‘வேற ஃபோட்டோ கொடுங்க’
‘என்ன பிரச்சினை?’
‘தலை பெரிசா இருக்கணும்’
‘பெரிசாத்தானாங்க இருக்கு’
‘ஃபோட்டாவில இருக்கணும்’
‘இங்க இருக்கிறதுதான அங்க இருக்குது...’
‘சார்... இந்தப் படத்தைப் பாருங்க.. பாஸ்போர்ட் போட்டாதான் ஆனால் தலையை மட்டும் ஃபோக்கஸ் பண்ணியிருக்காங்க பாருங்க..’
‘கரெக்ட்.. மற்றவங்களை விட எனக்கு தலை பெரிசு.. அதனால தனி போக்கஸ் தேவையில்லைன்னு நினைக்கிறேன்’
‘அனுப்பிடுறேன்... ஏதாவது பிரச்சினைன்னா திரும்பி முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்?!’
‘நாளைக்கு புதுசா எடுத்துட்டு வர்றேன்’
வீட்டுக்கு வந்து மூலை முடுக்கு எல்லாம் தேடி விட்டேன்... சமீபத்தில் எடுத்த படத்தைக் காணவில்லை... ஜம்பமாக கொண்டு வர்றேன்னு சொல்லியாகி விட்டது... புதிதாய் ஃபோட்டா எடுக்கலாம் என்றால்... சின்ன பிரச்சினை.. . சிவகாமியின் நினைவுகள் தாடியாய் அடர்ந்த அமேசான் காடுகள் போல வளர்ந்து கிடக்கிறது... சீர்படுத்தி ஃபோட்டா எடுக்கிறதுக்குள்ள.. திரும்ப தாடி வளர்ந்திடும்.. என்ன செய்யலாம்?.... யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது ... 2006 ஆம் ஆண்டு நான் எழுதிய ஒரு கவிதை (ஒன்றுக்கு கீழே ஒன்று எழுதினால் அது கவிதை தானே?) கண்ணில் புலப்பட்டது...
பொதுவாக தாளில் கிறுக்கி அதனைக் கிழித்து விடுவேன் (என்ன பழக்கமோ?.. என்ன படித்துக் கிழித்தேன்னு யாரும் கேட்டுறக் கூடாதில்லை?)... இது எப்படியோ தப்பித்து விட்டிருக்கிறது... கஷ்டத்தோட கஷ்டமா கீழே இருப்பதையும் படிச்சிருங்க..
தலைப்பு:-
கனவு
=====
என் நினைவெல்லாம் கனவு
கனவினிலே ஓர் நினைவு
அந்த நினைவினில் தெரிகிறதோர்
அழகிய வீடு! அங்கே...
அன்பிற்கு அம்மா
அரவணைப்பிற்கு அப்பா
சண்டையிட தங்கைகள்
பங்கிற்கோர் பங்காளி
வீட்டு வாயிலிலே என்
பெயர் சொல்லும் ரோஜாக்கள்
எதிர்வீட்டு ராஜா
மச்சிவீட்டு ராணி
சண்டைக்கு அண்டை வீடு
கனவே கலைந்து விடாதே!
வாழ்க்கை சக்கரத்தின் வேகமான
சுழற்சியில்
என் நினைவுகளில் கனவுகளையும்..
கனவுகளில் பசுமையான நினைவுகளையும்...
தேடித் தேடி களைப்புற்று
உறங்கும் வேளையில்
கனவு!
ஆம்...
என் நினைவெல்லாம் கனவு
கனவினிலே ஓர் நினைவு
கனவுக்குள் ஓர் கனவு...!
Thursday, October 29, 2009
Monday, October 26, 2009
வழி தெரியுமா?
‘கிளம்பலையா?’
‘சிவா கூட வந்துர்றேங்க..’
‘வழி தெரியுமா?’
சிவாவைப் பார்த்தேன்... ‘எனக்குத் தெரியுங்க... ’ சொல்லி விட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தான்...
பதினைந்து நிமிடம் கழித்து....
‘எப்படிடா தம்பி போகணும்?’
‘இதில நம்ம ரைட்டுல திரும்பணும்..’
