Sunday, October 25, 2009

சாதலினும் கொடிது இவ்வையத்தில் வாழ்தல்...!

இப்பொழுதெல்லாம் சில விசயங்கள் பழகிவிட்டன. என்ன நடந்தாலும் என்னுடைய மனது ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்து விட்டது என்றே தோன்றுகிறது. ஒரு வேளை பெரிய இழப்பு ஒன்றை சந்தித்து விட்டதாலோ என்னவோ இப்பொழுது சந்திக்கும் இழப்புகள் எல்லாம் தூசு போல் தெரிகிறது போலும்.

என் மகிழ்ச்சி, வேதனை, சுகம், துக்கம், கோபம் என எல்லாவற்றையும் பார்த்த இடம் அது. என்னை ஊட்டி வளர்த்திட்ட இடம் அது!... இன்றைய என் நிலைமைக்கு அந்த இடம் தான் காரணம்...

‘நீ பிறந்த ராசிடா மைதீ... அப்பதான் நான் இந்த கடையை ஆரம்பிச்சேன்’ ... எனக்குள் கர்வம் அப்படியே கொப்பளிக்கும்... ஒரு இனம் புரியாத பெருமை என்னை வந்து ஆட்கொள்ளும்...

என்னால் முடிந்தவரை முயன்று விட்டேன் ... விதியின் வல்லமைக்கு முன் நான் ஒரு சிறு தூசு என்பதை என் மனதில் மிக ஆழமாக இன்னொரு முறை உணர்த்திவிட்டது. என் சக்திக்கு அப்பாற்பட்டு எல்லா விசயங்களும் நடந்து விட்டன!!!...

இன்னும் என்ன எல்லாம் செய்ய இந்த விதி காத்திருக்கிறது... என்னைக் கவலை என்னும் கருப்பு மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது... எப்படி வெளியேறப் போகிறேனோ? தெரியவில்லை...

இழப்புகள் தொடர்கின்றன.... வழக்கம் போல் காலத்தின் கொடிய கரங்களில் என்னை சமர்ப்பிக்கறேன்... அது பதில் சொல்லட்டும்...

No comments:

Post a Comment