் இருந்திருக்கிறார் ஆனால் இப்பொழுது இல்லை... கடவுள் இதுவரை இல்லை.. இனிமேல் இருப்பார்... இப்படி ஏதோ ஒன்றை நோக்கித்தான் தர்க்கத்தின் பாதை செல்லும்.. சமீபத்தில் என் மனதில் இப்படித் தான் ஒரு எண்ண அலை ஒடிற்று... அவள் என் மனதில் இருக்கிறாளா? இல்லையா? மிக நீண்ட நேர தர்க்கத்திற்குப் பிறகு என் மனது தன்னுள் அவளுக்கு ஒரு ரத்தின சிம்மாசனமிட்டு அதன் மேல் கொலு வீற்றிருக்கச் செய்திருப்பதை ஒப்புக் கொண்டது... நடைமுறைக்கு ஒத்து வராத ஆசைகளை மனதில் வளர்த்துக் கொள்வதில் எந்த வித பிரயோஜனமும் இல்லை... என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது தான் அந்த ஆசையினை கல்லறைக்கு அனுப்ப வேண்டிய முடிவு தோன்றியது... என் உயிருள்ள உணர்வுகளுக்கு நான் ஒரு உருவம் கொடுத்து என்னுள் உலவ விட்டிருந்தேன்... கடந்த பல மாதங்களாக என்னை முற்றிலுமாக மாற்றி விட்டிருந்தான் அவன்... வாழ்க்கையை இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்பதற்கு உதவினான்... இப்படி எவ்வளவோ!... அப்பேற்பட்டவனை கல்லறைக்கு அனுப்பத் தான் வேண்டுமா என்று என்னுள் ஒரு ஆர்ப்பாட்டமே நடந்து கொண்டு இருந்தது...
கல்லறையினைப் பற்றி யோசிக்கும் பொழுது ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன் நான் பயணப்படுகின்றேன்....
“கடைசியா முகம் பார்க்கணும்னு நினைக்கறவங்க பாத்துக்கோங்க...”. பார்த்தேன். சில விநாடிகளில் மண்ணினால் மூடப்படப் போகும் அந்த சலனமற்ற முகம் என்னிடம் பிரியா விடை கேட்பதாகவே தோன்றியது... தோண்டிப் போடப் பட்டிருந்த மணலை மெதுவாக கைகளினால் தள்ளினேன்... அடுத்த நொடி அங்கே இருந்தவர்களினால் அசுர கதியினில் குழி மூடப்பட்டுக் கொண்டு இருந்தது. “பொறுமையா.. மெதுவா.. “ என்று நான் கத்தியதை யாரும் கேட்பதாயில்லை... அவர்களுக்கு அவர் யாரோ? ஆனால் எனக்கு? அதற்கு முன் பல அடக்கங்களுக்கு உதவி இருந்தாலும் என்னைப் பொறுத்த வரை என் மனதில் நீங்காத கல்லறை நிமடங்கள் அவை.... அது இன்று இடிக்கப்பட்டிருக்கலாம்... அந்த இடத்தில் இன்னொருவர் அடக்கம் செய்யப் பட்டிருக்கலாம்... எனக்குத் தெரியாது... தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை...
அன்று நான் என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையுடன் அவனை உயிருடன் கல்லறையில் இட்டேன்... கடைசியாக அவனைப் பார்க்கும் பொழுது கண்ணீர் விட்டேன்...
“மன்னிச்சிடுடா....”
“இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னை வெளிய விட்டு வையேன்...” கெஞ்சினான்.
“போதும்டா.. உன்னால நான் நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டேன்... நிறைய துன்பங்களையும் பார்த்து விட்டேன்...”
“துன்பம் கொடுக்காம பார்த்துக்கிறேன்.... அவளை உனக்கு நான் ஞாபகப் படுத்தப் போவது இல்லை...”
“உனக்கே வேடிக்கையாக இல்லையா?... உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவளின் ஞாபகம் வந்து விடும் என்பது உனக்குத் தெரியும் தான் இல்லையா?”
“சரி.. உன் விருப்பம்.. சிறுது காலம் மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் ... பின்பு நீயே நினைத்தாலும் என்னை உயிர்ப்பிக்க முடியாது...”
“நானறிவேன்... குட் பை...”
“குட் பை...”
மனதின் ஒரு ஓரத்தில் ஆழக்குழி தோண்டி ஒருவாறு புதைத்து விட்டேன்... இனி அவனின் தொந்தரவு இருக்கப் போவதில்லை.. இனி என் மனதில் அவள் இருக்கிறாளா.. இல்லையா.. என்று தர்க்கம் செய்ய ஒருவன் இல்லை... துக்கம் நிரம்புகிறது... துணைக்கு வரும் நெப்போலியனுடனும் சில காலத்திற்கு முன் தகராறு... சில புத்தகங்களும் தனிமை மட்டுமே துணையாக... முற்பிறவியில் செய்த தீய வினையின் பயன்கள் இன்று என்னை இப்படி வாட்டுகிறதோ.... அவனால் நடப்பட்ட ரோஜா செடிகள் அனைத்தையும் பிடிங்கி எறிந்து விட்டேன்... பிடிங்கிய இடத்தில் இரத்தம் வழிந்து புரையோடி ஒரு தழும்பாக மாறி விட்டிருக்கிறது... வலி மட்டும் எஞ்சி நிற்கிறது...
உயிருள்ள உணர்வுகளை கல்லறையில் புதைத்து விட்டு உயிரற்ற ஜடம் மட்டும் இந்த உலகத்தை சுற்றித் திரிகிறது... தாஜ்மஹாலிற்கும் என் மனதில் கட்டப் பட்ட கல்லறைக்கும் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை... பிற்காலத்தில் திரும்பிப் பார்க்க நேரிடும் தருணத்தில் நிச்சயம் இந்த பசுமைப் பக்கங்கள் நினைவிற்கு வரும் என்பதில் ஐயம் ஒன்றும் இல்லை... இப்பொழுதெல்லாம் அவளைக் காணும் பொழுது மனதில் ஒன்றும் பட்டாம் பூச்சி பறப்பதில்லை... பேசும் பொழுது கால்கள் பூமியில் தான் இருக்கின்றன... என்னுள் மாற்றங்கள் நிகழத் தொடங்கி விட்டன... மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறேன் என்றே நினைக்கிறேன்...
பாதி மீண்டு விட்டேன்... மீதியும் மீண்டு விடுவேன்... திரும்பி வருவேன்.. முழுவதுமாக...!

Saturday, January 30, 2010
கனவுகள் மெய்ப்படல் வேண்டும்...!
கோபத்தின் உச்சியில் இருந்தேன். நான் என்ன தவறு செய்தேன்? என்ன தீங்கிழைத்தேன்? ஏன் இந்த நிராகரிப்பு? கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து உடைத்து விட வேண்டும் என்று தோன்றியது. அலுவலகமாகப் போய் விட்டது... சில விருப்பு வெறுப்புகளை நேரடியாக காட்ட முடியாது...கைகள் கட்டுண்ட நிலையில் என்னுடைய இடத்தில் அமர்ந்து கணிணித் திரையினை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். “நான் என்ன தவறு செய்தேன்?” என்பதைப் போல் திரை என்னைப் பாவமாகப் பார்த்துக் கொண்டு இருந்தது.
“என்னாச்சு?” கேள்வி வந்த திசையில் எனது தோழி நின்றிருந்தாள்.
“ஒன்னுமே தெரியாத மாதிரி தான்” வாய்க்குள் முணுமுணுத்தேன்.
“என்ன சொன்ன?”
“ஒன்னும் இல்லைன்னு சொன்னேன்!”
“கோபமா இருக்கிற மாதிரி தெரிஞ்சது.. அதான் கேட்டேன்!”
“கோபம் தான்!”
“ஏன்? எதனால?”
“எனக்குப் பத்திரிக்கை கொடுக்கலை...”
“மறந்திருக்கலாம்!”
“ஞாபகத்தில் வச்சுக்கிற அளவுக்கு நான் முக்கியமானவன் இல்லை தான்... கூட வேலை செய்கிற ஒருத்தன்னாவது நினைச்சு பத்திரிக்கை கொடுத்திருக்கலாம்ல..”
“ப்ளேஸ்ல நீ இல்லாம இருந்திருக்கலாம்..”
“எனக்கு கோபம் இன்னும் அதிகமாகுது... ப்ளீஸ்.. நான் கொஞ்ச நேரம் கழித்து பேசறேன்”
“சரி”
சற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரத்திற்கெல்லாம் என் நண்பர்களுடன் கல்யாண மஹாலில்...! வழக்கம் போல் தம்பியுடன் உரையாடிக் கொண்டு இருக்கிறேன்
“வர மாட்டீங்கன்னு நினைச்சேன்...”
“பத்திரிக்கை கொடுக்காததை சொல்றியா?”
“இல்லை ... அது வந்து...”
“தம்பி.. இப்ப .. இந்த இடத்துல அந்த பேச்சு வேணாம்...”
சொல்லி விட்டு என் முகத்தைக் கவனிக்கிறேன்... கண்ணாடியுடன் முகம் பளிச்சிட்டது... வெயிட்.. இப்பதான் கண்ணாடி தேவையில்லையே...? மறுபடியும் பார்க்கிறேன்.. இப்பொழுது கண்ணாடியும் தாடியும் மிஸ்ஸிங்... முகூர்த்த நேரம் நெருங்கி வருகிறது... மாப்பிள்ளை பெயர் கூடத் தெரியவில்லை... இதற்குத் தான் பத்திரிக்கை கொடுக்க வேணும்ங்கிறது... :-)யோசித்துக் கொண்டே மணமேடையைப் பார்க்கிறேன்... என்னவள் .. மணப் பெண்ணாய் அமர்ந்திருக்கிறாள்... அந்த பட்டுப் புடவையில் சாட்சாத் அன்னை மஹாலட்சுமியைப் போல் தோற்றமளித்தாள். வெயிட்... என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?. இன்னொருவனை மணக்க இருக்கும் ஒருத்தியை ரசிக்க உன் மனதிற்கு எப்படி தோன்றுகிறது? ஏன் இந்த பித்துக் குளித்தனம்? சரிதான் .. உரிமை இல்லை.. அப்படியே திரும்பி வேறொரு திசையில் பார்வையை செலுத்துகிறேன்...
பட்டு வேட்டி சட்டையுடன் மாப்பிள்ளை, தோழர்கள் சகிதமாக மணமேடையை நோக்கி...மறுபடியும் வெயிட்... எத்தனை தமிழ் சினிமா பார்த்திருக்கிறோம்... மாப்பிள்ளை மணமேடையில் இருக்கும் பொழுது புரோகிதர் “முகூர்த்த நாழி நெருங்கிடுத்து ...பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ...” அப்படின்னு சொல்லுவார் . இங்கே என்ன தலைகீழா நடக்குது?.. புரோகிதர் “மாப்பிள்ளையைக் கூட்டிண்டு வாங்கோன்னு" சொன்னாப் போலத் தெரியலையே... யோசித்த படியே நிமிர்ந்து பார்க்கிறேன்.. மாப்பிள்ளை நடந்து வந்த திசையில் மணப்பெண் தனது தோழியர்களுடன் ... அப்ப மாப்பிள்ளை...? மணமேடையில் .. ஓஹோ... சரி.. பொண்ணைத் தான் பார்க்கக் கூடாது... மாப்பிள்ளையையாவது எப்படி இருக்கார்ன்னு பார்ப்போம்...? ஏன்கிட்ட இல்லாதது அவர்கிட்ட என்ன இருக்குன்னு யார்ட்டயாவது கேட்கனும்;-)... உற்றுப் பார்த்தேன்.. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை... புதிதாகத் திறக்கப் பட்ட ஷாம்பெய்ன் பாட்டில் போல என் மனது மகிழ்ச்சியில் பீறிடத் தொடங்கியது... எல்லோர் முன்னிலையிலும் டான்ஸ் ஆடத் தொடங்கினேன்... வெயிட்... உனக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா... அப்படியே தெரிந்தாலும் இவ்வளவு பெரிய உடம்பை வச்சுக்கிட்டு?.. கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் எனக்குக் குத்துச் சண்டை க்ற்றுக் கொள்ள வேண்டும் என்று சத்தமாக சொல்லிவிட்டு அருகில் இருந்த தம்பியின் தோள்களில் குத்துகிறேன்...
“என்ன சந்தோஷமா...?”
“பின்ன... இருக்கதா?”
“எனக்கு முன்னாடியே தெரியும்...”
“ஏன் சொல்லலை..?”
“சர்ப்ரைஸ்... அதான் பத்திரிக்கை கொடுக்கலை...”
ஓஹோ... அப்படியா.. வெயிட் .. லாஜிக் வலுவா சொதப்புதே.. நம்ம கோடிங் மாதிரி... ஹீம்.. சரி.. பரவாயில்லை.. நல்லாத்தான் இருக்கு... மணப்பெண் மாப்பிள்ளையின் அருகில் அமர வைக்கப் படுகிறாள்... நான் மூன்றாவது வரிசையில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்... “கெட்டி மேளம்... கெட்டி மேளம்...” ஆனால் அங்கு கெட்டிமேளத்திற்கு பதில் ஹிந்தி கஜினி பாடல்... வெயிட்.. “கெட்டிமேளம்...” இல்லை... ஹிந்தி கஜினி பாடல்... கறுப்புக் கண்ணாடியின் பாதுகாப்பில் மூடியிருந்த எனது இமைகளை திறந்தேன்... என்னை எழுப்ப முயன்ற கைப்பேசியை மீண்டும் அரைத் தூக்கத்திற்கு செல்லப் பணித்து விட்ட எனக்கு மீண்டும் தூங்குவதற்கு மனம் வரவில்லை....
என்னை மணக்கோலத்தில் பார்த்த பிறகு எப்படி தூக்கம் வரும்... நான் தான் அந்த கல்யாணத்தில் மாப்பிள்ளையாக வந்தவன்... என்று உங்களுக்குச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை... ;-).... அப்ப பொண்ணு...?
“ஹி...ஹி... நோ.. கமெண்டஸ்...!”

யாருக்கும் தெரியாமல்...!
