Wednesday, March 24, 2010
சே குவேரா...!
நேற்று கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடாக திரு.மருதன் அவர்கள் எழுதிய “சே குவேரா” படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சே வைப் பற்றி முன்னமே அறிந்திருந்தாலும் இந்த புத்தகத்தின் வாயிலாக என் நினைவுகளை புதுப்பித்துக் கொண்டேன்("ஒரு காலத்தில்" என்று ஆரம்பித்தால் வயதானவனாக காட்டப் படுவோம் ஆதலால் அப்படி ஆரம்பிக்கவில்லை... சாரு நிவேதிதாவிடம் கற்றுக் கொண்டது ;-)...).
சே வின் வாழ்க்கை வரலாற்றை திரு.மருதன் கடற்கரையில் இருந்து ஆரம்பிக்கிறார். ஆஸ்துமா நோய் அவரை சிறு பிள்ளையில் இருந்து எப்படி பாதித்தது என்பதை முதல் அத்தியாயத்தில் பகர்கிறார். முதல் அல்லது இரண்டாவது அத்தியாயத்தில் ஒரு சின்ன குறை.... எர்னஸ்டோ எப்படி சே வாகிறார் என்பதை சிறு குறிப்பாக எழுதியிருக்கலாம்... ;-).. அடுத்தடுத்த அத்தியாயங்களில் அதிரடி காட்டுகிறார். சே வின் முதல் காதல்... முதல் மோட்டார் சைக்கிள் பயணம்... மருத்துவப் படிப்பு இவற்றின் ஊடே அவரின் உலகப் பார்வை.. அமெரிக்கா ஏகாதிபத்தயத்தினை வெறுக்கும், எதிர்க்கும் துணிவு... இப்படி நம்மை அவரின் வாழ்க்கையுடன் இணைந்து பயணிக்க வைக்கிறார். பிடலுடனான சந்திப்பிற்குப் பிறகு ஆசிரியர் பிடலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் எழுதியிருக்கிறார்.
க்யூபாவில் பிடல் அடைந்த முதல் தோல்வி.. பிடலின் கைது... விடுதலை அடைந்த பின்னர்... மெக்ஸிக்கோ பயணம்... சே வுடனான சந்திப்பு... கொரில்லா பயிற்சி... பிடலுக்கு சே வின் மேல் ஏற்படும் நம்பிக்கை... க்ராண்ட்மா படகில் க்யூபாவிற்குப் பயணம்... சதுப்பு நிலக் காடுகளில் அடையும் துயரம்... ராணவத்தை எதிர்த்து முதல் வெற்றி... அதன் பின் ஹவானாவைக் கைப்பற்றுதல்... க்யூபா மக்களை அரசுக்கு எதிராக ஒன்று சேர்த்து வெற்றி பெறுதல்... புதிய அரசை கட்டமைக்க உதவுதல் ... க்யூபாவை விட்டு வெளியேறி காங்கோவில் கொரில்லா படையை நிர்மாணிக்க முயலுதல்... அதில் தோல்வி அடைந்து பிடலின் கோரிக்கைக்கு ஏற்ப பொலியாவை அடைதல்... பொலிவிய ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு கொல்லப்படுதல்.... இப்படியாக சே வின் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
சே வின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை நன்றாகவே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திகிறார். வாழைப்பழ கம்பெனி, நிலங்களை சொற்ப டாலருக்கு வாங்கி ஏழைகளின் வயிற்றில் அடித்திருப்பதை கண்டு கொதித்து எழும் சே... அரசு அமைக்கும் பொழுது... வாங்கிய விலைக்கு திரும்ப நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்பது வாழைப்பழ கம்பெனிக்கு சரியான ஆப்பு... இப்படியாக அமெரிக்காவின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார்... அமெரிக்காவும் க்யூபாவின் மேல் பொருளாதாரத் தடை முதற் கொண்டு எல்லாவற்றையும் பிரயோகித்து பார்த்து முகத்தில் கரியை பூசிக் கொண்டது...
