‘சரி... அடுத்து என்ன?’
‘நானும் அஜித்தும் பாலக்காட்டிற்குப் போறோம்...’
‘எதுக்கு?’
‘பழசிராஜா படம் பார்க்கிறதுக்கு’
‘தேவையில்லாத வேலைடா... இன்னும் ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி கிளம்பியிருந்தா சரியா இருந்திருக்கும்’
‘அதெல்லாம் தெரியாது... நீங்களும் கூட வர்றீங்க’
அட இது எப்போ?.. மனதிற்குள் பேசிக்கொண்டே அஜித்தை நோட்டமிட்டேன்... அவனும் உறுதியாயிருந்தான்... எனக்கு என்னமோ சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போல் இருந்தது...
‘தம்பி சொன்னா கேளுடா..’
‘முடியாதுங்க... வர்றீங்க’
‘சரி போகலாம்...’
அவசரமாகக் கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறி தங்குமிடம் சேர்ந்து மூட்டைகளை தயார் செய்து வாயிலில் நின்ற ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி உக்கடத்திற்கு சென்றோம்..
பாலக்காட்டிற்குக் கேரள விரைவு வண்டி ஒன்று கிளம்பிக் கொண்டிருந்தது... மூவரும் ஏறிக் கொண்டோம்... தம்பியும் அஜித்தும் நடுப்புறம் சென்று விட நான் வாயிலிலேயே தங்கி விட்டேன்... அது ஒரு விரைவு வண்டி என்பதால் வாயிலில் நான் நிற்பது தொந்தரவாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்... ஆனால்... கை நீட்டும் இடமெல்லாம் பேருந்து இளைப்பாறத் தொடங்கியது... ஒவ்வொரு நிறுத்தத்திலும் நடத்துனரால் முறைக்கப் பட்டேன்.... பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டே வந்தவர்
‘எவ்விட?’
‘பாலக்காடு... முன்னாடி டிக்கட் எடுத்துட்டாங்க’
‘பின்னே இவ்விட தன்னே எந்தா செய்யின்னுது....’ ஆமாம் ... அதுக்கு மேலே என்னை டேமேஜ் பண்ணியதை நானே எழுதக் கூடாது ;-). தலையை ஆட்டிக் கொண்டே நண்பர்களின் அருகில் வந்து நின்றேன்... நடத்துனருக்கு போரில் வெற்றி பெற்றதைப் போன்ற ஒரு மகிழ்ச்சி... அதன் பின் மூவரும் எதிர்காலச் சிந்தனைகளில் ஆழமாக மூழ்கிப் போனோம்...
எனக்கு ஒரு குறுந்தகவல் வந்திருப்பதாக ரஹ்மான் ‘புது வெள்ளை மழை’ பாடலை இசைத்துத் தெரியப்படுத்தினார்.. எடுத்துப் பார்த்தேன் ஏர்டெல் என்னை கேரளத்திற்கு அன்புடன் அழைத்து இருந்தது...
‘அப்ப நம்ம திரும்பி வரும் பொழுது.... வெல்கம் பேக் டூ தமிழ்நாடு அப்படின்னு செய்தி வருமா?’ வழக்கம் போல சிவா ஒரு புன்முறுவலுடன் வேறு திசையில் பேச்சைத் திருப்பினான்..
‘நாலு காட்சின்னா நம்ம போற நேரத்துக்கு டிக்கெட் கிடைக்காது’
‘பார்ப்போம்’
ஒரு வழியாக பாலக்காட்டை அடைந்தாயிற்று... ஆட்டோ ஓட்டுனர் மறுத்தாலும் தியேட்டருக்கு வந்தாயிற்று... பாதிப் படமாவது பார்த்து விட முடியாதா என்றொரு எண்ணம்.... ம்..ஹூம்... பழசிராஜாவைக் காணும் பேறு கிட்டவில்லை ;-)...
‘தம்பி.. அந்த போஸ்டரோடவாவது என்னைய ஒரு போட்டா எடுத்திடுடா...’
‘எதுக்கு சொல்றீங்கன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு... பெரிய மனுசனுக்கு இதெல்லாம் அழகா? வாங்க’ என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு கோபப் படுறான்? திரும்பி பார்த்தேன்... போஸ்டரில் கன்னிகா... கோபப் படத்தானே செய்வான்...