‘ஏதோ நேராகப் போகணும்னு பேசிக்கிட்டாங்க’
மறுபடியும் சிரித்தான்..
‘தம்பி ...! அலைய விடாதடா.... வழி தெரியுமா?’
‘என்னங்க எனக்குத் தெரியாதா வழியா சென்னையில’
அன்று நமது மக்கள் திடிரென்று கை கொடுக்க போக வேண்டிய இடத்திற்கு சரியாகப் போய் சேர்ந்தோம்...
இன்று!...
‘நம்ம உட்லாண்ட்ஸ்ல சாப்பிடலாமா?’
‘தாராளமா’
கார்த்திக் முன்னே தனது வண்டியில் சென்று விட.. சிவாவை நோக்கி ‘தம்பி... உட்லாண்ட்ஸ்க்கு வழி தெரியுமாடா?’
முன்னே சென்று கொண்டு இருந்தவன் பின்னோக்கி திரும்பி விசமமாக புன்னகைத்தான்...
நான் கார்த்திக்கைப் பின் தொடர எத்தனித்தேன்!... :-)

Sunday, October 25, 2009
சாதலினும் கொடிது இவ்வையத்தில் வாழ்தல்...!
இப்பொழுதெல்லாம் சில விசயங்கள் பழகிவிட்டன. என்ன நடந்தாலும் என்னுடைய மனது ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்து விட்டது என்றே தோன்றுகிறது. ஒரு வேளை பெரிய இழப்பு ஒன்றை சந்தித்து விட்டதாலோ என்னவோ இப்பொழுது சந்திக்கும் இழப்புகள் எல்லாம் தூசு போல் தெரிகிறது போலும்.
என் மகிழ்ச்சி, வேதனை, சுகம், துக்கம், கோபம் என எல்லாவற்றையும் பார்த்த இடம் அது. என்னை ஊட்டி வளர்த்திட்ட இடம் அது!... இன்றைய என் நிலைமைக்கு அந்த இடம் தான் காரணம்...
‘நீ பிறந்த ராசிடா மைதீ... அப்பதான் நான் இந்த கடையை ஆரம்பிச்சேன்’ ... எனக்குள் கர்வம் அப்படியே கொப்பளிக்கும்... ஒரு இனம் புரியாத பெருமை என்னை வந்து ஆட்கொள்ளும்...
என்னால் முடிந்தவரை முயன்று விட்டேன் ... விதியின் வல்லமைக்கு முன் நான் ஒரு சிறு தூசு என்பதை என் மனதில் மிக ஆழமாக இன்னொரு முறை உணர்த்திவிட்டது. என் சக்திக்கு அப்பாற்பட்டு எல்லா விசயங்களும் நடந்து விட்டன!!!...
இன்னும் என்ன எல்லாம் செய்ய இந்த விதி காத்திருக்கிறது... என்னைக் கவலை என்னும் கருப்பு மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது... எப்படி வெளியேறப் போகிறேனோ? தெரியவில்லை...
இழப்புகள் தொடர்கின்றன.... வழக்கம் போல் காலத்தின் கொடிய கரங்களில் என்னை சமர்ப்பிக்கறேன்... அது பதில் சொல்லட்டும்...

Saturday, October 10, 2009
கண்டுபிடிப்பு - 1
கி.மு. 245 - மன்னர் ஹெய்ரான்(King Hieron) அவர்களுக்கு தனது பொற்கொல்லன் தன்னை ஏமாற்றி விட்டதாக ஐயம் எழுகிறது. தனது கீரிடத்தில் இருந்த தங்கத்தில் ஒரு சிறு பகுதியை பொற்கொல்லன் அபகரித்து விட்டதாக நினைக்கிறார். இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நமது கதையின் நாயகனிடத்தில் இப்பணியை ஒப்படைக்கிறார். இது மிகவும் கடினமான பணி என்பது நமது தலைவருக்குப் புரிந்து விடுகிறது.