தனது வாழ்நாளின் பெரும் பகுதியை ஆதரவற்ற மக்களுக்காக போராடுவதிலேயே செலவிட்டார். ஆயுத பலமே அநீதியை வேரறுக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்தாலும் மக்கள் பணத்தில் ஆயுதக் குவிப்பை அறவே வெறுக்கிறார்.. மிகப் பெரிய பதவி வகித்த போதும் மக்களோடு மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்... அரசு வாகனத்தை சிக்கனமாக உபயோகித்திருக்கிறார்... தனக்கென்று சலுகைகள் எதையும் அவர் உபயோகித்தது இல்லை... ஆஸ்துமா அவரை படாத பாடு படுத்தினாலும் தனது மன உறுதியால் எல்லாவற்றையும் தகர்த்து எறிந்து இருக்கிறார்...
சே நினைத்திருந்தால் க்யூபாவிலேயே அவர் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருந்திருக்கலாம்... க்யூபாவிற்கு கிடைத்த வெற்றி ... லத்தின் அமெரிக்கா முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்று கனவு கண்டார்... கனவை நினைவாக்க முயலும் போது ஒரு போர் வீரனாகவே கொல்லப் பட்டார்... க்யூபர்களைப் போல் காங்கோலியர்களும் பொலிவியர்களும் இல்லாதது சே வின் தோல்விக்கு முதல் காரணமாக இருக்கலாம் என்பது எனது கருத்து...!
சே வைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் கீழ்க்கண்டவைகள் ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை...
“உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்களின் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே...!”
“இந்த இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறிய போராளியை நினைவில் கொள்ளுங்கள்...”
“நீ எதற்காக வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்... நீ சுடப் போவது ஒரு மனிதனைத் தான்... சுடு...”
இன்னும் எழுத வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது... மிகச் சுருக்கமாக சொல்லப் போனால்....
ஒரு சே அழிக்கப்பட்டிருக்கலாம்... அவரது கொள்கைகள் இன்றளவும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன... சே ஒரு வாழும் வரலாறு...!
நூல்; சே குவேரா... வேண்டும் விடுதலை!
விலை; ரூ.70
ஆசிரியர்; திரு.மருதன்.
பதிப்பகம்; கிழக்குப் பதிப்பகம்.
பி.கு; இந்த புத்தகத்தினை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சகோதரியாருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக...!
Sunday, March 21, 2010
விண்ணைத்தாண்டி வருவாயா...!
“உலகத்தில எத்தனையோ பொண்ணு இருக்கிறப்ப நான் ஏன் ஜெஸ்ஸியை காதலிச்சேன்?”
“காதலியை நம்ம தேடிப் போகக் கூடாது ... காதல் நம்ம சூஸ் பண்ணுனும்... போட்டுத் தாக்கணும்... தலைகீழா திருப்பணும்.... ”
இப்படித் தான் ஆரம்பிக்கிறது கார்த்திக்கின்(கௌதம் மேனனின்) கதை... மிக சுருக்கமாக தான் யார் என்பதை விவரித்து விட்டு தனது காதல் கதைக்குள் நுழைகிறார்.. ஒவ்வொரு பிரேமையும் அப்படியே பசுமையாக செதுக்கிச் செல்கிறார்.. சிம்புவா இது?... பிரமிக்க வைக்கிறார்... அந்த இரும்பு கேட்டில் சாய்ந்து கொண்டு தெருவில் வரும் ஜெஸ்ஸியை வேடிக்கைப் பார்க்கும் அந்த முதல் காட்சி... கொள்ளை அழகு...! தனது குறும்புத் தனங்களின் உதவியுடன்... முற்பாதியை வேகமாக நகர்த்திச் செல்கிறார்.. வீட்டிற்குள் இருக்கும் ஜெஸ்ஸியை பார்க்கும் இடமாகட்டும்... அவசர கதியில் தனது காதலை சொல்லும் இடமாகட்டும்.. ஜமாய்த்திருக்கிறார்... ஜெஸ்ஸி ஒரு வயது மூத்தவள் என்று தெரியவரும் பொழுது கார்த்திக்கின் முகத்தில் தெரியும் மிக மெல்லிய அதிர்ச்சி... அடுத்த நொடியிலேயே அதனை மறைக்கும் மறக்கும் அற்புதமான நடிப்பு... முதல் பாதியின் பெரும்பகுதி கார்த்திக்கின் ப்ளாஸ்பேக்கிலேயே நகர்ந்து செல்கிறது...