‘பக்கத்தில எங்கேயாவது கூட்டிட்டு போ’
‘மழை பேயுதுல்ல’
‘சரி சிப்ஸாவது வாங்கலாம்டா’
மறுபடியும் ஆட்டோ.. ஆனால் இந்த முறை தொலை தூரத்திற்கு... பார்வைக்கு கிடைத்த இடமெல்லாம் பச்சை பசெலென... மனதிற்கு ரம்யமாக இருந்தது... படத்திற்கு போகாதது நல்லதிற்கென்றே மனது யோசிக்கத் தொடங்கியது...
‘இது ஏது புழா’
‘கல்பாத்தி’
‘எத்தரை சமயம் எடுக்கும்’
‘பத்து மின்ட்டு’
வழியில் ஒரு இடத்தில் சுடச்சுட சிப்ஸ் தயாரித்துக் கொண்டு இருந்தனர்...
‘எத்தரை’
‘கிலோ நூற்றி இருபது’
‘ஒரு கிலோ ஆபிஸுக்கு.. அரைக்கிலோ வீட்டிற்கு..’ எனக்கு அரைக் கிலோ என்றான் அஜீத்...
நிறைய சிப்ஸ் வகைகள் இருந்தாலும் மனது தான் கண்ட பசுமையில் இருந்து திரும்பாததால் அதன் மேல் லயிக்கவில்லை... அடுத்து ஆட்டோ ஓலக்கோடு இரயில்வே நிலையத்தை அடைந்தது.. . சினேகா ஸ்ரீதேவி சில்க்ஸின் விளம்பர அட்டையில் புன்னகைத்துக் கொண்டு இருந்தாள்...
‘விசாரிச்சிட்டு வாடா’
‘நீயே போயிட்டு வா அலியா’
சிறிது நேரம் அங்கேயும் இங்கேயும் பார்வையை சுழற்றிக் கொண்டு இருந்தேன்... கண்ணுக்குப் பசுமையைத் தவிர இன்னும் நிறையைவே காணக் கிடைத்தன..;-)..
‘இன்னும் ஒரு மணி நேரம் கழித்துதான் இருக்கு... அதுக்குள்ள நாம பஸ்ஸில போயிரலாம்’ . அமைதியாக ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டேன்... பேருந்து நிலையத்தை அடைந்த உடன் எங்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்த்து... ஒரு நீண்ட வரிசையில் நின்று தான் கோயம்புத்தூருக்குத் திரும்ப வேண்டும்... என்ன செய்ய?
‘அலியா... பதினைந்து நிமிஷம் நின்னா... ஒரு மணி நேரம் உட்கார்ந்திட்டு போகலாம்... என்ன சொல்ற?’
‘அது சரி அலியா... ஒரு மணி நேரம் நிக்க வைச்சு ஒரு மணி நேரம் உட்கார வைக்கிற மாதிரி செஞ்சிடாத’
‘அஞ்சு நிமிடத்திற்கு ஒரு முறை வண்டி இருக்குது.. பயப்படாதே’... வரிசையின் வடிவம் ஒரு “ப” வைப் போல் இருந்த்து... “ப” வின் ஒரு நுனியில் வரிசையின் ஆரம்பமும்..மற்றொரு நுனியில் வரிசையின் முடிவும் இருந்தது... முடிவில் இருந்து ஆரம்பித்தோம்..
ஆளுக்கொரு பழபச்சியுடன் பேருந்தில் ஏறிக் கொண்டோம்...
நான் கண்ட பசுமையான காட்சிக்காகவே இன்னும் ஒரு முறை மழைக்காலத்தில் பாலக்காட்டிற்கு சென்று வரலாமென்று இருக்கிறேன்....
‘அப்ப .. சிப்ஸ் வாங்க மட்டும் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்’ நான் சொல்லி முடிக்க எங்கள் மூவரிடமிருந்து சிரிப்பொலி கிளம்பியது...
Tuesday, November 10, 2009
தேன்...!
அப்படியே காலார நடந்து விட்டு அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.... காய்ச்சலின் காரணமாக வாய் தனது உச்சகட்ட கசப்பு நிலையை உணர்த்தியது...
‘அண்ணே .. ஒரு ...’
‘வேற..’
‘இரண்டு தேன் மிட்டாய்’.... அருகில் இருந்த ஒரு பொடியன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்...
‘வேற..’
‘அவ்வளவுதான்...’