சென்னை நகரம் விழித்துக் கொண்டு பல மணி நேரம் ஆயிற்று என்பதற்கு அத்தாட்சியாக சாலைகளில் நெருக்கடி மிகுந்து காணப் பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு நீல நிற சான்ட்ரோ கார் திருவான்மீயூரைத் தாண்டி உள்நோக்கித் திரும்பியது. காரினுள் ஆஸ்கார் நாயகனின் இசை அதிர்ந்து கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய கட்டிடத்தின் கார்கள் நிறுத்தும் இடத்தில் தனக்கென ஒரு இடத்தைத் தேடிக் கொண்டு இளைப்பாறத் தொடங்கியது. காருக்கு ஓய்வு கொடுத்து விட்ட மகிழ்ச்சியில் ஒய்யாரமாக இறங்கினாள் அனுசுயா. காரின நிறத்திலேயே சுடிதார், பொட்டு , கம்மல் எல்லாம்... ஒரே நீல நிற மயம்.. இருபது அடி தூரத்தில் இருந்த லிப்டில் புகுந்து கொண்டாள்.
“விச் ஃப்ளோர் மேம்?”
“ஃபோர்த்”
முதல் மூன்று தளங்களிலும் சலிப்பாக நின்று கிளம்பினாலும் நான்காவது தளத்தில் அனுசுயா இறங்கிக் கொண்டதும் மிகவும் கவலையுடன் கிளம்பி மேல் நோக்கி சென்றது. லிப்ட் கதவுக்ளுக்கு நேர் எதிரே இருந்த சுவரில் தங்க நிறத்தில் “ராஜ் கன்ஸ்ட்ரக்ஸன் பிரைவேட் லிமிடெட்” என்று பெரிதாக எழுதப் பட்டிருந்த எழுத்துக்கள் அனுசுயாவை வரவேற்றன. லிப்டில் இருந்து இறங்கிய உடனேயே அந்த கம்பெனியின் ரிசப்ஷன் ஆரம்பித்து இருந்தது. ரிசப்ஷனில் இருந்தவள் தனது உதடுகளுக்கு மட்டும் தனிக் கவனம் செலுத்தி இருந்தாள். அனுசுயா ரிசப்ஷனை நெருங்கினாள்.
“குட் மார்னிங் மேம்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?”
“ஐ வுட் லைக் ட்டூ மீட் யுவர் எம்.டி. மிஸ்டர். ராஜ்”
“ டூ யு ஹேவ் அப்பாயின்மென்ட்?”
“நோ!”
“யுவர் குட் நேம்.. ப்ளீஸ்?”
“அனுசுயா”
“ரீஸன்?”
“பெர்ஷனல்!”
“ப்ளீஸ் பீ ஸீட்டட மேம்... லெட் மீ டாக் டூ ஹிம்”
அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த சோபாவுக்கு தன்னைக் கொடுத்து விட்டு யோசனையில் ஆழ்ந்தாள். தான் செய்து கொண்டு இருப்பது தவறு என்பது அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.இது தான் கடைசி தடவை... இனி இது போல் நடந்து கொள்ள கூடாது... எங்கேயாவது கண் காணாத இடத்திற்கு போய் விட வேண்டும என்று எண்ணிக் கொண்டிருந்த போது
“அனுசுயா மேம்”
“எஸ்”
“எம்.டி இஸ் வெயிட்டிங் பார் யு”
உள்ளே நுழைந்தவளுக்கு ராஜின் அறையை கண்டுபிடிப்பதில் எவ்வித சிரமும் இல்லை. பத்தடி தொலைவிலேயே ராஜை அவளால் காண முடிந்தது. ராஜிற்கு ஏறக்குறைய ஒரு நாற்பது வயது இருக்கலாம் வயதிற்கு ஏற்றாற் போல் அவரது தலையில் வழுக்கை எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருந்தது. ராஜின் அறை குளிரூட்டப் பட்டிருந்தாலும் அனுசுயாவை கண்டதும் வியர்வை மழை பொழியத் தொடங்கியது. மெல்ல கதவைத் தட்டினாள் அனுசுயா.
“மே ஐ கம் இன்?”
“ப்ளீஸ்”
“ராஜ்”
“கடைசியில ஆபிஸுக்கே வந்திட்ட இல்லை... எனஃப் அனு.. என்னால முடியாது..”
“சரி .. நான் அப்போ ஆக வேண்டியதப் பார்க்கிறேன்”
“ப்ளீஸ்”
“கடைசி பேமன்ட்... நோ மோர்.. ப்ளாக் மெயில்”
“எவ்வளவு ?”
“பத்து லட்சம்”
“அமௌன்ட் ரொம்ப அதிகம்... என்கிட்ட இல்லை...”
“அதிகம் தான் .. இல்லைங்கிறது பொய்”
“இல்லை”
“இரண்டு நாளைக்கு முன்னாடி தான் ஒரு பேமன்ட் க்ளியராகி இருக்கு”
“அதெப்படி உனக்கு...?”
“நீ தான் சொன்ன..”
“அமௌன்ட் குறைக்க முடியாதா?”
“விளைவுகளைக் குறைக்க முடியாது...!”
“உன்னோட பழகின பாவத்துக்கு...”
“புண்ணிய்த்தைத் தேடிக்கோன்னு தான் சொல்றேன்”
“எனக்கும் வேற வழியில்லை... எப்போ வேணும்...”
“இங்கே .. இப்போ...”
ராஜ் அதிர்ச்சி அடைந்திருந்ததை அவனின் முகமே காண்பித்து கொடுத்தது.தனது பெரிய மனிதன் வேடத்தைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த அவன் தனது காதுகளுக்கு ரிசிவரைக் கொடுத்து விட்டு டெலிபோனில் எண்களைத் தட்டத் தொடங்கினான். சில நொடிகளில்..
“ராம் ஹியர்..”
“ராம்... ராஜ் ஹியர்.. கேன் யு ப்ரிங் தேட் டென் லாக் ரூப்பிஸ்?”
“ஸுயர் சார்”
ராம் வரும் வரையில் ராஜ் தனது கண்களினாலேயே அனுசுயாவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான். ஆனால் எதற்கும் மசியமாட்டேன் என்ற அடமுடன் அமர்ந்து இருந்தாள் அனுசுயா. ஒரு சூட்கேஸில் பத்து லட்ச ரூபாய் மிக நேர்த்தியாக அடுக்கப் பட்டு ராஜின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது.
“கொடுத்திட்டு எடுத்துக்கோ...!”
இதுவரை அவனை எதை வைத்து மிரட்டி பணம் பறித்துக் கொண்டு இருந்தாளோ அவை எல்லாவற்றையும் தனது கைப்பையில் இருந்து எடுத்து மேசையில் கிடத்தினாள். அவை அனைத்தையும் ராஜ் எடுத்துக் கொள்ள பணம் அனுசுயாவின் கைகளில் ராஜைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.
“குட் டீல் ராஜ்”
“யூ.. யூ...”
“பை ஹனி.. டேக் கேர்...”
“என் பாவம்...”
“உன் கைகளில் இருக்கு...”
சிரித்துக் கொண்டே அனுசுயா வெளியேறினாள். இழந்த பணத்தை நொடிப் பொழுதில் அவனால் சம்பாதிக்க முடியும் என்றாலும் அனுசுயாவின் இந்த அதிரடி நடவடிக்கை அவனை சற்று வில்லனாக யோசிக்க வைத்தது.சற்று கொடூரமாக முடிவு எடுத்தவனாய் தனது கைப்பேசியில் எண்களைத் தட்டத் தொடங்கினான்.
“ஆல்பர்ட்”
“பாஸ்...”
“வேலை ஒன்னு இருக்கு”
“எங்கே... எப்போ..?”
“இப்போ... பளேஸ்... ஈ.சீ.ஆர்.. வண்டி நம்பர்.. டி.என. 07. ஏ1”
“டீல எவ்வளவு?”
“உனக்குத் தேவையானது வண்டிக்குள்ளேயே இருக்கு...மேற்கொண்டு வேணும்னா.. பேசிக்கலாம்..”
“சரிங்க பாஸ்”
அடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் ஒரு செயற்கையான விபத்தில் தனது உயிரைப் பறிகொடுத்து இருந்தாள் அனுசுயா. ராஜின் கைப்பேசி சிணுங்கத் தொடங்கியது.
“வேலை முடிஞ்சிருச்சு”
“யாருக்கும் தெரியாதுல்ல”
“ஒரு ஆக்ஸிடன்ட்... “
“குட்.. பணம்?”
“போதும்..ரொம்ப அதிகம்..”
“யாருக்கும் தெரிய வேண்டாம்...”
“தெரியாது.”
நிம்மதிப் பெருமூச்சுடன் தனது வேலைகளில் மூழ்கத் தொடங்கினான்.
என்னிடம் ஏதாவது வைத்துக் கொண்டால் இப்படித்தான் முடிவு இருக்கும் என்று வில்லத்தனமாக அனுசுயாவின் கைப்பையில் இருந்த போட்டாவில் இருந்து சிரித்துக் கொண்டிருந்தான் ராஜ் ... யாருக்கும் தெரியாமல்....!

Tuesday, January 26, 2010
ஒரு கோப்பை கறுப்பு காபி...!
எனக்கு என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை... இன்று படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே தோன்றவில்லை... காலை மணி பதினொன்றைத் தாண்டி இருக்கலாம்... இதற்கு முன் ஒரு தடவை மருந்து ஊற்றப் பட்டிருந்தாலும் என் கண்கள் மருந்தினைத் தேடின... ஊற்றிக் கொண்டேன்... பசிக்கவில்லை... மாறாக ஒரு கோப்பைத் தேநீரோ இல்லை... காபியோ குடிக்க வேண்டும் போலிருந்தது... கடைக்குச் சென்று பால் வாங்கி வரும் அளவுக்கு சுறுசுறுப்பு என்னிடத்தில் இல்லை... (சோம்பேறின்னு சுருக்கமா சொல்லு சார்...) இன்று கறுப்பு காபிக்கு மாறுவோம் என்று நினைத்தவாறே தயாரிப்பில் இறங்கினேன். நிரம்ப எளிதாகத் தான் இருந்தது. கொதிக்க வைத்த நீரில் அளவுக்கு அதிகமான காபித் தூளையும் சர்க்கரையும் சேர்த்துக் கொண்டு முன்னறைக்கு வந்தேன்.
வாசலில் அழைப்பு மணி என்னை அழைத்தது... ராகைய்யன் நின்று கொண்டு இருந்தார்.
“இந்தா கரண்ட் பில்..”. திறந்து பார்த்தேன்.
“அடுத்த தடவை புது கார்டு போடனும்”
“சரின்னா.. காபி சாப்பிடுங்க... பாலில்லாத காபி...”
“இல்லை .. எனக்கு கீழ்வீட்டில டீ இருக்கும்”. சிரித்தேன். கிளம்பி போனார். கதவை அடைத்து விட்டு நாற்காலிக்கு என்னைக் கொடுத்தேன். எனது ஒரே துணையான தொலைக்காட்சிப் பெட்டியை தூக்கத்தில் இருந்து எழுப்பினேன். படிக்காதவனும் தேவர்மகனும் என்னுடன் சேர்ந்து கொண்டனர்...
சிறு வயதில் இருந்தே எனக்கு டீ, காபியின் மேல் ஒரு அலாதிப் பிரியம்(அப்பாவிடம் இருந்து வந்திருக்கலாம்...). எப்பொழுது என்னை டீ குடிக்க கூப்பிட்டாலும் மரியாதை நிமித்தம் வேண்டிய இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜோதியில் ஐக்கியமாகிவிடுவேன். கடையில் வேலை மிகுந்திருக்கும் காலங்களில் டீ மட்டுமே சாப்பாடாக இருந்திருக்கிறது. வேலை முடிந்த சமயங்களில் என் சக ஊழியர்களுடன் டீ குடித்து நேரத்தைக் கழிப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி.... இப்பொழுது அவர்கள் எல்லாம் எந்த இடத்தில எந்த நிலைமையில் இருக்கிறார்களோ? எனக்கு உண்மையில் தெரியாது. ஆனால் அந்த தேநீர் நிமிடங்களின் பசுமைத் தன்மை என் மனதை விட்டு மறைந்து விடுவதாய் இல்லை...
எத்தனை இடங்களில் விதவிதமான தேநீரில் மூழ்கி இருந்தாலும் பனிக்காலங்களின் அதிகாலை நேரங்களிலும் மழைக் காலங்களின் சாரலிலும் அம்மாவினால் பரிமாறப் படும் அந்த ஒரு கோப்பை தேநீருக்கு இணையாக இன்று வரை எதுவும் இருந்தது இல்லை. ஆவி பறந்து கொண்டு இருக்கும் தேநீருடன் வாசற்படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு மழைச் சாரலை ரசிக்கும் அந்த ஆனந்த நிமிடங்கள்... கையில் இருக்கும் தேநீருக்குத் தான் எத்தனை சுவை...! எங்கிருந்து தான் அதற்கு வருகிறது அத்தனை மணம்...! என்னை மறக்க வைத்த அந்த நிமிடங்கள் மறக்காமல் ஒரு பொக்கிஷமாக என் மனதிற்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கின்றன. பனிக்காலத்தின் அதிகாலை வேளையில் இரவில் போர்த்திக் கொண்ட போர்வையுடன் அதே வாசற்படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு தெருவில் காலையில் பஜனைப் பாடிச் செல்வோரை வேடிக்கை பார்த்துக் கொண்டே தேநீரைப் பருகும் அந்த வேளை... என் வாழ்க்கையின் மிக சுவையான நிமிடங்கள்...
வாசலில் மீண்டும் அழைப்பு.. மீண்டும் ராகைய்யன்... கையில் தேநீருடன்... எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்தோம்... பேச்சு சுவாரஸ்யத்தில் என் கையில் இருந்த கறுப்பு காபி தனது சூட்டினை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்ததை கவனிக்கத் தவறினேன்... அவருடைய கோப்பை காலியாகியது... இடையிடையே படிக்காதவன் குறுக்கிட்டான்.. சில வாக்குறுதிகளைப் பறிமாறிக் கொண்ட பிறகு ராகைய்யன் விடை பெற்றுச் சென்றார். மீண்டும் தனிமையும் தொலைக் காட்சி பெட்டியும் மட்டும் எனக்குத் துணையானது. தனது உயிரை முழுவதுமாக இழந்து விட்டிருந்த மீதமுள்ள கறுப்பு காபியை ஒரே மடக்கில் குடித்து கோப்பையைக் காலி செய்தேன்...