“அப்பா பாத்தா திட்டுவார்... வேணும்னா நான் உன்னைய என் தம்பின்னு சொல்லிரட்டா?” - ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன்... காக்க காக்க கேமிராமெனாக வருபவர்.. தனது இயல்பான நடிப்பினால் அழுத்தமான இடங்களில் எல்லாம் சற்று அழுத்தத்தைக் குறைக்க முயன்றிருக்கிறார்... “கௌதம் மேனனிடம் அஸிஸ்டென்டா சேர்ந்து என்ன பண்ணப் போற... இங்கிலிஸ்ல தமிழ்ப் படம் எடுக்கப் போறியா?” என்று கேட்கும் இடத்தில் தொடங்குகிறது அவரது நக்கல்... காதலைச் சொல்லி விட்டு ஜெஸ்ஸியைக் காணாமல் தவிப்பதும்... பின்பு கேரளாவிற்குச் சென்றதை தனது தங்கையின் மூலம் அறிந்து கொண்டு கேரளாவிற்கு கிளம்புகிறார் கார்த்திக்... “அவன் அவன் காதலுக்காக அமேரிக்காவுக்கே போறான்... இங்கன இருக்கிற கேரளாவிற்கு போக முடியாதா?” தனது படத்தை தானே கிண்டல் செய்து கொள்ளும் இடம்..
கேரளாவிலிருந்து திரும்பி வரும் பொழுது இரயிலில் ஜெஸ்ஸியை முத்தமிடுவது கார்த்திக்கின் உச்சகட்ட அசாத்திய தைரியம்;-)... சென்னை திரும்பிய உடன் எதுவுமே நடக்காதது போல் நடந்து கொள்ளும் ஜெஸ்ஸியை கண்டிப்பதில் மிளிர்கிறார் கார்த்திக்.. மறுபடியும் கேரளா.. இம்முறை ஜெஸ்ஸியின் கல்யாணம்... ஜெஸ்ஸி திருமணத்தை நிறுத்துகிறாள்... திருமணம் நின்று போனதிற்கு காரணம் கார்த்திக் என்று கருதி போலிஸ் ஸ்டேஷனில் உட்கார வைக்கப்படுகிறார்...
“சார்.. நான் வேணும்னா.. எழுந்து இஷ்டமில்லைன்னு சொல்லிடட்டுமா? எத்தனை படத்தில பாத்திருக்கோம்?” சீரியஸாக சொல்லுகிறார் கார்த்திக்... ஏனோ சிரிப்பு வருகிறது எனக்கு மட்டும் ;-)... “சார்... கல்யாணம் நின்னு போச்சு சார்...” வாங்கிய அடிகளை மறந்து விட்டு சிரிக்கும் கார்த்திக்... இப்படி கார்த்திக்கை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்... இனி ஜெஸ்ஸி... த்ரிஷா ஜெஸ்ஸியாக வருகிறார்... வலிமையான பாத்திரம் .. வலியைக் கொடுக்கும் பாத்திரம்... அருமையாகவே செய்திருக்கிறார்.. ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகம்... அமைதியான பாத்திரம்... தனது குடும்பத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒரு பாத்திரம்... எவ்வளவு தான் கட்டுப்பாடாகவும் கட்டுக்கோப்பாகவும் இருந்தாலும் காதல் அவளையும் தலைகீழாக திருப்பிப் போடத் தான் செய்கிறது...
“என்னைய அவங்க வெறுக்கிறத விட ... நீ வெறுக்கிறது தான் கரெக்ட்டுன்னு நினைக்கிறேன்...” என்னை உலுக்கிப் போட்ட வார்த்தைகள்... இந்த இடத்தில் கார்த்திக்கிற்கு அளவிட முடியாத வலியைக் கொடுத்தாலும்... ஜெஸ்ஸிக்கு இதனை சொல்வதற்கு மனதில் எவ்வளவு வலி இருந்திருக்க வேண்டும்?.... தனது கோரிக்கைக்கு செவி சாய்க்க ஜெஸ்ஸியின் அப்பா மறுக்கும் பொழுது அழுது ஊரைக் கூட்டாமல் அமைதியாக வந்து படுக்கையில் விழும் அந்த காட்சி... வேதனையை தருவதாக இருக்கிறது..தனது முடிவுகளை செயல் படுத்த முயல்வதும் பின்பு ஒத்து வராது .. என்று பின் வாங்குவதும்... இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கார்த்திக்குகாக நம்மை பாவப் பட வைக்கிறார்... இதற்கு மேல் என்னால் ஜெஸ்ஸியைப் பற்றி எழுத முடியவில்லை... எல்லோரையும் போல் காதலில் விழுந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வராது என்று காதலை முறித்துக் கொள்ளும் அவளின் முடிவுடன் நான் முழுவதுமாக ஒத்துப் போகிறேன்... “எல்லோரும் சந்தோஷமா இருக்கனும்... ” என்று சொல்லும் ஜெஸ்ஸியால் இறுதியில் அவளின் பெற்றோரின் சந்தோஷத்தை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது...