மறுபடியும் அந்த பொடியன் முகத்தில் புன்னகை... என்ன என்பதைப் போலப் பார்த்தேன்... தலையை ஆட்டி ஒன்றும் இல்லை என்று சைகை செய்து புன்னகைத்தான்...
ஏற்கனவே விகாரமாக இருக்கும் எனது முகம்.. காய்ச்சலினால் இன்னும் அதிகமாக விகாரமாக ஆகி இருந்தது... பொடியன் வெறுப்பு ஏற்றியதில் இன்னும் அதிகமாக... முதலில் வாங்கிய சமாச்சாரத்திற்கு உயிர் கொடுத்து விட்டு பொடியனைக் கவனிக்கத் தொடங்கினேன்..
வேண்டியதை வாங்கிக் கொண்டு நடையைக் கட்டத் தொடங்கினான்.. சிறிது தூரம் சென்று திரும்பி மீண்டும் புன்னகைத்தான்... இந்த முறை ஆவலை அடக்க முடியவில்லை.. நிற்குமாறு சைகை செய்தேன்.. ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிப் போனான்... நடந்தவைகளை அசை போடத் தொடங்கினேன்... நான் “தேன் மிட்டாய்” என்று சொன்ன போது தான் அந்தப் பொடியன் சிரித்ததாகத் தோன்றியது...
‘அண்ணா.. இந்த மிட்டாய்க்கு பேரு.. “தேன் மிட்டாய் தானே”..’
கடைக்காரர் ஒருவாறு முறைத்துக் கொண்டே ‘ம்... ஆமாம்.. என்ன விசயம்?’
‘ஒன்னுமில்லைங்கன்னா... ‘
அப்ப மிட்டாய் பேரையும் தப்பா சொல்லலை...ஏன் சிரித்தான்.. ஒருவேளை இவ்வளவு பெரிய உருவம் இப்பதான் தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடுறதைப் பார்க்கிறானோ? ஏன் இப்ப சாப்பிட்டதுனால என்ன ஆகிடுச்சாம்?
எனக்கு எப்பவுமே தேனின் மேல் ஒரு அதீத ஆசை இருந்து வந்து கொண்டு இருக்கிறது. தேன் மிட்டாயில் தேன் இருப்பது இல்லை என்றாலும் தேன் என்ற பெயர் இருப்பதால் எனக்குப் பிடித்து விட்டது போலும் ;-)...
சில சமயம் என்னை ‘வின்னி-த-பூ’ கரடியாக நினைத்துக் கொள்வதும் உண்டு... அதிகமாகத் தேன் குடித்து வயிற்றுப் போக்கினையும் சந்தித்த சம்பவங்களும் உண்டு;-)... தேனை உள்ளங்கையில் ஊற்றி அதனை நாவினால் எடுத்து... அடப் போங்கப்பா... பழமொழி சொன்னா ஆராயக் கூடாது ..அனுபவிச்சி பார்க்கணும் ;-)..
ஒரு தடவை எப்படியாவது தேன் எடுக்கும் பொழுதே அதனை சுவைத்து விட வேண்டும்.... என்ன.. தேனீக்களை நினைத்தால் தான் சற்று உதறல் எடுக்கிறது... இப்பொழுது கூட ஈசா யோகா மையத்தில் வாங்கி வந்திருந்த தேனை ஒரு கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்... (வாய்க் கசப்பு தீர்ந்த பாடில்லை ;-(..)
சரி.. எனக்கும் தேனுக்குமான பந்தத்தை அந்தப் பொடியன் எவ்வாறு அறிவான்... தெரியாமல் சிரித்திருப்பான்... மன்னித்து விடுவோம்...;-)

ஏமாளி மாமா...!
‘ஒன் ஹார்டு மார்னிங்...’
‘பாப்பா... கதை ஆரம்பிக்கும் போது இப்படியா பாப்பா ஆரம்பிக்கிறது?... ஒன் ஃபைன் மார்னிங்னு ஆரம்பிக்க வேண்டாமா?’
‘மாமா.. பாட்டி ஏமாந்து போயிடுவாங்கள்ள ... அப்ப எப்படி அது ஃபைன் மார்னிங் ஆகும்?’
‘பாட்டிக்கு வேணும்னா அது ஹார்டு மார்னிங்கா இருக்கலாம் பாப்பா.. ஆனால் கதை கேட்கிறவங்களுக்கு அது ஃபைன் மார்னிங் தானே?’