இன்று குடித்த கறுப்பு காபியில் ஏதோ ஒன்று இருப்பதாய் கருதி அதன் சுவையை எனக்குப் பிடித்ததாய் நம்ப வைக்க என் மனம் பிரயத்தனப் படுகிறது. சுவையில் கரைந்து போயிருந்த நான் யோசிப்பதை நிறுத்திவிட்டு ஜன்னல் வழியாக வெளி உலகத்தை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்..பனிக்காலங்களின் அதிகாலைப் பொழுதும், மழைக் காலங்களின் சாரல்களும் மாறி மாறி என்னைக் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றன...அம்மாவின் அன்போடு பரிமாறப் படும் ஒரு கோப்பைத் தேநீரைத் தவிர...!

இரயில்...!
இரயில் நிலையங்களில் எப்போதாவது தனித்து அமர்ந்திருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதா? அதுவும் உடன் வந்தவர் இரயலில் பயணிக்க நாம் மட்டும் தனித்து விடப்பட்டால்? ஏதாவது யோசனை செய்வீர்களா? அப்படியெனில் என்ன யோசனை? கடந்த காலமா? நிகழ்காலமா? எதிர்காலமா? எதைப் பற்றி? சமீபத்தில் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது... பிரியப் போகிறவர் என்னுடன் இருக்கும் பொழுது ... அந்த பிரிவின் நிமிடங்களைப் பற்றி மனம் யோசித்துக் கொண்டு இருந்தது... மனம் - கடந்த காலத்திற்கான ஒரு கல்வெட்டு... கல்வெட்டினை செதுக்க ஆரம்பித்த ஆரம்ப நாட்களுக்கு சில நிமிடங்களில் பயணப்பட்டது...
உங்களில் யாருக்காவது உங்களின் முதல் இரயில் பயணம் பற்றி ஞாபகம் இருக்கிறதா? எனக்கு சுத்தமாக.. இல்லை .. இல்லை... அழுக்காக் கூட நினைவில் இல்லை... ஆனால் மகிழ்ச்சியாக செய்த பயணம் ஒன்று நினைவில் உள்ளது. மதியத்திற்குத் தேவையான உணவு வகைகளை காலையிலேயே அம்மா தயார் செய்து எடுத்துக் கொள்ள... மிகுந்த குதூகலத்துடனும் ஆர்ப்பாட்டத்துடனும் எல்லோரும் சேர்ந்து இரயில் நிலையத்திற்குள் நுழையும் அந்த மகிழ்ச்சியான தருணம் என் மனதிற்குள் இன்னும் பசுமையாகவே உள்ளது...அந்த பயணம் காலையில் ஆரம்பித்து சாயங்காலத்தில் முடிந்து விடும்... மதிய நேரத்தின் பிற்பகுதியில் கடலைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்.. ஆறிப் போன அந்த சோற்று உருண்டையின் சுவை அமுதாக இருக்கும்... மதிய வேளைக்குப் பின் காலியான அந்த இரயில் பெட்டியில் ஓடித் திரிந்ததும் மேலே கீழே தாவி தழுவி... ஜன்னிலின் ஒரத்திற்கு அண்ணனிடம் சண்டையிட்டதும் போனஸாக நினைவுக்கு வருவதைத் தடுக்க இயலவில்லை...
இரயிலை அதிகமாக உபயோகப் படுத்திய கால கட்டம் - முதுகலைப் பட்டப் படிப்பின் போது என்று நினைக்கிறேன். எனது ஊரில் இருந்து ஆறுபத்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எனது கல்லூரிக்கு அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து பேருந்திலும், வீடு திரும்பும் வேளையில் இரயிலிலும் பயணிக்கப் பட வேண்டிய ஒரு இயந்திரத் தனமான வாழ்க்கைக்கு பழக்கப் படுத்திக் கொண்டிருந்த ஒரு கால கட்டம். எனக்கு பேருந்தின் இரைச்சலை விட இரயிலின் தாலாட்டு மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருந்தது. உடல்நிலை சரி இல்லாமல் பிற்காலத்தில் விடுதியிலும் நண்பர்களின் அறைகளிலும் தங்கி படிப்பை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது... இரயில் பயணம் எனக்கு அந்நியமானது...! எனது ஊரின் இரயில்வே மேம்பாலத்தில் இரவு நேரத்தில் அமர்ந்து கொண்டு முறை வைத்து அடித்த தம்முகளும்... துக்க காலத்தில் துணைக்கு வந்த நெப்போலியனும் நினைவுச் சின்னங்களாக இன்றும் உள்ளனர்...
‘மருந்து போட்டு விடவா?” திரும்பத் திரும்ப என் தங்கை கேட்டுக் கொண்டு இருந்திருப்பாள் போலும்...? நிகழ்காலத்திற்கு உடனே பயணிக்க வேண்டிய கட்டாயம்... கையில் கட்டித் திரியும் சுவர் கடிகாரம் இல்லை ஆதலால் பையில் பாதி முழுப்பில் இருக்கும் கைப்பேசியை எடுத்து மணி பார்த்தேன்... கண்ணில் இருந்த பனிமூட்டத்தினால் நேரம் சற்று அலைந்து தெளிவற்று 14:55 எனக் காட்டியது. “கிளம்பும் போது ஊத்திக்கலாம்” மீண்டும் மௌனமானேன். ஆனால் இப்போது மனம் பின்னோக்கி பயணப்பட வில்லை மாறாக திடிரென்று அலை அலையாய் தோன்றிய மக்கள் கூட்டத்தைக் காணத் தொடங்கினேன்...
சிலர் முகத்தில் புன்னகை.. சிலர் முகத்தில் வேதனை.. சிலர் முகத்தில் பயணக் களைப்பு.. நடக்க இயலாத முதியவர்களின் சக்கர நாற்காலிப் பயணம்... சிறு குழந்தைகளின் உற்சாகம்.. இப்படி எல்லா உணர்ச்சிகளும் அந்த இடத்தில் நிறைந்து காணப் படுகிறது..இரயில் எனக்கு மிக சிநேகமாக இருந்தாலும் பல சமயங்களில் எனக்கு வில்லனாக மாறிவிடும். ஒவ்வொரு தடவை நான் எனது ஊரில் இருந்து தனித்துக் கிளம்பும் அந்த நொடிகளில் “இரயில் மட்டும் இன்னைக்கு கொஞ்சம் தாமதமா வந்தால் எப்படி இருக்கும்?” என்று வில்லத்தனமாக யோசித்து முடிக்கும் வேளையில் சரியான நேரத்திற்கு தவறாமல் வந்து நிற்கும் இரயிலை சபிக்காமல் விட்டதில்லை... இரயிலை உற்று நோக்கினேன்... அது இப்போது பயணிகளை பாரமாக சுமக்கும் ஒரு சாதாரண வாகனமாக எனக்குத் தோன்றவில்லை... பலரின் பாசங்களை இணைக்கும் பாலமாக, பிரிவுகளின் தவிர்க்க முடியாத சின்னமாய்.. ஒரு உயிருள்ள மனிதனாய் தோற்றமளித்தது... சோகமானவர்களுக்கு இரயிலின் சப்தம் ஆறுதலாகவும், களைப்பானவர்களுக்கு களைப்பு நீங்க ஒரு தாலாட்டாகவும், மகிழ்ச்சியாய் இருப்பவர்களுக்கு அது ஒரு இசையாகவும் மாறிப் போய்விடுவதாகவே எண்ணுகிறேன்... ஒரு வேளை இரயிலுக்குப் பேசும் சக்தி இருந்தால் அது கூறும் கதைகள் பல யுகங்களுக்கு நீண்டதாய் இருக்குமோ?
“அண்ணா...”. திரும்பினேன். மணி 15:05 என்று காண்பித்து விட்டு அடுத்த நிமிடத்தைக் காட்டும் அவசரத்தில் எண்களுக்கு இடையே இருந்த இரு புள்ளிகள மட்டும் அசுர கதியில் துடித்துக் கொண்டு இருந்தது. இரயலின் உள்ளே சென்று கண்களில் மருந்தை ஊற்றிக் கொண்டு கீழே இறங்கினேன். கண்களில் மருந்தை ஊற்றிய உடன் வரும் கண்ணீர் நேற்றுடன் நின்று விட்டது.வழக்கம் போல் அறிவுரை மழையில் நனையத் தொடங்கினேன். தூரத்தில் விழும் வெயிலை விட அந்த அறிவுரை என்னை சுடத் தொடங்கியது. நிறுத்தினேன். எனது உரையை ஆரம்பித்தேன்... அநேகமாக எனது உரை என் தங்கையுடன் சேர்த்து இரயிலையும் அதிகமாகவே பாதித்து இருக்க வேண்டும்... சிணுங்கிக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தது... சிறு கரங்களின் விரல்கள் அசைவு மட்டும் சில நொடிகளுக்குத் தெரிந்து பின்பு மறையத் தொடங்கியது... என்னைக் கடந்து செல்லும் இரயில் பெட்டிகள் என்னைப் பார்த்துக் கையசைத்துச் சென்றன. கடைசிப் பெட்டி கடக்கும் வரை கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்... கண்களின் பனிமூட்டம் அந்த இரயிலின் பிரிவை எனக்குள் ஒரு சித்திரமாக பதிந்தது. “தங்களின் பயணம் இனிதாக..” அலைப் பெருக்கி தனது வாழ்த்துக்களை சொல்லத் தொடங்கிய தருணத்தில் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்...
ஏனோ தெரியவில்லை... மருந்துகளின் துணை இல்லாமலேயே கண்ணில் இருந்து ஒரு துளி சற்றென்று யாருக்கும் தெரியாமல் வெளியே எட்டிப் பார்த்தது...!

Saturday, January 9, 2010
அவதார்…!
यदा यदा हि धर्मस्य ग्लानिर्बवति भारत।
अब्य्त्तानमधर्मस्य तदात्मानम् सृजाम्यहम्॥
परित्राणाय सादूनाम् विनाशाय च दुश्कृताम् ।
धर्मसम्सापणार्ताय सम्बवामि युगॅ युगॅ॥
எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் அவதரிக்கிறார். அந்த அவதாரம் கொடியவர்களை அழித்து நல்லவர்களைப் பாதுகாக்கிறது. இவ்வாறு புனித கீதை நமக்கு பகர்கிறது. அவதார் படமும் இந்த மையக் கருத்தினை வலியுறுத்திச் செல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.
படத்தின் கதையினை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் இருப்பினும் இங்கேயும் ஒரு தடவை ரொம்ப சுருக்... மனிதர்கள் வேற்று கிரகம் ஒன்றிற்கு பயணித்து அங்கிருக்கும் எரிபொருளுக்காக அக்கிரக வாசிகளுடன் போரிடுகின்றனர். இதயமுடைய மனிதர்களின் சில பேரின் முயற்சியினாலும் உதவியினாலும் பலமே இல்லாத அந்த கிரகவாசிகள் மனிதர்களை வெற்றி கொள்கின்றனர்...
கதை என்று எடுத்துக் கொண்டால் அவ்வளவே...! ஆனால் அதை நமக்குச் சொல்லும் விதம் ... அதிலும் முப்பரிமாணத்தில் திரைப் படத்தைக் காணும் போது அத்துணை அருமையாக உள்ளது. பச்சை பசேல் என அந்த கிரகமே எத்துணை அழகாக இருக்கிறது... வானாளவிய மரங்கள் , அருவிகள்... கொடிய மிருகங்கள்..., ட்ராகன்கள் .. அந்த கிரக வாசிகள்... இயக்குநரின் கற்பனை இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது...
மனிதர்களில் சில பேர் அந்த கிரகவாசிகள் போலவே படிமம் எடுக்கப் பட்ட உடலுக்குள் புகுந்து கொண்டு அவர்களுள் ஒருவராக கலக்க முயற்சிக்கின்றனர். அறிவியல் அசுரத் தனமாக வளர்ந்திருக்கும் எதிர்காலத்தில் இது உண்மையில் சாத்தியமானாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை. நமது கதையின் நாயகன் ஜாக்கும் கிரகவாசிகளுடன் பழகுவதற்கு அனுப்பி வைக்கப் படுகிறார். அதாவது அவர்களுடன் பழகி போரில்லாமல் தங்களது இலக்கை அடைவதற்கான திட்டம்.
முதலில் ஜாக்கை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் பின்னர் அவர்களின் புனிதமான ஈவா அவனை அங்கிகரிப்பதாக தோன்றியதும் தங்களது பழக்க வழக்கங்களைக் கற்று கொடுக்க தீர்மானிக்கின்றனர். அதற்கு அக்கிரக வாசிகளின் தலைவரின் மகள் பணிக்கப் படுகிறாள்... குதிரையேற்றம், மரங்களுக்கு இடையே தாவுதல், வேட்டையாடுதல் முதலிய அனைத்திலும் நமது தலைவர் ஜாக் மிக விரைவாக கற்றுத் தேர்கிறார். கடைசியில் கற்றுக் கொடுத்த தலைவரின் மகளிடமே காதலில் விழுகிறார். “வாட் த ஹெல் யூ ஆர் டூயிங் ஜாக்?” ;-)..
அக்கிரக வாசிகள் ஒவ்வொருவரும் நமது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி போல ட்ராகன்களை வைத்துள்ளனர். ஆனால் ட்ராகன்களைப் பழக்குவது என்பது நாம் தொலைக்காட்சி பெட்டி வாங்குவது போல அத்துணை எளிமை கிடையாது. மிக உயர்ந்த மலை உச்சிக்கு ஜாக்கை அழைத்துச் செல்கின்றனர் அவனுக்கான ட்ராகனைத் தேர்ந்து எடுப்பதற்கு...! இந்த இடத்தில் கிராபிக்ஸில் புகுந்து விளையாடி இருக்கின்றனர்....
“இதில் எக்கச் சக்கமானவை இருக்கின்றனவே.. எதை தேர்ந்தெடுப்பது?”
“எது உன்னைத் தேர்ந்தெடுக்கிறதோ... அதை!”
“எது என்னைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?”
“எது உன்னை கொல்ல வருகிறதோ.. அது தான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்று அர்த்தம்”
“அது சரி...!”