ஒரே யோசனையில் மூழ்கிப் போனார். ஒரு நாள் தனது குளியல் தொட்டியில் படுத்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு வித்தியாசமான யோசனை தோன்றியது. தனது உடல் தண்ணீருக்கு அடியில் செல்லும் போது நீரின் மட்டம் உயரத் தொடங்கியதையும் தனது உடல் எடை குறைந்தது போலவும் உணர்ந்தார். தண்ணீரில் இருந்து மேலே வந்ததும் தண்ணீர் சமநிலை அடைவதையும் தனது உடல் எடை சரியான அளவில் இருப்பதையும் உணர்ந்தார்.
தனது உடல் எடை குறைந்தது போல உணரக் காரணம் என்ன?
தண்ணீருக்குள் அமிழும் பொழுது தண்ணீரானது தன்னை மேல் நோக்கித் தள்ளி இருக்க வேண்டும் அதனால் தான் தண்ணீருக்குள் இருக்கும் பொழுது தனது எடை குறைந்தது போல் உணர முடிந்ததாகக் கண்டுபிடித்தார்.
இதன் மூலம் நமது தலைவர் உலகத்திற்கு ஒரு கோட்பாட்டைக் கொடுத்தார் . கோட்பாடு பின்வருமாறு ‘நீரினில் ஒரு பொருள் தான் இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் அளவுக்கு ஏற்ப அது மேல் நோக்கி உந்தப்படும்’
சரி மன்னருக்கான விடை?
இரண்டு கொள்கலன்களில் சமஅளவு நீரை எடுத்துக் கொண்டு ஒன்றில் கீரிடத்தையும் மற்றொன்றில் சம்மான அளவு தங்கத்தையும் உள்ளே போடும் பொழுது கீரிடம் இருக்கும் கொள்கலனில் அதிகப் படியான அளவு நீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் கீரிடத்தில் வேறு உலோகம் கலந்திருப்பதை நிருபித்தார்.
சரி யார் அவர்?
உலகத்திற்கு மிதத்தல் விதியை அறிமுகப் படுத்திய ‘ஆர்க்கிமிடிஸ்’ ...
‘யூரேக்கா.. யூரேக்கா என்று கத்திக் கொண்டே ஒடியவர் தான்...
பி.கு: இது போல் இனி மேல் படித்தவைகளை இங்கே பதிக்கலாம் என்று இருக்கிறேன்.. தவறாய் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதால் இணையத்தை உலவி கண்டுகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

சிவகாமியின் சபதமும் என்னுடைய முடிவும்!!!
மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு வார இறுதியில் ‘சிவகாமியின் சபதம்’ வாசிக்கத் தொடங்கினேன். வழக்கம் போல் என் மனம் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்றவாறு ஆட்களைத் தேர்வு செய்யத் தொடங்கியது. மாமல்லன் பாத்திரத்தை ஏற்க யாரும் முன் வரவில்லை. ஆனால் சிவகாமியாக ‘அவள்’ வந்து நின்றாள். என் மனதில் புயல் அடிக்கத் தொடங்கியது.
கல்கியின் வரிகளில் வழக்கம் போல் மூழ்கி விட்டாலும் ‘சிவகாமி’ வரும் போது எல்லாம் என் மனம் கிளர்ச்சி அடையத் தொடங்கியது. ஆனால் நான் ‘மாமல்லன்’ இல்லை என்ற உண்மை மிக அதிகமாக சுடத் தொடங்கியது. சரி வேறு பாத்திரமாக மாறி விடலாம் என்றால் இந்த மனது சம்மதிக்க மாட்டேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறது. ஆனால் அவளோ என்னை மாமல்லனாக மாற்றாமல் விட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்...
நான் ஏதோ புதிதாய் தோன்றியது போல் என் மனது ஆர்பரிக்கிறது. பழையவனைக் கொன்று எங்கோ ஒரு மூலையில் புதைத்து விட்டதாக கொக்கரிக்கிறது. ஆனால் பழையவனின் எச்சம் என்னுள் சிறிது இருப்பதாகவே நம்புகிறேன். காணாமல் போகச் செய்த அவளை மறந்து விட்டு தொலைந்து போன என்னைத் தீவிரமாகத் தேடுவதென்று முடிவு செய்து விட்டேன். இது வரைக்கும் யாருக்கும் பயம் கொள்ளாத நான் முதன் முறையாக என்னைப் பார்த்து அச்சம் கொள்கிறேன். என் இதயம் துருப்பிடிக்கத் தொடங்கி விட்டதென்று ஐயம் ஏற்படுகின்றது.