“உன் வாழ்க்கையில யாரோ இருக்காங்கள்ள கார்த்திக்” என்ற கேள்விக்கு கார்த்திக்கின் பதிலில்... “அவளுக்குப் படம் பார்க்கிற பழக்கம் இல்லை..” பதில் வரும் பொழுது என் கண்களில நீர் கோர்த்துக் கொண்டது.... முதல் காதல்... மறக்கவோ.. மறுக்கவோ முடியாது.... ;-(...
யதார்த்த மாலையாக நமக்கு அணிவித்த கௌதம் மேனனுக்கு ஒரு சபாஷ்... ஒவ்வொரு பிரேமிலும் அவரது உழைப்பு பிரமிக்க வைக்கிறது... படத்தில் நிறைய பாத்திரங்களை புகுத்தாமல் ... இருவருக்குள் நடக்கும் சம்பவங்களை அலுப்பு தட்டாமல் கொடுப்பது என்பது உண்மையிலேயே பெரிய விசயம்... படத்திற்கு பலமாக இருப்பது தாமரையின் வரிகள்... ஒரு பெண்ணின் வேதனை இன்னொரு பெண்ணிற்குத் தான் தெரியும் என்பதை நிருபிக்கும் வகையில் அவரது வரியின் வலிமை ... அது தரும் வலிகள்... “திரும்பிவிட்டேன் கடலிடமே” வரிகள் என் மனதில் வலிகள் அத்தனையையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது... இன்னும் நிறைய எழுத வேண்டும் என்பது என் போன்ற பாமரனின் வேண்டுகோளாய் கொள்ளுங்கள் தாமரை... ;-)... மொழியா... இசையா... என்று வரும் பொழுது... மொழி தான்... அந்த மொழிக்கு ஆஸ்கர் நாயகனின் இசை அத்தனை வலிமை சேர்க்கிறது... நிறைய உழைத்திருக்கிறார்கள் மெனக்கெட்டிருக்கிறார்கள்.. ஒவ்வொருவரும்...
மொத்தத்தில் காதலை ஒரு தடவையாவது சந்தித்தவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என்பது எனது கருத்து...!
ஜெஸ்ஸியைப் போல் முடிவு எடுப்பதற்கு மனவலிமை வேண்டும்... என்னைப் போல... ;-)....ஆம்... நானும்... திரும்பிவிட்டேன் என் கடலிடமே!
பி.கு; வாழ்க்கை எல்லாருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பதில்லை... அதில் தான் மொத்த சுவாரஸ்யத்தையும் அடக்கி வைத்திருக்கிறது... சுவாரஸ்யங்கள்... சில சமயம் தானாக அமைகின்றது.. சில சமயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது... வாரணம் ஆயிரத்தில் ஒரு சில பகுதிகள் என் வாழ்க்கையை ஒட்டிச் சென்றது... இந்த படத்திலும் ஒரு சில காட்சிகள் என் வாழ்க்கையை ஒட்டிச் செல்கிறது... அடுத்த நொடிகளின் சுவாரஸ்யங்கள் உண்மையில் ஆச்சர்யமானவையே... காதலில் தோற்றதினால் கார்த்திக் டைரக்டர் ஆனான்... ?????
பி.கு1; கடைசியில் ஜெஸ்ஸியின் கணவனாக ஒரு அட்டு பிகரை காண்பித்ததற்காக கௌதமிற்கு ஒரு சொட்டு... ஹி...ஹி... நான் அட்டு பிகருல்ல.... அது தான்... ;-)
Tuesday, March 16, 2010
பாஸ்வேர்டு - மொக்கை ;-)
“ராம்...”
“சொல்லும்மா...”
“மெயில் செக் பண்ணனும்”
“பண்ணு..”
“உங்க லாகின்ல இருந்து ... மெயில் செக் பண்ணனும்”
“ஏன் உன் லாகின் என்னாச்சு....?”
“அப்படி என்ன தான் உங்க லாகின்ல இருக்கு?”