நான் ரசித்து பார்த்த வசனங்களில் மேற்கண்டவையும் ஒன்று...;-).. சரி.. எல்லவற்றையும் கற்றுக் கொண்டாகி விட்டது... தலைவரின் மகளையும் வீழ்த்தியாகி விட்டது.. அடுத்து...? மனிதர்களின் படைக்குத் தளபதியாக வரும் அந்த தருதலை பொறுமை இழந்தவனாகப் படை எடுத்துச் செல்கின்றான்... நமது ஜாக் எவ்வளவோ தடுத்தும்... “நீ என்ன பெரிய ஜட்ஜா.. ” என்று நம்மூர் கவுண்டமனி போல் கேட்டு விட்டு தாக்குதலுக்குச் செல்கிறான்.... அந்த பசுமை வாய்ந்த கிரகத்தை பாழ்படுத்துகிறான்... இதனைக் கண்டு பொறுக்காத மனிதர்களிலே சிலர் நமது ஜாக்கிற்கு உதவி செய்கின்றனர்... மீண்டும் அக்கிரக வாசிகளின் கூட்டத்திலே ஒருவனாக கலந்து மனிதர்களை எதிர்த்துப் போரிடுகின்றான்.
இதில் ஜாக்கிற்கு உதவி செய்த மனிதர்கள் அனைவரும் வீர மரணம் அடைகின்றனர். அந்த பைலட் பெண் இறந்ததில் எனக்கும் சந்துருவுக்கும் சற்று வருத்தம் ;-)... மனிதர்களிடம் இருக்கும் ஆயுதங்களை ஒப்பிடும் பொழுது அக்கிரக வாசிகள் ஏறக்குறைய நிரயுதபாணிகள் என்றே சொல்லி விடலாம்... இருப்பினும் அவர்கள் இறுதியில் மனிதர்களின் போர்வையில் இருக்கும் அந்த எமக் கிரகர்களை வெல்லுவது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.
மனிதனாக வரும் ஜாக்கிற்கு கால்கள் ஊனம்...! முதல் முறையாக அவன் கிரக வாசியாக மாறும் பொழுது தனக்கு கால்கள் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் ஓடித் திரிவது... நெகிழ்ச்சி..! தலைவரின் மகளாக வரும் நமது ஹீரோயினைப் பற்றி சொல்லித் தான் ஆக வேண்டும்... அத்துணை அழகு .. அருமை... நான் நடிப்பை சொல்றேன்பா... வீரம்... சோகம்... எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டு வந்து கொப்பளிக்கிறார்.. உண்மையில் அவளை என்னால் வேற்று கிரகவாசியாக வேற்றுமை படுத்த இயலவில்லை... ஏனோ... படம் முடிந்தும் மிகுதியான நேரம் என் மனதினுள் நிலைத்து இருந்தாள்...!
படத்தின் மற்றொரு ஹீரோ.. அதன் இயக்குநர்... டைட்டானிக் படத்தின் அதே இயக்குநர்தான்.. “நான் இந்த உலகத்திற்கே அரசன்” என்று ஆஸ்கார் மேடையில் டைட்டானிக் ஹீரோவாகவே மாறிய அதே ஜேம்ஸ் கேமரூன் தான்... உண்மையில் மனிதன் ஏகத்திற்கு உழைத்திருக்கிறார்... பொதுவாக வேற்று கிரக வாசிகளை... ஜந்துக்களாகவே காண்பிப்பதற்கு பதில் மனித ரூபத்தில் காண்பித்ததற்காகவே இவருக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்... நினைத்ததை நடத்தி முடிப்பவர்கள் என்று சில பேர்தான் உண்டு... அது அவதார் கதையில் வரும் ஜாக்கிற்கு பொருந்துவதோடு அல்லாமல்... இன்னொருவருக்கும் பொருந்தும்... அவர்.. ஜேம்ஸ் கேமரூன் ...
இன்னும் நிறைய எழுதிக் கொண்டே போகலாம்.... இந்தப் படம்.. சிறுவர்களுக்கும்... சிறுவர்கள் மனநிலையில் உள்ள என் போன்ற வயதானவர்களுக்கும் ;-)... மற்றும் அறிவியல் புனைக் கதைகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்... நிச்சயம் இந்த அவதார் பிடிக்கும் என்பது என் அபிப்ராயம்...!
பி.கு; இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த பொழுது நான் எனது கல்லூரி காலகட்டத்திற்கு திரும்பி விட்டதாகவே தோன்றியது... ஏனென்று தெரியவில்லை... என்னை மறந்து மகிழ்ச்சியாக ஊளையிட்டு கொண்டு இருந்தேன்... இதற்காக மட்டும் ஒரு ஸ்பெஷல் நன்றி... என் தம்பி சிவாவிற்கு ...! ;-)...
Thursday, January 7, 2010
காந்தளூர் வசந்தகுமாரன் கதை...!
வசந்தகுமாரனைத் தெரியுமா? கணேச பட்டரிடம் கேட்டால் “வசந்தகுமாரன் என்னுடைய உற்ற நண்பன்... வீர தீரமிக்க வாலிபன்... என்ன பெண்டீரிடம் மட்டும் எப்பொழுதும் மயங்கிவிடும் ஜன்மம்... எங்கே சென்றாலும் ஏதாவது வம்பை விலைக்கு வாங்கி வந்து விடுவான்... நான் தான் அவனை எப்பாடு பட்டவாது காப்பாற்றி ஆக வேண்டும்” இப்படித்தான் சற்று சலித்துக் கொள்வார்.
சரி நாம் அபிமதியைக் கேட்போம். “என் மனதைக் கொள்ளை கொண்ட கள்வர் அவர்.. எனக்கு விருப்பம் இல்லாத திருமணத்திற்கு எல்லோரும் என்னை உட்படுத்தும் பொழுது என் பேச்சிற்கு இணங்கி தன்னுடன் அழைத்துச் சென்றவர். எனக்கும் அவருக்குமான காதலை எனது பெரிய தந்தை இராஜ ராஜனிடமே எடுத்துக் கூறிய தைரியசாலி... என் மணாளர்.. ” காதல் மயக்கத்தில் இருக்கும் அபிமதியை விட்டு அடுத்ததாக நாம் இராஜ ராஜ சோழனிடம் கேட்போம்.
“அவன் மேல் நிறைய குற்றங்கள் இருந்தாலும் என் உயிரை மூன்று முறை காப்பாற்றியவனாகிறான். நான் சாளூக்கியனுக்கு மட்டும் வாக்குறுதி கொடுக்க வில்லையென்றால் அவனுக்கு என் சகோதரனின் மகளை இக்கணமே திருமணம் முடித்துக் கொடுத்து விடுவேன். இருப்பினும் கணேச பட்டரின் யோசனைப்படி நடந்து கொண்டால் சற்று நன்றாகத் தான் இருக்கும். பெரிய கோவில் கட்டுவதற்கு எல்லாரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் அந்த விசயத்தில் நான் முதலில் கவனம் செலுத்தியாக வேண்டும்... இன்னுமொரு முறை அவனைப் பற்றி நிறைய பேசலாம்”...தலையும் நகர்ந்து செல்கிறார்.
சரி கதையின் ஆசிரியர் என்ன சொல்லுகிறார்?
“வசந்தகுமாரன்.. துடிப்பும் குறும்பும் மிக்க ஒரு இளைஞன்... எல்லா பேரிடமும் எளிதாக வம்பு வளர்ப்பதில் வல்லவன்... பேச்சு சாதுர்யம் கை வந்த கலை... அபிமதியின் மீது தீராத காதல்... விடியும் முன்னே அவனது தலை அவன் உடலில் இருந்து கொய்யப்பட போவதாக இருந்தாலும் பயமின்றி சிலப்பதிகார பாடல்களைப் பாடிக் கொண்டு இருக்கும் பயமற்றவன்... ”
சுஜாதாவினை பாராட்டுவதற்கோ வாழ்த்துவதற்கோ இந்த சிறு பிள்ளைக்கு தகுதி கிடையாது. சோழர்கால பேச்சு மொழியினை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்திய அவரின் எழுத்தாளுமையை என்ன என்று சொல்வது...! ஒரு சிறிய ஒற்றை வரியினை வரலாற்றிலிருந்து எடுத்துக் கொண்டு அதில் தனது கற்பனைப் பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார். வசந்தகுமாரன் தனது குறும்பு தனத்தினால் நிச்சயமாக எல்லோரையும் கவரும் படி செய்திருக்கிறார்.
சரித்திர கதையினில் ஆர்வம் முடையவர்களுக்கு நிச்சயம் இந்த வசந்தகுமாரனின் கதை பிடிக்கும் என்பது என் அபிப்ராயம்.
துந்துபிகள் மீண்டும் முழங்க துந்துபி முழங்கிய வாத்தியக்காரனை வசந்தகுமாரன், “உனக்கு எத்தனை கலம் நெல்?” என்று கேட்க அவன் “எத்தனை கலமாயிருந்தால் உமக்கென்ன?” என்று பதிலளிக்க,
“நான் இன்றிலிருந்து அரசு அதிகாரி” என்றான்.
அவன் பயந்து “இரண்டு பங்கு! இருநூறு கலம்” என்றான்.
புத்தகத்தின் விபரம்;
பெயர்; காந்தளூர் வசந்தகுமாரன் கதை
ஆசிரியர்; சுஜாதா
விலை; ரூ.130
பதிப்பகம்; உயிர்மை.

Monday, January 4, 2010
தேன் மலை - 5
சற்று முன் வரை சப்தம் கேட்டுக் கொண்டு இருந்த அந்த குகையில் ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. குருவினால் திருமலைக்கு உயிர் கொடுக்கக் கூடிய சக்தி இருந்தாலும் திருமலை எடுத்த அவசர முடிவினால் சற்று நிலை தடுமாறித் தான் போனார். அப்பொழுது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அந்த குகை முழுவதும் ஒளி வெள்ளத்தால் நிரம்பியது. அந்த ஒளி வெள்ளத்திலும் குருவின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் படி ஒரு சிறு ஒளி வட்டம் தெரிந்து கொண்டு இருந்தது.
“இந்த லோகத்தை ரட்சிக்கும் ஜகன்மாதாவிற்கு இந்த எளியவனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்” குரு தன் வணக்கங்களை சமர்ப்பித்தார்.
“என் பரம பக்தனுக்கு வேண்டியே இவ்விடம் யாம் எழுந்தருளியுள்ளோம்... ஏன் இவ்வாறு நடந்தது?”
“எல்லாம் அறிந்த பராசக்திக்கு இங்கு நடந்த விசயங்கள் அனைத்தும் தெரியும் என்றாலும், இந்த எளியவனின் வாயினால் தாங்கள் கேட்பதற்கு விரும்புவதால் நான் சொல்கிறேன். திருமலை யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். இரத்த பந்தத்தை விடுத்து அவன் என் தலையாய சீடன் என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள். செயற்கரிய செயல்களை செய்ததனினால் திருமலைக்கு தலை கர்வம் என்னும் தன்னையே அழித்து விடும் ஆபத்து வந்து விட்டது. இதை ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பது என் தலையாய கடமைகளுள் ஒன்றாகும். ஆனால் அவனது உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு நான் எதுவும் கூறிவிடவில்லை... இப்பொழுது தாங்கள் தான் என் சீடனை உயிருடன் எழுப்பி என் சங்கடத்திற்கு முடிவு கட்ட வேண்டும்”
“எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது... போன ஜென்மத்தில் ஒரு முனிவருக்கு இழைத்திட்ட அநீதி காரணமாக திருமலைக்கு விதிக்கப் பட்ட சாபத்தினால் அவ்வாறு நடந்து கொண்டான். எப்பொழுது தனது தவறை உணர்ந்து உயிரைக் கொடுத்தானோ அப்பொழுதே அவனைப் பிடித்த சாபமும் அவனை விட்டு விலகிவிட்டது இல்லையா?”
“தங்களின் சொல்லுக்கு மறு சொல் இந்த எளியவனிடம் ஏது? என் சீடனுக்கு உயிர் கொடுத்து அவனின் ஞானத்தை பன்மடங்கு அதிகரித்து அருள வேண்டும்”
“கலங்க வேண்டாம்.. நான் எப்பொழுதும் என் பக்தனை கை விடுவதில்லை... திருமலை உயிருடன் எழுந்து வா...!”
வெட்டப்பட்டு குகையின் நடுவினில் கிடந்த தலை தானாகவே திருமலையின் உடலைத் தேடி நகரத் தொடங்கியது. திருமலையின் உடலில் சேர்ந்த உடன் அங்கு எதுவுமே நடக்காதது போல எழுந்து அமர்ந்தான். எழுந்த உடன் சூழ்நிலை புரிந்தவனாக
“பராசக்தி...! என் அன்னையே... உன்னை நேரில் கண்டவுடன் எனக்கு என் வாயிலிருந்து பேச்சு வரவில்லை... மன்னித்து அருள வேண்டும். இந்த எளியவனுக்கு உயிர் பிச்சை அளித்திட்ட உங்களுக்கு ....”
“குழந்தாய்...! இனி இது போல் உன் உயிரை நீயே போக்கிக் கொள்ளும் முடிவை எடுக்க மாட்டாய் என்று நம்புகிறேன்”
“இந்த மதியற்றவனின் மூடச் செயலை மன்னித்து அருள் பாலித்திட வேண்டும்”
“நீண்ட ஆயுளைப் பெற்று நலமுடன் வாழ்வாயாக திருமலை...!”
அந்த குகையில் முன்பு இருந்தது போல் குருவின் ஒளிவட்டம் மட்டும் மிதமாகி இருந்தது.
“குருவே.. இச்சிறுவனின் பிழையைப் பொறுத்து அருள வேண்டுகிறேன்”
“திருமலை.. உன் பிறப்பின் ரகசியம் உனக்குத் தெரியாது. உனக்குத் தெரியவும் வேண்டாம்... ஆனால் இப்படி எடுத்ததற்கு எல்லாம் சாவை நாடினால் இப்பிறப்பின் பலன் தான் என்ன? நீ ஒன்றும் கவரிமானின் இனமல்ல என்பதை அறியாயோ?”
“மன்னிக்க வேண்டும் குருவே!... என் தவறுக்கு நானே தண்டனைகொடுத்து விடலாம் என்று கருதி...”
“இனியாவது...?”
“என் தவறை உணர்ந்து விட்டேன் குருநாதரே... இனிமேல் அந்த தவறை நான் திரும்ப செய்வதாயில்லை...”
“நன்று...!”
“நான் வந்த காரியம்...”
“அறிவோம் ... ! திருமலை”
“என்ன செய்வதென்றே இந்த சிற்றறிவுக்கு எட்டவில்லை குருதேவா...!”
