Tuesday, March 16, 2010

பாஸ்வேர்டு - மொக்கை ;-)

“ராம்...”

“சொல்லும்மா...”

“மெயில் செக் பண்ணனும்”

“பண்ணு..”

“உங்க லாகின்ல இருந்து ... மெயில் செக் பண்ணனும்”

“ஏன் உன் லாகின் என்னாச்சு....?”

“அப்படி என்ன தான் உங்க லாகின்ல இருக்கு?”

“நான் உன்னோட லாகின் பத்தி இதுவரைக்கும் கேட்டதே இல்லை”

“நமக்குள்ள என்ன ஒளிவு மறைவு?”

“எல்லாத்தையும் பகிர்ந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான்...”

“பாஸ்வேர்டு கொடுங்க... இன்னைக்கு உங்க லாகின்ல அப்படி என்ன இருக்குன்னு நான் பார்த்தே ஆகணும்!”

“அதுல நீ தெரிஞ்சுக்க வேண்டியது ஒன்னுமே இல்லை”

“இல்லை... எனக்குத் தெரியும்”

“என்ன தெரியும்?”

“உங்க பழைய காதலியோட பெயரைத்தானே பாஸ்வேர்டா வைச்சிருக்கீங்க?”

“ட்ரை பண்ணிப் பாரேன்”

“பார்த்துட்டேன்... உள்ளே போகலை...”

“பின்ன..?”

“கண்டுபிடிக்கக் கூடாதுன்னு அந்த பெயரை நீங்க குழப்பி வைச்சிருக்கலாம்...”

“பெர்முடேஷன் காம்பினேஷன் வேணா போட்டு பாரு... ஏழே ஏழு எழுத்துதான் என்னோட பாஸ்வேர்டு”

“ஏன் பிரச்சினை பண்றீங்க... சொல்லுங்கன்னா சொல்லுங்களேன்...”

“சேலஞ்சா எடுத்துக்கோ.. கண்டுபிடி..”

“சரி... வேற ஏதாவது குளு கொடுங்க”

“நீ சொன்ன மாதிரி.. அந்த பாஸ்வேர்டு நான் காதலிச்ச பெண்ணோட பெயர்தான்... ஏழு எழுத்து...”

“ஆனால்.. எட்டு எழுத்துல்ல வரும்?”

“இல்லை... ஏழு தான்..”

“அப்ப எனக்குத் தெரியாம இன்னொரு பெண்ணையும் காதலிச்சிருக்கிங்களா?”

“உனக்குத் தெரிஞ்சுதான்..”

“யாரா இருக்கும்...?”

“நல்லா யோசிச்சுப் பாரு... உன்ட நான் நிறைய தடவை  சொல்லியிருக்கேன்...”

“ஞாபகம் இல்லீங்க... சொல்லுங்களேன்.. எனக்குத் தலையே வெடிச்சிரும் போல இருக்கு...”

“உனக்கு இப்ப என்ன என்னோட பாஸ்வேர்டு தெரிஞ்சுக்க வேணும் அவ்வளவு தானே?”

“ஆமா...!”

“பேப்பரும் பேனாவும் கொடு..”

“சும்மா... சொல்லுங்க...”

“எழுதியே கொடுத்திறேனே...?!”

“உங்க பக்கத்தில தான் பேப்பரும் பேனாவும் இருக்கு!”

“உன் பிடிவாதத்திற்கு அளவே இல்லாம போச்சு...”



அருகில் இருந்த காகிதக் கட்டில் இருந்து ஒரு காகிதத்தை கிழித்து அதனை நான்காக மடித்துக் கொண்டான். மடித்த காகிதத்தை மறுபடியம் பிரித்து ... காகிதத்தின் மையப் பகுதியில் எழுதி திரும்பவும் மடித்துக் கொடுத்தான்... அதை மிகுந்த ஆர்வத்தோடு திறந்து பார்த்தாள் ஜானகி... அதில் எழுதப் பட்டிருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தாள்... மூக்கின் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது...

“உங்களை...” பல்லைக் கடித்துக் கொண்டு எப்பவும் துணைக்கு வரும் அகப்பை கரண்டியைத் தேடத் தொடங்கினாள்...

“எஸ்கேப்...” என்று அலறிக் கொண்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்து இருந்தான்.. ராம்...

காற்றில் கீழே விழுந்த அந்த காகிதத்தின் மையத்தில்

*******

என்று ஏழு நட்சத்திரங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு பல்லைக் காட்டிக் கொண்டு இருந்தன....!

பி.கு; உங்களுக்கு ராமின் பாஸ்வேர்டு தெரியுமானால் JANA’KEY’ யிடம் கொடுத்து உதவுங்களேன்.. ;-)

No comments:

Post a Comment