“நான் உன்னோட லாகின் பத்தி இதுவரைக்கும் கேட்டதே இல்லை”
“நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு?”
“எல்லாத்தையும் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான்...”
“பாஸ்வேர்டு கொடுங்க... இன்னைக்கு உங்க லாகின்ல அப்படி என்ன இருக்குன்னு நான் பார்த்தே ஆகணும்!”
“அதுல நீ தெரிஞ்சுக்க வேண்டியது ஒன்னுமே இல்லை”
“இல்லை... எனக்குத் தெரியும்”
“என்ன தெரியும்?”
“உங்க பழைய காதலியோட பெயரைத்தானே பாஸ்வேர்டா வைச்சிருக்கீங்க?”
“ட்ரை பண்ணிப் பாரேன்”
“பார்த்துட்டேன்... உள்ளே போகலை...”
“பின்ன..?”
“கண்டுபிடிக்கக் கூடாதுன்னு அந்த பெயரை நீங்க குழப்பி வைச்சிருக்கலாம்...”
“பெர்முடேஷன் காம்பினேஷன் வேணா போட்டு பாரு... ஏழே ஏழு எழுத்துதான் என்னோட பாஸ்வேர்டு”
“ஏன் பிரச்சினை பண்றீங்க... சொல்லுங்கன்னா சொல்லுங்களேன்...”
“சேலஞ்சா எடுத்துக்கோ.. கண்டுபிடி..”
“சரி... வேற ஏதாவது குளு கொடுங்க”
“நீ சொன்ன மாதிரி.. அந்த பாஸ்வேர்டு நான் காதலிச்ச பெண்ணோட பெயர்தான்... ஏழு எழுத்து...”
“ஆனால்.. எட்டு எழுத்துல்ல வரும்?”
“இல்லை... ஏழு தான்..”
“அப்ப எனக்குத் தெரியாம இன்னொரு பெண்ணையும் காதலிச்சிருக்கிங்களா?”
“உனக்குத் தெரிஞ்சுதான்..”
“யாரா இருக்கும்...?”
“நல்லா யோசிச்சுப் பாரு... உன்ட நான் நிறைய தடவை சொல்லியிருக்கேன்...”
“ஞாபகம் இல்லீங்க... சொல்லுங்களேன்.. எனக்குத் தலையே வெடிச்சிரும் போல இருக்கு...”
“உனக்கு இப்ப என்ன என்னோட பாஸ்வேர்டு தெரிஞ்சுக்க வேணும் அவ்வளவு தானே?”
“ஆமா...!”
“பேப்பரும் பேனாவும் கொடு..”
“சும்மா... சொல்லுங்க...”
“எழுதியே கொடுத்திறேனே...?!”
“உங்க பக்கத்தில தான் பேப்பரும் பேனாவும் இருக்கு!”
“உன் பிடிவாதத்திற்கு அளவே இல்லாம போச்சு...”
அருகில் இருந்த காகிதக் கட்டில் இருந்து ஒரு காகிதத்தை கிழித்து அதனை நான்காக மடித்துக் கொண்டான். மடித்த காகிதத்தை மறுபடியம் பிரித்து ... காகிதத்தின் மையப் பகுதியில் எழுதி திரும்பவும் மடித்துக் கொடுத்தான்... அதை மிகுந்த ஆர்வத்தோடு திறந்து பார்த்தாள் ஜானகி... அதில் எழுதப் பட்டிருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தாள்... மூக்கின் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது...
“உங்களை...” பல்லைக் கடித்துக் கொண்டு எப்பவும் துணைக்கு வரும் அகப்பை கரண்டியைத் தேடத் தொடங்கினாள்...
“எஸ்கேப்...” என்று அலறிக் கொண்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்து இருந்தான்.. ராம்...
காற்றில் கீழே விழுந்த அந்த காகிதத்தின் மையத்தில்
*******
என்று ஏழு நட்சத்திரங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பல்லைக் காட்டிக் கொண்டு இருந்தன....!
பி.கு; உங்களுக்கு ராமின் பாஸ்வேர்டு தெரியுமானால் JANA’KEY’ யிடம் கொடுத்து உதவுங்களேன்.. ;-)
“சொல்லும்மா...”
“மெயில் செக் பண்ணனும்”
“பண்ணு..”
“உங்க லாகின்ல இருந்து ... மெயில் செக் பண்ணனும்”
“ஏன் உன் லாகின் என்னாச்சு....?”