“நீ தேன் மலைக்குச் செல்ல வேண்டும்...! அங்கு உனக்கு மிகப் பெரிய ஆபத்துக்கள் வரிசையில் காத்திருக்கும்..”
“ஆபத்துக்களில் இருந்து தப்பித்து வெற்றிப் பெற தங்களின் ஆசிர் எப்பொழுதும் போல் வேண்டும்...”
“வெற்றியுடன் திரும்பி வா... நீ அழிக்க வேண்டியவனை எப்படி அழிக்க வேண்டும் என்பது இந்த ஓலைச் சுவடியில் உள்ளது” என்று கூறிய குருவிடம் இருந்து திருமலை ஓலைச் சுவடிகளைப் பெற்றுக் கொண்டான்.
“குருதேவா.. இதை...”
“புரிகிறது திருமலை... அதில் சொல்லப் பட்டிருக்கும் அனைத்தும் உன்னிடம் ஏற்கனவே உள்ளது... மேலும் நீ தண்ணீர் மலையை நெருங்கும் போது தான் இந்த சுவடியைப் பிரிக்க வேண்டும்”
“மிக்க நன்றி...! குருதேவா...!”
“சென்று வா.. திருமலை.. இந்த எளியவனின் குடில் எப்பொழுதும் உனது வருகைக்காக காத்திருக்கும்.”
“நான் வெற்றியுடன் திரும்பி வரும் வழியில் உங்களை தரிசிக்க வருவேன்... இப்பொழுது தங்களிடம் இருந்து பிரியா விடை பெறுகிறேன்...” மீண்டும் தரையில் விழுந்து வணங்கி விட்டு குகையை விட்டு வெளியே வந்தான் திருமலை.
வரும் பொழுது வந்த பறக்கும் பாய் திருமலை திரும்பும் பொழுது அப்படியே தடுப்பு அரணாகவே இருந்தது. தொலைதூரத்தில் இருந்து ஒரு மனிதனின் உயரம் கொண்ட ஒரு பருந்து திருமலையை நோக்கி பறந்து வந்தது. இருபக்கங்களிலும் கருமேகங்கள் சூழ்ந்து கொள்ள அந்த பருந்தின் இறக்கைகள் மேகங்களைக் கிழித்துக் கொண்டு முன்னேறி வந்தது. திருமலையின் மிக அருகில் வந்து இறங்கி நின்றது.
“நீ என் மீது பயணிக்குமாறு உனக்கு உத்தரவு திருமலை...! என் பெயர் கருடராஜன்...”
“மிக்க நன்றி...! கருடராஜனே...” நன்றி சொல்லிய திருமலை கருடனின் மேல் ஏறிக் கொள்ள அது மறுபடியும் காற்றைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது. நேராக குடிலின் வாயிலில் வந்து இறங்கிக் கொண்டான் திருமலை.
“திருமலை... பிற்காலத்தில் என் உதவி உனக்கு நிச்சயம் தேவைப்படும்... அப்பொழுது என்னை நினைத்தாலே போதும் உன் முன் தோன்றிடுவேன்.. இப்பொழுது உன்னிடம் இருந்து விடை பெறுகிறேன்....” என்று சொல்லிய கருடராஜன் மேலெழும்பியது.
குடிலுக்குள் நுழைந்த திருமலைக்கு ஆச்சர்யம் காத்திருந்தது...!

Sunday, January 3, 2010
வானவில்லின் நிறம் கறுப்பு - 1
ஞாயிற்றுக் கிழமை காலை 7;07 மணி;
ராமின் கண்ணீர் மழையுடன் வானமும் சேர்ந்து கொள்ள பீச்சிலிருந்த ஒரு கோயிலின் உட்புறமாக தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டான். கோயில் மிகச் சிறிதாக இருந்ததால் அவனைத் தேடிச் சென்று நனைத்தது. மெலிதான குளிர் அந்த மழைச் சாரல் இரண்டும் சேர்ந்து ராமிற்கு சில பழைய சம்பவங்களை மனதிற்கு முன் கொண்டு வந்து நிறுத்தியது.
தனது நினைவலைகளில் ஒரு டைரி போல் எழுதி வைக்கப்பட்டிருந்த அவனின் வாழ்க்கை சம்பவங்கள் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.
ஜனவரி 19, 2009; மதியம் மணி 2;33;
அந்தரத்தில் மிதக்கின்றேன்
ஆனந்தத்தில் திளைக்கிறேன்
பறவையாகி பறக்கின்றேன்
யுகங்களைக் கடக்கின்றேன்...!
பெண்ணே
என்னை மனிதனாக மாறவிடு
உன்னை அடைந்திடவே...!
தனது அலுவலகத்தில் ட்ரெயினங் ரூமில் எல்லாரும் ஆர்வமாக அல்லது போலி ஆர்வமாக பாடங்களை கவனித்துக் கொண்டு இருக்கும் பொழுது, ராம் தன்னுடைய குறிப்பேட்டில் மேற்கண்டவைகளை எழுதிக் கொண்டு இருந்தான்.
அப்பொழுது தான் ஜானகியை முதன் முதலாகப் பார்த்தான். இந்த காலத்தில் பார்த்தவுடன் மனதை பறிகொடுத்து விடுவது என்பது இருமல் தும்மல் போல் அனிச்சை செயல் ஆகிவிட்டது. ராமின் தோற்றம் மிகச் சாதாரணமாக இருக்கும். பெண்களின் பார்வை அவன் மேல் படுவது என்பது குறிஞ்சி பூ பூப்பது போல் தான்... எப்பொழுதாவது ஏதாவது ஒரு பெண் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதையாவது பார்க்கப் போய் ஏதேச்சையாக ராமின் மேல் அந்த பார்வை விழுந்திருக்கும். திரும்பி பார்க்கும் அளவுக்கு ராமிடம் ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டும். சாஃப்ட்வேர் இஞ்சினியருக்கே உரித்தான சற்று வெளியே தெரியும் அளவிற்கு தொப்பை... இத்யாதி .. இத்யாதி..
அன்றும் அப்படித்தான் .. அமருவதற்கு இடம் தேடிக் கொண்டு வந்த ஜானகி.. ஏதேச்சையாக ராமைப் பார்த்து விட.. கவிதை எழுத ஆரம்பித்து விட்டான்.
ஜானகி ... யாரையும் ஒரு முறையாவது திரும்பிப் பார்க்கச் செய்யும் அழகு. கார் வண்ண கூந்தல் அவள் இடை வரை நீண்டு இருக்கும். தலை நிறைய பூ எப்பொழுதும் அலங்கரித்துக் கொண்டு இருக்கும்... சத்தியமாக ராமும் ஜானகியும் பக்கத்தில் நின்றால் அனைவரும் “உச்” கொட்டி ஜானகிக்கு தங்கள் வருத்தத்தை தெரிவிப்பார்கள்...!
ஜானகியைப் பார்த்த அந்த நிமிடம் ராம் புதிதாய் பிறந்தவனைப் போல உணர்ந்தான். பாடங்களைக் கவனிக்கவில்லை... இல்லாவிட்டாலும் அவன் கவனிக்கப் போவதில்லை.. சரித்திரத்தில் அவன் பாடங்களை கவனித்ததாக அவனுக்கு நினைவில் இல்லை...! தனக்கு முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஜானகியையே உற்று நோக்கிக் கொண்டு இருந்தான் மற்றவர்கள் யாரும் பார்க்காத வண்ணம்...!
பாடம் எடுத்தவரை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்துக் கொண்டு இருந்தாள் ஜானகி...! காரணமே இல்லாமல் ராம் புன்னகைத்துக் கொண்டு இருந்தான். அவள் தன்னுடையவள் ஆகி விட்டாள் என்று மனதிற்குள் கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டான். “என் ஆள் கேட்கறதுக்கு பதில் சொல்டா... கொய்யால...” என்று தனக்கு மட்டும் கேட்கும் படியாக சொல்லிக் கொண்டான்.
எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது என்று ராம் யோசிக்கத் தொடங்கினான். அவனுடைய வேலைகள் எல்லாம் தேங்கத் தொடங்கின. எப்பொழுதும் ஜானகியின் நினைவாகவே சுற்ற ஆரம்பித்தான்.
என் உயிரை எடுத்துச் சென்று விட்டாய்
உடலை மட்டும் ஏன் விட்டு விட்டாய்?
.....
அடுத்து வந்த தினங்களில் ராமிற்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை... கவிதைகள் என்ற பெயரில் நிறைய காகிதங்களுக்கு மரண தண்டனை அளித்துக் கொண்டு இருந்தான்.
“என் பேரு ஜானகி...!”
“தெரியும்...! என்ன விசயம்?”
“இந்த ப்ராஜெக்ட்ல நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ண போறாத சொன்னாங்க...”
“அப்படியா.. . எனக்குத் தெரியாதே”... பேசிக் கொண்டு இருக்கும் போதே ராம் காற்றில் பறக்க ஆரம்பித்தான்.
வானத்தை வளைத்து வானவில் ஆக்கிடுவேன்
மணலையும் திரித்து கயிறாக்கிடுவேன்
எத்தகையோரையும் எதிர்த்திடுவேன்
என் அருகில் நீ இருந்தால்...!
ஜானகி அங்கிருந்து நகர்ந்தவுடன் தனது குறிப்பேட்டில் மேற்கண்டவைகளைப் பதிவு செய்தான்...! இதெல்லாம் அந்த ஜானகிக்குத் தெரியுமா?
-தொடரும்...!

Saturday, January 2, 2010
வானவில்லின் நிறம் கறுப்பு
அது ஒரு அழகிய மழைக்காலம்! சென்னை நகரம் வழக்கத்திற்கு மாறாக தன் அழகால் எல்லோரையும் வசியப் படுத்திக் கொண்டு இருந்தது. ஆதவனும் எப்பொழுதாவது வந்து தலைகாட்டி விட்டு மக்களுக்கு தான் இருப்பதை உணர்த்திக் கொண்டு இருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை காலை 6;30 மணி ;-
கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அதிகமாக இருந்தது. அலைகளினால் ஏற்படும் இரைச்சல் தொலைதூரத்தில் இருப்பவருக்கும் மிக துல்லியமாக கேட்டுக் கொண்டு இருந்தது. புயல் காற்று போல் அவ்வப்போது காற்று கடற்கரையில் வீசி ஒரு சுழலை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது. மேகம் இப்பவோ இன்னும் சற்று நேரத்திலோ மழையைப் பொழிந்து விடும் என்று சொல்லும் அளவுக்கு தன் மீது கறுப்பு வர்ணத்தை முழுவதுமாக பூசி இருந்தது. படகுகள் எல்லாம் புயல் சின்னத்தை கண்டு பயந்து கரையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தன.
ஒரு நீல நிறப் படகின் பக்கவாட்டுப் பகுதியை ஒட்டிய மணல் பரப்பில் சோகமே உருவாக ஜானகி அமர்ந்திருந்தாள். தூக்கமில்லாத காரணத்தினால் கண்கள் சிவந்து காணப்பட்டது. நொடிக்கொரு முறை திரும்பி திரும்பி யாருடைய வரவையோ எதிர்நோக்கி பார்த்துக் கொண்டு இருந்தாள். தனது கைகளில் இருந்த செல் போனை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்தாள்.நேரம் சென்று கொண்டே இருந்தது. பொறுமை இழந்தவளாய் தனது செல்போனை எடுத்து ஏற்கனவே கால்டு லிஸ்டில் இருந்த ராமிற்கு கால் செய்யத் தொடங்கினாள்.
“ராம்...!”
“சொல்லு ஜானகி...!”
“எப்பதான் வருவ?”
“கிளம்பிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவேன்”
“நான் மட்டும் தனியா இங்கே இருக்கேன்டா.. மேட்டர் அர்ஜென்ட்...”
“போன்ல சொல்லக் கூடாத அளவுக்கு அப்படி என்ன அர்ஜென்ட்?”
“நேர்ல வாயேன்டா ராம்...”
“பத்து நிமிஷம்..”
அந்த பத்து நிமிடங்களும் அவளுக்கு ஒரு யுகமாய் கரைந்து கொண்டு இருந்தது. திடீரென அவளின் செல்போன் சிணுங்கத் தொடங்க பயத்தின் உச்சத்திற்குச் சென்றவளாய் நம்பரை பார்த்தாள்... வீட்டிலிருந்து...
“ஹலோ...”
“எங்கே இருக்க....?”
“அப்பா.. பீச்ல இருக்கேன்பா...”
“காலையில என்னம்மா.. பீச் வேண்டி கிடக்குது... தயாராக வேண்டாமா? சொல்லிட்டாவது போலாம்ல..”
“இல்லப்பா... எல்லாரும் தூங்கிட்டு இருந்தீங்க .. அதான்.. சும்மா.. பீச்ல காத்து வாங்கிட்டு .. அரை மணி நேரத்துல வந்துர்றேன்பா...”
“சீக்கரம் வந்துடும்மா...”
திரும்பி பார்ப்பதற்கும் ராம் அவளை நெருங்குவதற்கும் மிகச் சரியாக இருந்தது. ராமைப் பார்த்தாளோ இல்லையோ கண்களில் இருந்து கண்ணீர் திறந்து விட்ட குழாயில் இருந்து வரும் தண்ணீர் போல பொல பொல ன்னு வர ஆரம்பித்தது. ராமிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
“அழாதே...! அதான் வந்துட்டேன்ல..”
“இங்க மட்டும் வந்து என்ன பிரயோஜனம்..?”
“என்ன ஆச்சுன்னு சொல்லும்மா..”
“நான் தான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்ல..”
“என்ன?”
“மறந்தாச்சா... அதுக்குள்ளே?”
“ஓ... உங்கப்பாவுக்கு ட்ரான்ஸ்பர் அதான..”
“உன் மண்டை.. அதுதான் இப்போ இல்லைன்னு சொல்லிட்டாங்கள்ள...”
“வேற என்னடா செல்லம்... ஞாபகம் இல்லைடா...”
“உனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்.. இன்னைக்கு என்னைய பொண்ணு பார்க்க வீட்டுக்கு வர்றாங்கடா... மாப்பிள்ளை பிஸினஸ் மேன் ... நான் என்ன செய்யட்டும்?”