சரி நீ ஏன் மாமல்லனாக மாறக் கூடாது? ஒரு சராசரியான மனிதனான என்னை அப்படி நினைத்துப் பார்ப்பது ஒரு மலைக்கும் அதன் அடிவாரத்திற்கும் உண்டான வேறுபாட்டையே வெளிச்சம் போட்டுக் காட்டும். தகுதியில்லாத ஒன்றுக்கு பேராசைப் படுவது அப்பட்டமாகத் தெரியும். சிவகாமியின் சபதம் வாசிப்பதை அடியோடு நிறுத்தியாகி விட்டது. ஆம்!.. மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தியாகி விட்டது... இப்படிச் செய்வது எனது தனிச் சிறப்பு!!!
பழையவன் திரும்பி வரும் வரையில் ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் வாழ்க்கை வரலாறு’ வாசிக்கத் தொடங்கி விட்டேன். படித்துக் கொண்டு இருக்கும் பொழுது தூரத்தில் தூக்கி எறியப் பட்ட சிவகாமியின் சபதம் புத்தகத்தின் முகப்பு அட்டையில் இருந்து அவள் என்னைப் பார்த்து புன்னகைக்கிறாள் பலமாக!!!

Friday, October 2, 2009
வரன்?!
"மைதீ.... இங்கே வா"
"ம்... சொல்லுங்க.."
"100 பவுன் நகை... லட்ச ரூபாய் ரொக்கம்... வண்டி ஒன்னு.."
"என்னப்பா இது?"
"பொண்ணுக்கு உன் படிப்புதான்... இளையான்குடி... நம்ம கணேசன் அண்ணன் தான் கூட்டிட்டு வந்தாரு.."
"என்ன சொன்னீங்க?"
"தங்கச்சிகளுக்கு கல்யாணம் முடிச்சதுக்கப்புறம் தான் நீ கல்யாணம் பண்ணிப்பன்னு சொன்னேன்... இருந்தாலும் உன்ட ஒரு வார்த்தை கேட்கலாம்னு..."
"கரெக்ட்டாகத் தான் சொல்லி இருக்கிங்க... நான் இப்ப தான் படிப்பை முடிச்சிருக்கேன்... ஒரு எட்டு வருஷம் போச்சுன்னா நல்லா இருக்கும்..."
"உனக்கு வருத்தம் ஒன்னும் இல்லையே.... போட்டா வேணும்னா கொண்டு வரச் சொல்லட்டுமா... ஒரு தடவை பார்த்துட்டன்னா.."
"இல்லைப்பா கல்யாணம் இப்ப இல்லைங்கிறப்போ... நம்ம அவங்கள்ட்ட கேட்க வேணாம்னு பார்க்கிறேன்..."
யார் அவர்கள்? ஒருவேளை நான் அன்று கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தால்??? என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை...
என்ன செய்ய இந்த விதி காத்திருக்கிறது.... நான் கல்யாணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா?... எனக்கானவள் இந்த உலகத்தில் இருக்கிறாளா? தேட வேண்டுமா? அல்லது தாமாக தேடி வருமா? நான் என்ன தான் செய்ய வேண்டும்....?
இப்போதைக்கு நான் எதையும் செய்யப் போவதில்லை என்றே முடிவு எடுத்து விட்டேன்... வரும் போது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுவதாக எண்ணம்...
காத்திருப்போர் பட்டியலில் எனது பெயர் இப்போதைக்கு...
காலம் பதில் சொல்லட்டும்...

அறிவுரை - 1
"உனக்கு எதுக்குடா தேவையில்லாத வேலை?"
"வீராச்சாமி வரலை... நீங்க தனியா கஷ்டப்படுவிங்க அதனால தான்..."
"பள்ளிக்கூடம் இருக்கும்ல நாளைக்கு?"
"அது பார்த்துக்கலாம்...!"
"கோட்டை விட்டுடாதேடா! உன்னையத் தான் நம்பி இருக்கேன்..."