‘எங்க டீச்சர் இப்படித்தான் சொல்லித் தந்தாங்க...’
‘அப்ப சரி பாப்பா... கன்டினியூ பண்ணுங்க’
‘ஒன் ஹார்டு மார்னிங் எ கிரான்ட் மா வடா சுட்டிங்’
‘பாப்பா... என்ன இது.. வடா சுட்டிங்... இப்படியா டீச்சர் சொல்லித் தந்தாங்க?’
‘ஆமா...’
‘இல்ல .. இஸ் பிரிப்பேரிங்னு.சொன்னா நல்ல இருக்கும்ல’ (டேய் தம்பி... நீ பீட்டர்ல வீக்... அநாவசியமா மாட்டிக்காதடா... சின்னப் பொண்ணுட்ட அவமானப் படணுமாடா... என் மனதின் எச்சரிக்கையை உதாசிணப் படுத்திவிட்டு தொடர்ந்தேன்)
‘கதை சொல்லட்டுமா .. வேண்டாமா?’
‘சொல்லுங்க’
‘சரி.. ஒன் ஹார்டு மார்னிங் எ கிராண்ட் மா வடா சுட்டிங்.. அட் தேட் டைம் எ க்ரோவ் கேம் தேர்... மாமா.. ம் சொல்லவே மாட்டேங்கிறிங்க’
‘நீங்க கதை சொல்றதையே கவனிச்சிட்டு இருந்தேனா.. ம் சொல்ல மறந்துட்டேன்... சரி... “ம்”..’
‘இட் டுக் எ வடா அண்டு பிளை அவே’
‘ம்’
‘இட் சேட் இன் எ பிராஞ்ச் ஆப் எ ட்ரீ’
‘சரி.. அப்புறம்’
‘அட் தேட் டைம் எ ஃபாக்ஸ் கேம் தேர்’
‘சரி..’
‘நான் விளையாடப் போறேன் மாமா..’
‘மீதியையும் சொல்லிடுங்க பாப்பா’
‘ம்... நீங்க ஒரு ஏமாளி மாமா’
‘....’
சொல்லி விட்டு துள்ளிக் குதித்து ஓடி விட்டாள்... எப்படித்தான் கண்டுபிடிப்பாய்ங்களோ... ஐந்து நிமிடந்தானே பேசிக் கொண்டு இருந்தேன்... நான் நரியில்லையா பின்னே?... நீங்களே சொல்லுங்களேன்?

நினைவுகள்- 1
உடல் நிலை ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முந்தைய பழைய நிலையை எட்டி விட்டது... முடக்கிப் போட்டு விட்டது... இருப்பினும் வயதான காரணத்தால் ;-).. என்னால் அதிக நேரம் தூங்க இயலவில்லை... தரையில் புரண்டு கொண்டு இருக்கும் பொழுது... பழைய புகைப்படங்களின் ஞாபகம் வந்தது...
கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்... இதை எடுத்து விட்டு எனது நண்பர் ‘இந்த படத்தில உங்களுக்கும் உங்க பின்னாடி நிற்கிறவர்டையும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கு’ என்றார்... உங்களாலே கண்டுபிடிக்க முடியுதா?
என்ன கண்டுபிடிக்க முடியலையா?
‘அவர் கையில ஆயுதம் இருக்கு .. உங்க கையில இல்லை’
:-)

நீ ... கிளிப்பிள்ளை ;-)...
‘நான் எழுதுறதை நிப்பாட்டிட்டேன்...’
‘ம்... ஏன்?’
‘எழுத உட்கார்ந்தா அவளைப் பற்றி மட்டும் தான் எழுத வேணுமென்று தோன்றுகிறது!... என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாம என் மனதை எளிதாகக் காயப்படுத்தி விடுகிறார்கள்...’
‘உன் தப்பு தான்’
‘என்ன தப்பு? என்னுடைய தளத்தில் நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன்.. அதுக்கு எனக்கு முழு உரிமை இருக்கு’
‘இல்லைன்னு சொல்லலையே... என்னைக்குப் பொதுவில் உன் பிரச்சினையை எடுத்துட்டு வர்றியோ.. அப்பவே அதற்கான விமர்சனத்துக்கும் நீ தயாரா இருக்க வேணும்...’