“என்ன செய்யட்டும் அப்படின்னு கேட்கிறதுல இருந்தே உனக்கு இந்த சம்பந்தத்தில விருப்பம் இருக்குன்னு தோனுது...!”
ஜானகியின் கண்கள் முன்பை விட அதிக கண்ணீரை சிந்தியது. அழும் ஓசையும் இப்பொழுது சேர்ந்து கொண்டது. இருப்பினும் கடலின் அலை ஒசை அவளின் அழகை ஒசையை யாருக்கும் கேட்காதவாறு பார்த்துக் கொண்டது. “இந்த பெண்களுக்கு மட்டும் எப்படித்தான் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறதோ? எங்கே தான் ஸ்டாக் வைச்சிருப்பாங்க” என்று பிரச்சினையை விட்டு விட்டு யோசித்துக் கொண்டு இருந்தான் ராம்...
“அப்படில்லாம் சொல்லாதடா ராம்... இந்த ஜென்மத்தில கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உன் கூடதான்... இப்போ தப்பிக்குறதுக்கு ஒரு வழி சொல்லுடான்னா...”
“மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொல்லிடேன்...”
“காரணம் கேட்பாங்களேடா... என்னன்னு சொல்றது?”
“கஷ்டம் தான்... என்ன பண்றது?”
இருவரும் அமைதியாக இருந்தனர். கடல் அலைகள் அவர்களின் அமைதியை உடைக்க படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தது. பதினைந்து நிமிடம் கழித்து பொறுமை இழந்தவளாய்...
“ஏதாவது பண்ணு ... ராம்... இல்லாட்டி சொர்க்கத்துல சந்திப்போம்...” சொல்லிவிட்டு விருட்டென்று கிளம்பினாள்.
“இரும்மா... நான் ஏதாவது யோசிக்கிறேன்..” ராம் சொல்லி முடிப்பதற்குள் ஜானகி இருபது அடிகளைத் தாண்டி இருந்தாள்.
ஜானகி போவதையே பார்த்துக் கொண்டு இருந்தான் ராம்.... கருமேகங்கள் முன்னைவிட கறுமை நிறத்தை தன் மேல் பூசிக் கொண்டது... ஆனால் மழை மட்டும் ராமின் கண்களில்...!
தொடரும்...!

தேன் மலை - 4
மூவரும் கடற்கரையினை அடைந்தனர். கடற்கரையிலிருந்து சற்று தொலைவிலேயே மரங்கள் அடர்ந்து காணப் பட்டன. அந்த கடற்கரை ஒரு அழகிய தீவினைப் போல் காட்சி அளித்தது. படகினை அதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் இழுத்துக் கட்டிவிட்டு மூன்று பேரும் தீர்த்தமலையினை நோக்கி நடக்கத் தொடங்கினர்.
“அதோ .. அங்கு தெரிகிறதே ஒரு குடில் அங்கு நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும்” என்று கூறிய திருமலை சற்று தொலைவில் தெரிந்த ஒரு அழகான குடிலை காண்பித்தான். குடிலைச் சுற்றிலும் அழகான தோட்டம் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்தன. சுவையான பழங்கள் யாவும் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன. அழகான புள்ளி மான்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நின்று கொண்டு இருந்தன. முயல்கள், மயில்கள் என்று ஒரே பறவைகளின் கூட்டம் அங்கே வீற்றிருந்தன. ஒரு தெளிந்த நீரோடை அருகிலேயே ஓடிக் கொண்டு இருந்தது. அதன் இரு மருங்கிலும் உயர்ந்து வளர்ந்த ஆலமரங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது . இது அனைத்தையும் முதல் முறையாக காணும் நந்தகுமாரனும் குணசேகரனும் ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்று விட்டனர்.
“அடேயப்பா...! என்ன ஒரு அழகான இடம்... பூலோகத்தில் சொர்க்கம் என்பது இது தானோ?” நந்தகுமாரன் வியப்புடன் குணசேகரனை நோக்கினான்.
“ஆமாம்.. நந்து.. மிகச் சிறப்பான இடம்.. மனதிற்கு ரம்யமாக இருக்கிறது... எத்துனை நாட்கள் வேண்டுமானாலும் நாம் இங்கே இருந்து விடலாம் போலுள்ளது” என்றான் குணசேகரன்.
அப்படியே பேசியவாறும் இயற்கை அழகை வியந்தவாறும் அந்த குடிலை அடைந்தனர். குடிலிலிருந்து மிக அருமையாக சமையலின் வாசனை மூவரின் மூக்கைத் துளைத்தது.
“சமையல் வாசனை வருகிறதே?” நந்து வினவினான்.
“இங்கு வருகிறவர்களை கவனித்துக் கொள்வதற்காக ஒரு வயதான மூதாட்டி இருக்கிறாள்.. அவளுடன் அவளின் மகளும் உதவிக்கு இருக்கிறாள்... இன்று நல்ல சமையல் போல தெரிகிறது” திருமலை சொல்லிக் கொண்டே வாயிற் கதவை தட்டினான்.
மூதாட்டியின் மகள் கதவை திறந்தவாறே “அம்மா... யார் வந்து இருக்கிறார்கள் பாரேன்... திருமலை அண்ணன் ... இவர்களெல்லாம் யார் அண்ணா?”
“இவர்கள் இருவரும் என் நண்பர்கள்.. இவன் நந்து, அவன் குணா, நான் குருவை தரிசித்து வரும் வரை இவர்கள் இருவரும் இங்கே தங்கி இருப்பார்கள்... இவர்களுக்குத் தேவையான வசதிகளை நீங்கள் இருவரும் செய்து கொடுக்க வேண்டும்” திருமலை சொல்லிக் கொண்டே போக உள்ளே இருந்து மூதாட்டியின் குரல் கேட்கத் தொடங்கியது.
“திருமலை.. பார்த்து எவ்வளவு நாளாயிற்று? நாங்கள் எல்லாம் உயிருடன் தான் இருக்கிறோம் என்ற நினைவாவது உன்னிடத்தில் இருக்கின்றதா?” மூதாட்டி பேசிக் கொண்டே போக திருமலை புன்னகையை பதிலாகக் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
“அம்மா... என் பணியின் காரணமாகத் தான் இவ்வளவு நாளாக இங்கு வர இயலவில்லை... உங்கள் மேல் எனக்கு எப்பொழுதுமே தீராத அன்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது... தவறாக நினைக்க வேண்டாம்... இப்பொழுது கூட ஒரு பணி விசயமாகத் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்... குருவை சந்தித்து ஆசிர் பெற வந்திருக்கிறேன் அம்மா... தங்களின் ஆசியும் வேண்டும்” என்று திருமலை பதில் அளிக்க நந்துவும் குணாவும் சமையல் அறையை நோட்டமிட்டுக் கொண்டு இருந்தனர்.
“வெளியில் ஓடும் நீரோடையில் குளித்து முடித்து விட்டு வாருங்கள் குழந்தைகளே... உங்களுக்கு என்னால் இயன்ற அளவு சுவையான உணவைத் தயாரித்துத் தருகிறேன்” மூதாட்டி மூவரையும் நோக்கிக் கூறினாள்.
அப்பொழுது ஒரு ஆள் உயரமுள்ள ஒரு குச்சி காற்றில் கிடைமட்டமாக பறந்து வந்து திருமலையின் கால்களை மெதுவாக இடித்தது. அதனைக் கவனித்த திருமலை “எனக்கு குருவிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது... நான் தரிசித்து விட்டு மிக விரைவில் திரும்பி வந்து விடுவேன்” சொல்லிவிட்டு மற்றவர்களின் பதிலுக்குக் கூட காத்திராமல் குடிலை விட்டு வெளியே வந்தான்.
அந்த குச்சியும் திருமலையுடன் சேர்ந்து வெளியே வந்தது. திருமலை கிழக்கு நோக்கி கை எடுத்து கும்பிட்டு விட்டு அந்த குச்சியைத் தொட அது கிடைமட்டமாக ஒரு பாயைப் போல் விரியத் தொடங்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் அது ஒரு பறக்கும் பாயாக மாறி இருந்தது. திருமலை அதன் மேல் ஏறி அமர்ந்து கொண்டவுடன் மேல் நோக்கி பறக்கத் தொடங்கியது. திருமலை பறந்து செல்வதை நந்துவும் குணாவும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
சிறிது நேரப் பயணத்தில் திருமலை தீர்த்த மலையின் உச்சியை அடைந்தான். பறக்கும் பாய் மிகவும் நேர்த்தியான முறையில் ஒரு குகையின் வாயிலில் சென்று தரை இறங்கியது. திருமலை பறக்கும் பாயில் இருந்து இறங்கி கிழக்கு நோக்கி மறுபடியும் கை எடுத்து கும்பிட பறக்கும் பாய் மீண்டும் ஒரு குச்சியாக சுருண்டது. அந்த குகையின் வாயிலில் தடுப்பைப் போல் அந்த குச்சி தன்னை மாற்றிக் கொண்டது. குகையின் வாயிலில் அழகான நீர்த்தொட்டி ஒன்று இருந்தது. அதில் அழகிய வண்ண மீன்கள் நீந்திக் கொண்டு இருந்தன. அதனை கண் கொட்டாமல் பார்த்த திருமலை தனது உடைவாள் முதலியவற்றை எல்லாம் களைந்து அதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்தான். பிறகு அந்த நீர்த்தொட்டியில் இருந்து சிறிது குளிர் நீரை எடுத்து முகம் கை கால்கள் முதலானவற்றை கழுவினான். அவனின் களைப்பு சற்று நீங்கியது போல் அவனுக்குத் தோன்றியது.
அந்த குகையின் உள்நோக்கி நடக்க ஆரம்பித்த உடன் சற்றென்று ஒரு அழகிய பணிப்பெண் தனது கரங்களில் சுவையான பழரசங்களுடன் திருமலையின் முன் தோன்றினாள். .நல்ல பசியில் இருந்த திருமலை தனக்கு விருப்பமான பழரசங்களை ஆசை தீர குடித்து இளைப்பாறினான். சற்று நேரத்தில் அந்த பணிப்பெண் வந்த சுவடே இல்லாமல் மறைந்து போக குகையின் மையப் பகுதிக்கு திருமலை வந்து சேர்ந்தான்.. அங்கே குகையின் நடுவினிலே ஒரு ஒளிவட்டம் மட்டுமே தெரிந்தது.திருமலை அந்த ஒளி வட்டத்தின் முன் கிடைமட்டமாக படுத்து வணங்கினான்.
“என் உயிரின் மேலான குருவிற்கு இந்த அடியேனின் பணிவான கோடி வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்”
“நீண்ட ஆயுளைப் பெறுவாயாக.. திருமலை” ஒளிவட்டம் ஆசிர்வதிக்கவும் திருமலை பணிவுடன் எழுந்து நின்றான்.
“என்னையும் நீ ஞாபகத்தில் வைத்திருக்கிறாயா ... திருமலை?” குருவின் கேள்வியைக் கேட்டு திருமலை சற்று அதிர்ந்து போனாலும் “தங்களை மறந்தால் தானே நான் நினைக்க வேண்டிய நிர்பந்தம் வரும்?… நாள்தோறும் உங்களை நான் பூஜித்து வருவது தங்களுக்கு அறிந்த ஒன்றுதானே?”
“உன்னிடம் நிறைய மாற்றங்களைக் காண்கிறேன் திருமலை… இரண்டு வருடங்களுக்கு முன் என்னை விட்டு பிரியும் போது உனது சொத்தாக நான் கணித்த பணிவு, துணிவு என்ற எதுவுமே உன்னிடம் இப்பொழுது இல்லை.. . ” குரு சொல்லி முடிக்க திருமலை அதிர்ச்சியில் உறைந்தான்.
“அதற்கு பதிலாக உன்னிடத்தில் அகந்தை , ஆணவம், வீண் பிடிவாதம் என்று அழிந்து போகும் சொத்துக்கள் நிறைய சேர்த்து வைத்துள்ளாய்”
திருமலைக்கு வியர்த்து கொட்டியது. “குருவே ..! நான் செய்த தவறுதான் என்ன? இவ்வளவு பெரிய பழிச்சொல்லுக்கு என்னை ஆளாக்காதீர்கள்…” கண்ணீர் மல்க திருமலை வேண்ட ஆரம்பித்தான்.
“உனக்குத் தெரியும் திருமலை… நீ என்ன தவறு செய்தாய் என்பது உனக்குத் தெரியும்… பிறர் மனதை புண்படுத்தும் வித்தையையும் நீ கற்றுக் கொண்டாய் போலும்?”
“குருவே… தங்களின் வார்த்தைகளுக்கு நான் எப்பொழுதுமே பதில் வார்த்தைகள் பேசியது இல்லை.. இருப்பினும் நான் செய்த தவறுகளை எடுத்தியம்பினால் நிச்சயமாக நான் சரி செய்து விடுவேன்…” தரையில் மண்டியிட்டு உட்கார்ந்த படியே திருமலை வேண்டிக் கேட்டுக் கொண்டான்.
“என் அருகே வா திருமலை…” என்ற குருவின் அழைப்பிற்கு அடிபணிந்து அந்த ஒளிவட்டத்தின் அருகில் சென்றான்... குரு திருமலையின் காதில் மட்டும் விழுமாறு ஏதோ சொல்லத் தொடங்க முன்னை விட திருமலைக்கு வியர்வை அதிகமாக வெளிவர ஆரம்பித்தது. “இப்பொழுது சொல் திருமலை.. ”
“குருவே... வெட்கி வேதனைப் பட வேண்டிய விசயம் .. உண்மைதான் என் தலைக் கர்வம் அதிகமாகி விட்டது... என் நண்பர்களை நான் மேற்கொண்டு இருக்கும் பணிக்கு தயை கூர்ந்து நீங்கள் நல்வழி காட்ட வேண்டும்..” என்று சொல்லிய திருமலை குருவின் பதிலுக்குக் காத்திராமல் குகையின் சுவரில் வைக்கப் பட்டிருந்த வாளை உருவி கண்ணிமைக்கும் நேரத்தில் தனது தலையை தானே வெட்டி வீழ்த்தினான்.
தலை உருண்டோடி குருவின் காலில் விழந்தது. அந்த இடம் முழுவதும் திருமலையின் தலையில் இருந்து ஒழுகிய இரத்தம் அந்த பளிங்கு தரையை சிவப்பு நிறமாக்கியது...