"கவலைப்படாதிங்க அந்த வேலையை முடிச்சிட்டுதான் இதை செய்றேன்...! தினமும் இவ்வளவு வேலை செய்யிறிங்களே!.. கஷ்டமா இல்லையா?"
"கஷ்டப்படாம எதுவுமே கிடைக்காதுடா... நான் திண்டுக்கல்லுக்கு வந்த போது எனக்கு காலானா சம்பளம்... இந்த இரண்டு கடையை உருவாக்கிறதுக்கு நான் உன் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டோம்னு உனக்குத் தெரியாதுடா...!"
"இப்பதான் எல்லாத்தையும் உருவாக்கிட்டிங்கள்ள ... அப்புறம் ஏன் உழைச்சிக்கிட்டே இருக்கீங்க?"
"என்னோட பொறுப்பு இப்பதான் கூடி இருக்கு... என்னைய நம்பி இருபது குடும்பங்கள் பிழைக்குது... நான் உழைக்கறத நிப்பாட்டினா அவங்களுக்கு ஒரு வழியை காட்டணும்..."
"சரிப்பா.. அதுக்காக நீங்க சமயத்தில சப்ளை பார்க்கிறதையும் ... கல்லில நின்னு ஆம்லேட் போடுறதையும் எந்த கணக்கில சேர்க்கிறது....? அதுக்கு ஒரு ஆளைப் போடலாம்ல?"
"எனக்கு என்னைக்கு முதலாளி அப்படிங்கற நினைப்பு வருதோ... அன்னைக்கே எனக்கு சொகுசு தேவைப்படும்.... பொறுப்புகள் தவறும்.. வேலைகள் தேங்கும்... உனக்கு நான் ஒன்னு சொல்றேன்... எவ்வளவு பெரிய இடத்துக்குப் போனாலும் இந்த கடையில நீயும் ஊழியம் பார்த்ததை மனசில வைச்சிக்கோ...."
"ஏன்?"
"என்னைக்கு நீ பெரிய ஆள் ... உன்னால தான் எல்லாம் நடக்குது அப்படின்னு நம்ப ஆரம்பிக்கிறியோ அன்னைக்கே நீ போற பாதை தவறானதாயிடும்..."
"புரியலைப்பா... நான் ஏன் அப்படி நினைக்கனும்?"
"இல்லப்பா.... மனிதனுக்கு எப்பவும் ஒரே மனநிலை இருக்கும்னுசொல்ல முடியாது... என்னைக்கு உனக்கு தலைக்கனம் அதிகமாகுதோ... அன்னைக்கு உன்னால உன் வேலை செய்ய முடியாது... நம்பளை இன்னைக்கு தொழிலில அடிச்சுக்க ஆளே கிடையாது... அப்படிங்கறது உண்மை... ஆனா அதை மனசில வைச்சிட்டு வேலை பார்த்தோம்னா இம்மி அளவு கூட முன்னேற முடியாது... இன்னைக்கு இந்த கடை ஒடுறது என்னால தான் அப்படின்னு நான் சொன்னேன்னா அது எவ்வளவு பெரிய தப்பு!"
"ஏன்? உங்களால தான ஒடுது?"
"தப்புப்பா... பணம் போடுறதினாலேயே எல்லாம் நடந்திருமா என்ன? இருபது பேரோட உழைப்பு தேவைப்படுதுல்ல... ஒருத்தர் படுத்துக்கிட்டா கூட ... நம்ம கடை நடத்துவதில கஷ்டம் வந்திரும்டா... புரியுதா? இப்ப சொல்லு என்னால மட்டும் கடை ஓடுதா?"
"இல்லைப்பா... எல்லாரும் வேணும்...."
"எல்லாரும் வேணும்.... மனசில வைச்சிக்கோ.... இன்னைக்கு நான் பணம் சம்பாரிச்சதை விட நாலு மக்க மனுசரை சம்பாதிச்சு வைச்சிருக்கேன்...."
......
அப்ப எனக்கு புரியலை ஆனா இப்போ புரியுது...
"பணம் நாம வாழும் வரைக்கும்... மக்க மனுசர் மனசில அவங்க வாழுற வரைக்கும்..."

Subscribe to:
Posts (Atom)