“அப்படி என்ன தான் உங்க லாகின்ல இருக்கு?”
“நான் உன்னோட லாகின் பத்தி இதுவரைக்கும் கேட்டதே இல்லை”
“நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு?”
“எல்லாத்தையும் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான்...”
“பாஸ்வேர்டு கொடுங்க... இன்னைக்கு உங்க லாகின்ல அப்படி என்ன இருக்குன்னு நான் பார்த்தே ஆகணும்!”
“அதுல நீ தெரிஞ்சுக்க வேண்டியது ஒன்னுமே இல்லை”
“இல்லை... எனக்குத் தெரியும்”
“என்ன தெரியும்?”
“உங்க பழைய காதலியோட பெயரைத்தானே பாஸ்வேர்டா வைச்சிருக்கீங்க?”
“ட்ரை பண்ணிப் பாரேன்”
“பார்த்துட்டேன்... உள்ளே போகலை...”
“பின்ன..?”
“கண்டுபிடிக்கக் கூடாதுன்னு அந்த பெயரை நீங்க குழப்பி வைச்சிருக்கலாம்...”
“பெர்முடேஷன் காம்பினேஷன் வேணா போட்டு பாரு... ஏழே ஏழு எழுத்துதான் என்னோட பாஸ்வேர்டு”
“ஏன் பிரச்சினை பண்றீங்க... சொல்லுங்கன்னா சொல்லுங்களேன்...”
“சேலஞ்சா எடுத்துக்கோ.. கண்டுபிடி..”
“சரி... வேற ஏதாவது குளு கொடுங்க”
“நீ சொன்ன மாதிரி.. அந்த பாஸ்வேர்டு நான் காதலிச்ச பெண்ணோட பெயர்தான்... ஏழு எழுத்து...”
“ஆனால்.. எட்டு எழுத்துல்ல வரும்?”
“இல்லை... ஏழு தான்..”
“அப்ப எனக்குத் தெரியாம இன்னொரு பெண்ணையும் காதலிச்சிருக்கிங்களா?”
“உனக்குத் தெரிஞ்சுதான்..”
“யாரா இருக்கும்...?”
“நல்லா யோசிச்சுப் பாரு... உன்ட நான் நிறைய தடவை சொல்லியிருக்கேன்...”
“ஞாபகம் இல்லீங்க... சொல்லுங்களேன்.. எனக்குத் தலையே வெடிச்சிரும் போல இருக்கு...”
“உனக்கு இப்ப என்ன என்னோட பாஸ்வேர்டு தெரிஞ்சுக்க வேணும் அவ்வளவு தானே?”
“ஆமா...!”
“பேப்பரும் பேனாவும் கொடு..”
“சும்மா... சொல்லுங்க...”
“எழுதியே கொடுத்திறேனே...?!”
“உங்க பக்கத்தில தான் பேப்பரும் பேனாவும் இருக்கு!”
“உன் பிடிவாதத்திற்கு அளவே இல்லாம போச்சு...”
அருகில் இருந்த காகிதக் கட்டில் இருந்து ஒரு காகிதத்தை கிழித்து அதனை நான்காக மடித்துக் கொண்டான். மடித்த காகிதத்தை மறுபடியம் பிரித்து ... காகிதத்தின் மையப் பகுதியில் எழுதி திரும்பவும் மடித்துக் கொடுத்தான்... அதை மிகுந்த ஆர்வத்தோடு திறந்து பார்த்தாள் ஜானகி... அதில் எழுதப் பட்டிருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தாள்... மூக்கின் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது...
“உங்களை...” பல்லைக் கடித்துக் கொண்டு எப்பவும் துணைக்கு வரும் அகப்பை கரண்டியைத் தேடத் தொடங்கினாள்...
“எஸ்கேப்...” என்று அலறிக் கொண்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்து இருந்தான்.. ராம்...
காற்றில் கீழே விழுந்த அந்த காகிதத்தின் மையத்தில்
*******
என்று ஏழு நட்சத்திரங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பல்லைக் காட்டிக் கொண்டு இருந்தன....!
பி.கு; உங்களுக்கு ராமின் பாஸ்வேர்டு தெரியுமானால் JANA’KEY’ யிடம் கொடுத்து உதவுங்களேன்.. ;-)
Subscribe to:
Posts (Atom)