“அவசரப் பட்டு விட்டாயே திருமலை...! இந்த திருத்தக் கூடிய விசயத்துக்கு உன் உயிரையே தர வேண்டுமா?” குருவின் வார்த்தைகளை கேட்க திருமலையின் உடலில் அவன் தலை இல்லை... அவன் கால்கள் சிறிது நேரம் துடிதுடித்து அடங்கியது...!

விக்கிரமாதித்தன் + பட்டி + வேதாளம் மற்றும் பலர்
அவளுடைய மயக்கும் அழகு அவன் மனத்திலே சஞ்சலத்தைத் தோற்றுவித்தது. அவன் பட்டியை நோக்கி “பட்டி, அதோ அந்தப் பேரழுகு வாயந்த இளம் பெண்ணை பார்! இவ்வளவு எழில் வாய்ந்த பெண் உலகத்தில் இருக்க முடியுமா?” என்று பரவசத்துடன் கூறினான்.
பட்டிசிரித்துக் கொண்டு, “மன்னர் பெருமானே எந்த அழகான பெண்ணைத் தாங்கள் பார்க்க நேர்ந்தாலும் அவளைப் போன்ற பேரழகி உலகத்தில் எங்குமே கிடையாது என்று சொல்வது உங்கள் வழக்கமாகி விட்டது. பெண்களிடம் சில கோளாறுகள் இருக்கின்றன என்றால் தங்களைப் போன்ற ஆண்களிடமும் கோளாறுகளுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு ஆண்மகனும் உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு அழகான பெண்ணையும் அனுபவித்து சுவைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பாகி விட்டது. இந்த விவகாரத்துக்கு எல்லை தான் ஏது?” என்று கூறினான்.
மேற்கண்டவையை படித்து விட்டு ஏறக்குறைய பத்து நிமிடங்கள் என்னை மறந்து சிரித்துக் கொண்டு இருந்தேன். எனக்கு விக்கிரமாதித்தனை விடாமுயற்சியும் புத்திகூர்மை உடையவனாக மட்டுமே தெரியும். பட்டியுடனும் வேதாளத்துடனும் விக்கிரமாதித்தன் செய்யும் சாகசகங்கள் என்று பட்டியல் நீளும். ஆனால் நான் சமிபத்தில் படிக்க நேர்ந்த “விக்கிரமாதித்தன் கதைகள்” புத்தகத்தில் தலைவர் விக்கிரமாதித்தனை ஒரு ரொமான்டிக் ஹீரோவாகவும காண்பித்து இருப்பது எனக்கு வியப்பை அளித்தது.
கதைக்குள் கதை என்ற அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்த ஒரு அம்சம். அந்த அணுகுமுறை விக்கிரமாதித்தன் கதைகள் முழுவதும் வியாபித்து இருக்கின்றது. சரி.. கதையின் சுருக்கத்தைக் காண்போம்.
உஜ்ஜயினி பட்டணம் - மாகாளியின் இருப்பிடம் - பர்த்ருஹரி, விக்கிரமாதித்தன் மற்றும் பட்டி மூவரும் அண்ணன் தம்பிகள் - பர்த்ருஹரி உஜ்ஜயினி பட்டணத்தின் அரசன்- மனைவியின் துரோகம் - பர்த்ருஹரி துறவறம் - தலைவர் விக்கிரமாதித்தன் அரசனாதல்- பட்டி அமைச்சராதல்- மாகாளியின் அருளைப் பெறுதல் - பட்டியின் மதிநுட்பம் - வேதாளம் அறிமுகம் - ஞானசீலனின் பேராசை - ஆயிரம் மன்னர்களை பலி கொடுக்கும் யாகம் - ஆயிரமாவது மன்னர் விக்கிரமாதித்தன் - வேதாளத்தை பலி பீடத்திற்கு கொண்டு வரும் முயற்சி - வேதாளத்தின் புதிர் - விக்கிரமாதித்தனின் பதில் - வேதாளம் மறுபடி முருங்கை மரம் ஏறுதல்- விக்கிரமாதித்தனின் விடா முயற்சி - ஞானசிலனின் சூழ்ச்சியை முறியடித்தல்...
இது அத்தனையையும் சிம்மாசனத்தை அலங்கரிக்கும் ஒவ்வொரு பதுமையும் கூறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. பட்டியின் மதிநுட்பமும் விக்கிரமாதித்தனின் வீரமும் வேதாளத்தின் உறுதுணையும் உண்மையில் ஒரு வீர தீர சாகசம் தான் ... கதைக்குள் கதையாக வரும் ஒவ்வொரு கதையிலும் சொல்லப்படும் நியதிகள் என்று நமக்குப் பிடித்த விசயங்கள் ஏராளம்...
ஆனால் கதை நடந்த காலத்தில் பெண்கள் நடத்தப் பட்ட விதம் சற்று மனதிற்கு வேதனை அளிக்கிறது. பெண்களைப் போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருப்பதும் அதை அநேகமான கதைகள் உறுதிப் படுத்துவதும் சற்று சங்கடத்தை அளிக்கிறது. ஒருவேளை பெரும்பான்மையான கதைகள் பெண்களைச் சுற்றியே வருவதால் எனக்கு சற்று அலுப்பு ஏற்பட்டு விட்டது என்னவோ உண்மைதான். உதாரணத்திற்கு கதைகளில் வரும் தாசிகள் பற்றிய விடயங்கள்.. கள்ளத் தொடர்புகள்... என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இதையெல்லாம் தவிர்த்து விட்டு கதைகளின் மேல் மட்டும் நம்மால கவனம் செலுத்த முடியுமா என்றால் அது முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் பெரும்பாலான கதைகளுக்குள் கதைகளாக வரும் கதைகள் இதைப் பற்றியே டீல் செய்கின்றன.
காடு ஆறு மாதம் நாடு ஆறு மாதம் என்று வாழ்க்கை முறையை விக்கிரமாதித்தனுக்கு அமைத்துக் கொடுத்து.. அந்த காடு ஆறு மாதத்தில் விக்கிரமாதித்தனுடைய சாகசங்களை அமைத்துக் கொடுத்திருக்கும் கதையின் ஆசிரியருக்கு ஒரு சபாஷ்!.
யாராவது நவீன காலத்திற்கு தகுந்தாற் போல் விக்கிரமாதித்தனின் கதைகளை எழுதினால் மிகச் சிறப்பாக இருக்கும்... மக்களே... நான் என்னைப் பற்றி எழுதச் சொன்னதாக நினைத்துக் கொண்டு ஆயுதங்களைத் தயார் செய்வது எனக்குத் தெரிகிறது... எஸ்கேப்... ;-)
புத்தகத்தின் விபரம் பின் வருமாறு;
தலைப்பு; விக்கிரமாதித்தன் கதைகள்
ஆசிரியர்; கே.எஸ். பதஞ்சலி ஐயர்.
விலை; 100
பதிப்பகம்; நர்மதா பதிப்பகம்

Friday, January 1, 2010
சென்னை புத்தகக் காட்சி
புத்தக காட்சி பற்றிய செய்தி காதுகளை எட்டியதுமே அங்கு செல்வதற்கான திட்டங்களை மனது தானாகவே திட்டமிட தொடங்கி இருந்தது. முதல் நாள் அன்றே சென்று விடுவதாக முடிவு எடுத்து இருந்தாலும் திட்டத்தில் வழக்கம் போல் என்லார்ஜ் சைஸ் ஓட்டை...! ஸோ.. ... இரண்டாவது நாள்... நல்ல வேளையாக பெரிதாக எதுவும் தடைகள் இல்லை... கணேசன் புத்தக காட்சிக்கும்... சந்துரு புத்தக காட்சி இடம் பெற்றிருக்கும் இடம் வரைக்கும் என்னுடன் வருவதாக திட்டம் நீண்டது. இந்த முறை ஒரே தீர்மானத்துடன் தான் புத்தக காட்சிக்கு சென்றேன்... அது சுஜாதாவையும், சு.ரா வையும் எப்படியாவது வீட்டிற்குக் கூட்டி வந்து விட வேண்டும். சுஜாதாவின் நாவல்கள் சிலவற்றில் மூழ்கி அவரின் எழுத்துக்களின் தீவிர ரசிகனாகி விட்ட எனக்கு.. சு.ராவின் எழுத்துக்களில் சிலவற்றையாவது வாசித்து விட வேண்டும் என்று மிக நீண்ட நாட்களாக காத்திருந்தேன்(புத்தக காட்சியிலதான் கிடைக்கும் அப்படிங்கற நிர்பந்தம் இல்லை.. அந்த அந்த பதிப்பகத்திலேயே போயி வாங்கி இருக்கலாம் தான்.. அப்ப வாங்கி இருந்தா.. இப்போ இங்கே எழுத முடியாதுல்ல ;-)..)
குறுக்கு வழியில கூட்டிட்டு போறேன்னு சந்துரு ஏறக்குறைய என் குறுக்கை உடைத்து விட்டிருந்தான்... வருடத்தின் கடைசி நாளாக இருந்ததால் கூட்ட நெரிசல் அளவுக்கு அதிகமாகவே இருந்தது... ஒரு வழியாக பலவித சாகசங்களை நிகழ்த்தி விட்டு புத்தக காட்சியை அடையும் பொழுது முழு நிலா எங்களை வரவேற்க தயாராக இருந்தது. சந்துருவிடம் புது வருட வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு வாசலிலேயே வழி அனுப்பி வைத்து விட்டு நானும் கணேசனும் உள்ளே நுழைந்தோம். கடந்த இரு புத்தக காட்சியில் தென்பட்ட கூட்டம் இப்பொழுது இல்லை... நுழைவுவாயிலில் என்னை விட தாடி அதிகமாக வைத்திருந்த ஒருவர் இஸ்லாம் சம்பந்தப் பட்ட அச்சடிக்கப்பட்ட காகிதங்களை கொடுத்துக் கொண்டு இருந்தார்.. எனது கைகளிலும் வலுக்கட்டாயமாக ஒன்று திணிக்கப்பட்டது... பிரித்துப் பார்த்தேன்.. எங்கோ நடக்கும் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்து இருந்தார்கள்... திருப்பி பார்த்தேன்... “திருமண பொருத்தங்கள்” என்று அச்சிட்டதைப் பார்த்தவுடன் அப்படியே மடித்து வைத்துக் கொண்டேன்.. உபயோகப் படும்ல... ;-)...
எங்கு நோக்கினும் “புதிய தலைமுறை” யின் விளம்பரங்கள் ஆட்கொண்டு இருந்தன. நுழைவுச்சீட்டு தரும் இடங்களில் யாரும் இல்லாததால் நானும் கணேசனும் ஒவ்வொரு நுழைவுச்சீட்டு தரும் இடங்களையும் அணுக ஆரம்பித்தோம்... கூட்டம் அதிகமாக இல்லாத அந்த பூத்தில் இரண்டு நுழைவுச்சீட்டுகள் கணேசனால் வாங்கப்பட எங்களது பயணம் உள்நோக்கி ஆரம்பிக்கத் தொடங்கியது. அதிர்ஸ்ட குலுக்கலில் எங்கள் அதிர்ஸ்டத்தை சோதிக்க பெயர் எழுதி அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இட்டோம். அப்படியே உள்ளே சென்று கடை எண் 1 லிருந்து ஆரம்பிக்க எத்தனித்தோம்... முதலாவதாக நுழைந்த கடை “ஆனந்த விகடன் பதிப்பகம்”
நான் “வந்தார்கள்.. வென்றார்கள்.. சென்றார்கள்” மற்றும் “அப்புசாமி ஹி...ஹி... கதைகள்” இரண்டையும் எடுத்துக் கொண்டு திரும்பினேன்.
“இந்த மதன் புக் என்ட இருக்கு”
“சரி.. அப்போ.. நான் உங்கள்ட வாங்கிக்கறேன்...”
அடுத்ததாக நுழைந்தது “சகசஸ் புக்ஸ்”... புத்தகங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்த பொழுது “சிவகாமியின் சபதம்” கண்ணில் பட்டது. “த்தா.. எங்கே போனாலும் ..” எடுத்து ஒளித்து வைத்தேன். கணேசனிடம் ஒரு சின்ன புன்னகை... மகாபலிபுரத்திற்கு சென்று வந்த அன்றே என்னிடம் இருந்த இரண்டு பாகங்களையும் பாலாவிற்கு அன்பளிப்பாக்கி இருந்தேன். அங்கு எனது கண்ணில் இரண்டு புத்தகங்கள் பட்டது... “விக்கிரமாதித்தன் கதைகள்” மற்றும் “ஜென் கதைகள்”.. எடுத்து வைத்துக் கொண்டேன். நிறைய “ஜென் கதைகள்” அங்கு இருந்தாலும் புத்தர் முகப்பு அட்டையிட்ட அந்த புத்தகம் என்னை கவர்ந்தது எனக்கே வியப்பாயிருந்தது. பணத்தைக் கொடுத்து விட்டு கிளம்பும் போது
“உயிர்மை எங்கே இருக்கு?”
“எனக்குத் தெரியாதுங்களே...!”.. அப்பட்டமாக பொய் சொன்ன அந்த கடையில் இருந்தவரை ஒரு பரிகாசப் புன்னகையுடன் கடந்தோம்.
அடுத்த கடைக்குள் நுழைவதற்குள் என் மனது என்னை நோக்கி பலவாறு கேள்வி எழுப்பத் தொடங்கியது... உனக்கு உண்மையில் யார் அல்லது எது மேல் கோபம்.. அந்த கடையில் ஏன் அப்படி நடந்து கொண்டாய்... சீன் கிரியேட் பண்றியா...? பெரிய இவன்னு நினைப்பா..? அந்த கேரக்டர் மேல கோபமா இல்லை கல்கியின் வருணனை மேல கோபமா இல்லை ஏன் இப்படி நடந்துக்கிற...? ஒருவேளை அந்த புத்தகம் என் வாழ்வில் வரமாலே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்... திரிசங்கு நிலை என்னை வாட்டுவது என்னவோ உண்மைதான்... அழுத்தமாக பதிந்துவிட்ட அனர்த்தமான விசயம்... காலையில் அம்மாவுடன் நடந்த அந்த சிறிய சண்டை ஞாபகம் வந்தது
“இந்த சின்ன வயசில ஆப்பரேஷன் அவசியமா?”
“பாதி கிழவனாகிட்டேன்... உனக்கு மட்டும் நான் எப்பவுமே சின்ன வயசு தான்மா..”
