Sunday, August 16, 2009

ஆண்டொன்று போனால்....!

இன்று என் வயதில் ஒன்று கூடிப் போய் விட்டது.... இத்தருணத்தில் பழையவை பல நினைவுக்கு வந்தாலும்... பாரதியாரின் கீழ்க்கண்ட பாடல் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்...

நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி,சிவசக்தி!-என்னை
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்
தசையினைத் தீ சுடினும்-சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுலதோ?.


மிகச் சிலருக்கே என் உண்மையான பிறந்த நாள் தெரியும் … வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி…

No comments:

Post a Comment