“புரியுது.. நானா கல்யாணம் பண்ண வேணாங்கறேன்?”
“எனக்கு வேலை இருக்கு .. அப்புறமா கூப்பிடுறேன்”
இப்பொழுது... கல்கி... சிவகாமியின் சபதம்.. அம்மா.. எல்லோரும் சேர்ந்து என் மனதை ஆட்கொள்ளத் தொடங்கினார்கள்.. இந்த இடைப்பட்ட தருணத்தில் கணேசனின் வார்த்தைகள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஆமோதித்துக் கொண்டு இருந்தேன். அப்படியே வழியில் இன்னுமொரு கடையில் சுஜாதாவின் புத்தகங்கள் எங்களை நிறுத்தியது.
“கார்டு ...அக்ஸெப்ட் பண்ணிக்குவீங்களா..?”
“பண்ணுவோம்”
ஆசை ஆசையாக எனக்குத் தோன்றிய எல்லா புத்தகங்களை எடுத்துக் கொண்டு பணம் கொடுக்கப் போகும் இடத்தில் கார்டை வாங்க மறுத்தனர்... அதற்கு சப்பைக் கட்டாக காரணங்களைக் கூற ஆரம்பித்தனர். பணத்துடன் வந்து வாங்கிக் கொள்வதாக கூறி அங்கிருந்து நகர ஆரம்பித்தோம்.. சுஜாதா முகப்பு அட்டையில் இருந்து எங்களைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு இருந்தார். போகும் வழியில் தேவனின் புத்தகங்கள் என்னை சுண்டி இழுக்க ஆரம்பித்தன. “துப்பறியும் சாம்பு” மற்றும் “சி.ஐ.டி சந்துரு” என்ற இரண்டு புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.
ஒருவழியாக உயிர்மையை அடைந்தாகி விட்டது. கடையின் வாயிலில் அதன் அதிபர் மானுஷ்ய புத்திரன் தனக்கான பிரத்யேக சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்தார். விவேக்கின் ஐ.ஜி. நகைச்சுவைத் துணுக்கு நினைவுக்கு வந்து சென்றது. சுஜாதாவின் “மர்மக் கதைகள்”, ஸ்ரீ ரங்கத்துக் கதைகள்”, “பேசும் பொம்மைகள்”, “சில்வியா” மற்றும் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை” ஆகியவற்றை வாங்கிக் கொண்டேன். பட்ஜெட் எகிறி விட்டு இருந்ததை என் மனது எனக்கு நினைவு படுத்தியது. சற்று தூரத்தில் தெரிந்த காலச் சுவடுகளுக்குள் நுழைந்தோம்.
சு.ரா. என்றழைக்கப்படும் சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை” மற்றும் “பிரமீள்” இரண்டையும் வாங்கிய பின் வைக்கம் முகமது பஷீரின் புத்தகங்கள் பார்வைக்கு கிட்டியது. நிறைய வாங்க வேண்டும் என்று ஆசை .. என்ன செய்ய.. “மதில்கள்” மட்டும் என் வசமானது.
வெளியே வந்த போது மேடையில் மலையாள வாத்தியமான செண்டு வாசிக்கத் தொடங்கி இருந்தனர். உண்மையிலேயே நான் மெய் மறந்து போயிருந்த தருணம் அது. அவ்வளவு பேரும் ஒருமித்து இசையினை எழுப்பிக் கொண்டு இருந்தனர். நான் அவர்கள் கரங்களையே பார்த்துக் கொண்டு இருந்தேன். கொம்பு ஊதும் பொழுது என் மனதில் நான் உருவகித்து வைத்திருக்கும் ராஜ ராஜ சோழன் வந்து சென்றார். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு நானும் கணேசனும் கிளம்பினோம். பிற்பாடு ஒரு சாப்பிடும் கடையில் சந்திப்பதாக ஒப்பந்தித்து தற்காலிகமாக பிரிந்தோம். நான் கூட்ட நெரிசலில் எனது சாகசங்களை காட்டத் தொடங்கி இருந்தேன்.
வரும் வழியில் திடிரென்று அப்பாவின் ஞாபகம் வந்தது. நான் என் சிறு வயதில் ஒவ்வொரு கடையாகத் தேடி சென்று புத்தகங்களைப் படிப்பதைப் பார்த்து எங்கள் கடைக்கும் அதே பத்திரிக்கை வாங்க செய்த அந்த நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டேன். இப்பொழுது இருந்திருந்தால் உண்மையிலேயே மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார். பழைய நினைவுகளின் ஊடே பயணித்துக் கொண்டு இருக்கும் பொழுது “நிப்பாட்டுடா.. நிப்பாட்டுடா”... என் அப்பாவின் குரலே தான்... அப்படியே வண்டியின் வேகத்தைக் குறைத்தேன்... அது ஒரு நெரிசலான பாதை... மின்னல் வேகத்தில் வந்த ஒரு ஷேர் ஆட்டோ என்னை இடிக்க மிக அருகில் வருவதற்கும் முன்னமே நான் வேகத்தைக் குறைத்து இருந்ததால் நான் துல்லியமாக ப்ரேக் போட்டு நிப்பாட்டுவதற்கும் சரியாக இருந்தது... ஒரு நொடி தாமதித்து இருந்தாலும் புதுவருடம் மருத்துவமனையில் தான் எனக்கு விடிந்திருக்கும்...!
“தம்பி.. தப்பிச்சிட்டிங்க போல இருக்கு... மாட்டி இருந்தீங்கன்னா... சட்னி தான்.. கெட்ட நேரத்திலேயும் ஒரு நல்ல நேரம்... அமைதியா கிளம்பி போங்க தம்பி...”
நிமிர்ந்து பார்த்தேன்... என்னைக் காப்பாற்றி விட்ட மகிழ்ச்சி என் அப்பாவின் முகத்தில் கூடுதலாக...! சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டத்திற்குள் கரைந்து போனேன்...!

முகமூடி...!
எத்தனை பேருக்கு முகமூடி வீரர் மாயாவியைப் பற்றித் தெரியும் என்று எனக்குத் தெரியாது. சிறு வயதில் எனக்குப் படக்கதைகள் மேல் ஒரு அபார ப்ரியம். விலை என்னவோ மிகக் குறைவு தான் என்றாலும் ஒவ்வொரு முறை மாயாவியை வீட்டிற்கு அழைத்து வரும் போதெல்லாம் அம்மாவின் விசேஷ அர்ச்சனை ஏமாற்றாமல் என்னை வரவேற்கும். ஆனாலும் எனது தேடல் லக்கி லூக், ஸ்பைடர் மேன்... துப்பறியும் கதைகள் என்று தொடர்ந்து கொண்டே தான் இருந்தன. பல நேரங்களில் எனக்கு மொக்கையாகத் தோன்றினாலும் மாயாவியின் கதைகள் எனக்கு என்றைக்குமே சலிப்பை ஏற்படுத்தியது இல்லை... இன்று அந்த மாதிரி புத்தகங்கள் வருகின்றனவா என்று எனக்குத் தெரியவில்லை. அடுத்த முறை வீட்டிற்கு செல்லும் போது வழக்கமாக நான் புத்தகம் வாங்கும் பெருமாள் கோவில் அருகில் இருக்கும் புத்தகக் கடையில் சோதித்துப் பார்க்க வேண்டும்.
என் மனதில் முகமூடியைப் பற்றி நினைவு வரும் போதெல்லாம் முகமூடி வீரர் மாயாவி நினைவிற்கு வருவதுண்டு. மாயாவியைத் தவிர இன்னொன்றும் நினைவுக்கு வரும். அது எனக்கு நானே போட்டுக் கொண்ட முகமூடி... என் மனதிற்கு.. (முகம் ஏற்கனவே டெரரா முகமூடி போட்ட மாதிரி தான் இருக்கும் ... அது வேற விசயம்... ;-)..)...
“நீ எல்லாத்துக்கும் ஒரு முகமூடி வைச்சிருக்கடா... நான் கண்டுபிடிச்சுட்டேன்...” கரைந்து போன இரு வாரங்களில் ஒரு நாள் என் உற்ற நண்பன் என்னைப் பார்த்து வார்த்தைகளை உதிர்த்தான். அந்த வார்த்தைகள் என் காதில் வந்து விழுந்த நேரம் என் மனது என் நண்பனுக்கு ஒரு சபாஷ் சொன்னது. பத்து வருடங்களுக்கு மேலான பழக்கத்தில் என்னை எனக்குத் தெரிந்ததை விட என் நண்பனுக்கு என்னைப் பற்றி அதிகம் தெரியும். மிக நீண்ட நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டு இருந்த இந்த விசயத்தை என் மனது சொல்ல வார்த்தைகள் மட்டும் என் நண்பனின் உதடுகளில் இருந்து எழுந்து என் காதில் வந்து விழுவதாகவே தோன்றியது.
ஒவ்வொருவருக்காகவும் முகமூடி அணிந்து அணிந்து எனது உண்மையான பாத்திரத் தன்மை எனக்கு மறந்து விட்டது என்னவோ உண்மைதான். நீண்ட நாட்களாக நான் எனக்குள் என்னைத் தேடித் தேடி களைப்படைந்து விட்டேன். இப்பொழுது எந்த முகமூடியை யாருக்காக எப்பொழுது அணிந்திருக்கிறேன் என்று எனக்கே தெரியாத அளவுக்கு நான் மாறிப் போயிருக்கிறேன். உண்மை நெருப்பாக என்னை சுடுகிறது...
நான் எப்பொழுது என் மனதிற்கு முகமூடி அணியத் தொடங்கினேன்? என்னுடைய உண்மையான தன்மை தான் என்ன?. ஆயிரமாயிரம் கேள்விகள் என் மனதினுள் எழுகிறது... இந்த கேள்விகள் எழும் போதாவது முகமூடி அணியாமல் இருக்கிறேனா... ?
என்னுடன் பழகுபவர்களின் மனது புண்படக்கூடாது என்பதற்காக என் மனதிற்கு ஒரு முகத்திரை இட ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன்... முன்பெல்லாம் எடுத்த விசயத்திற்கு எல்லாம் மூக்கின் மேல் கோபம் வந்து நிற்கும்... யார் என்ன எங்கே என்ற கேள்வி எல்லாம் காணாமல் ஓடி ஒளிந்து கொள்ளும்... நிறைய நல்ல மனதினை புண்படுத்தி இருக்கிறேன்.. நிறைய உறவுகளை இழந்திருக்கிறேன்... இப்படி என் இயல்பை மாற்றிக் கொள்ள என்னை சற்று மாற்றிக் கொள்ள வேண்டியதாக இருந்தது... இந்த மாறுதல் தான் நான் சொல்லும் முகத்திரையா? எல்லாம் நடிப்பா? அப்படி என்றால் எனக்குள் அந்த பழைய மிருகம் இன்னும் உருமிக் கொண்டு தான் இருக்கிறது போலும்...!
நான் காது கொடுத்து கேட்காததனால் நிறைய விசயங்களில் கோட்டை விட்டிருக்கிறேன்... இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு வார்த்தைகளையும் உற்று கவனிக்கிறேன் (யாராவது பாடம் எடுத்தா தூங்கிடுவேன் அது.. வேற விசயம்.. அது என்னுடைய உண்மையான இயல்பு..;-)..)... இதிலும் இன்னொரு பிரச்சினை... எல்லொராலும் அவ்வளவு துல்லியமாக வார்த்தைகளை பிரயோகப்படுத்த இயலாது என்ற உண்மை... இதுவும் மிக நீண்ட நாட்களுக்குப் பின் தான் என் மனதிற்கு உரைக்கத் தொடங்கியது... மிகவும் குழப்பத்திற்கு உள்ளானேன்... இதற்கும் ஒரு முகமூடி தேவைப் பட்டது போலும்... நல்ல வார்த்தைகள் வந்து விழும் போது மகிழ்ச்சி அடைவதும் ... விகாரமான வார்த்தைகள் வந்து விழும் போதெல்லாம் என்னை நானே புண்படுத்திக் கொள்வதும்.. வார்த்தைகள் பிரயோகித்தவரை சம்பந்தமே இல்லாதது போல ஒதுக்கி அவர் மனது புண்படாமல் பார்த்துக் கொள்வதும்... ஹீம்... தியாகி முகமூடி...
இப்படி முகமூடிகளின் சஞ்சாரத்திலேயே வாழ்க்கை நகர்கிறது... இது நல்லதா .. கெட்டதா .. என்று எனக்குத் தெரியவில்லை... ஆனால் இந்த முகமூடிகள் இல்லாமல் யாரும் என்னை நெருங்கக் கூட முடியாது என்பது மட்டுமே உண்மை... எனக்குள் கனன்று கொண்டு இருக்கும் நெருப்பு எல்லோரையும் எரித்து விடுமோ என்று அஞ்சுகிறேன்...
இந்த பொறாமை... ஆணவம்... தலைக் கர்வம் என்று சொல்லக் கூடிய அனைத்தின் மொத்த உருவமாக நான் இருப்பது வெளி உலகுக்குத் தெரியாமல் இருக்க ஒரு முகமூடி தேவைப்படுகிறது.. எனது பிடிவாதத் திற்கு ஒரு முகமூடி... கடைசியில் முகமூடிக்கே முகமூடி அணிந்து சிறப்பிப்பேன் என்று நினைக்கிறேன்...
ஆனால் இறுதி வரை வெறித்தனமாக உழைக்கும் எனது குணம்... என் ஆழ்மனதில் இருந்து சொல்கிறேன்... அதற்கு எந்த முகமூடியும் அணிய வில்லை... ஒரு வேளை உழைப்பிற்கான பலன் உடனே கிடைப்பதனால் தான் இந்த வெறித் தனமா..? இதுவும் வேடமா? கபடதாரி...!
இரண்டு நாட்களுக்கு முன்
“என்ன இன்னும் உடம்பு சரியாகலை போல இருக்கு?”
“ஆமாம்...”
“இப்போதெல்லாம் முன்னப் போல இல்லையே?!... ஆனால் திங்கட்கிழமைங்கிறது தான் கொஞ்சம் உறுத்துது... ஞாயிற்றுக் கிழமை என்ன பண்ணினே...”
“வேட்டைக் காரன் படத்துக்கு போயிருந்தோம்...!”
“அப்போ உசிரு பொழைச்சதே பெரிய விசயம்னு சொல்லு...!”

Subscribe to:
Posts (Atom)