‘விமர்சனம் பண்ணினால் பரவாயில்லை... ஆனால்...’
‘சரி... உன் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலா ஏன் உன்னுடைய தளத்தை உருவகப் படுத்துற’
‘இல்லை ... என்னுடைய நோக்கம் அது இல்லை’
‘நோக்கம் ... எதுவாக வேணுமென்றாலும் இருக்கட்டும்... உறுதிப்படுத்தப் படாத ஒரு விசயத்தை நீ இவ்வளவு தூரம் எடுத்துட்டு வந்ததே தப்பு’
‘.....’
‘சொல்லவும் மாட்ட... வெளியிலேயும் தெரியக் கூடாதுங்கிற.. மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு கிடக்கிற... போதும் சகிக்கலை...’
‘உனக்குமா?’
‘ஹா..ஹா...ஹா... நான் அந்த அர்த்தத்தில சொல்லலை...நீ எப்படி இருந்த ... எப்படி இருக்கிற... எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தான் இருக்கிறேன்... மாத்திக்க வாய்ப்பு இருக்கு’
‘.....’
‘உனக்கு அப்படியே எழுத வேணும் என்று தோனுச்சுனா... வழக்கம் போல காகித்தில எழுதி .... கிழிச்சிடு...’
‘அதுவும் சரிதான்... பகிர்ந்து கொள்ளக் கூடிய விசயத்தை மட்டும் பதிவில் போடுறேன்’
‘நீ ... கிளிப்பிள்ளை ;-)...’

Monday, November 2, 2009
இந்த நாள் இனிய நாள்...!
‘உங்களுக்கு அப்படி என்ன அந்த பொண்ணு மேல....?’ வார்த்தைகள் பளாரென என் கன்னத்தில் வந்து அறைந்தது... மனதைக் காயப்படுத்துவதற்கு இயற்கையிலேயே இறைவன் பெண்களுக்கு ஏதாவது வரம் கொடுத்திருப்பான் போலும்...
நிமிடத்தில் உடைந்து போன என்னை சரி செய்ய அடுத்த ஒரு மணி நேரம் தேவைப்பட்டது... என் குடும்பம் சமூகம் அனைத்தையும் மனதில் இருத்தி ஒரு வேகத் தடையாக மாற்றிக் கொண்டு முன்னை விட அதிக தீவிர கட்டுப்பாட்டு வளையத்திற்குள் நிறுத்திக் கொண்டு இருக்கிறேன்... மனதில் இப்படி ஒரு எண்ணம் எப்பொழுது முளைத்தது? ஒழுங்காகத் தானே எல்லாம் சென்று கொண்டு இருந்தது?
பொதுவாக என்னிடம் ஒரு கொள்கை உண்டு - வேலை செய்யும் இடம் கோயிலுக்கு சமம் ... அதன் புனிதத்தை நான் எந்த விதத்திலும் கெடுத்து விடக்கூடாது... இன்று வரை காப்பாற்றி வந்து விட்டேன்.... மனதில் இருந்த ஆசையை மற்றவர்கள் அறியச் செய்ததினால் வந்த விளைவு தான் இன்றைய மன உளைச்சலுக்குக் காரணம்...
ஆன வரை போதும்... இனி நான் இந்த தளத்திற்கு வருவதாய் இல்லை... என் மனதை எப்படி ஏமாற்றி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும்..
ஆதலால் சகல விதமான என் நண்பர்களுக்கு இப்பதிவின் மூலம் எனது வேண்டுகோள்; ‘இனி நடப்பவை மிக நல்லதாகவே நடக்கும்... காலையில் தோன்றும் பனித்துளி போல நான் ஒரு நல்ல நாளில் காணமற் போவேன்... நல்லோர்க்கு அழகு சொல்லாமற் பிரிவது... ஆனால் நான் நல்லவன் இல்லை ஆதலால்.. இப்பொழுது பிரிவோம் காலம் மனது வைத்தால் மீண்டும் சந்திப்போம்’
-முற்றும்-

Sunday, November 1, 2009
ரோஜாக் கூட்டம்
ஒரு வாரமாக அயராத உழைப்பின்(ஒன்றுமே செய்யவில்லை என்பது வேறு விசயம்... இருந்தாலும் ஒரு... விளம்பரம்..) காரணமாக தூங்கும் நேரம் எல்லாம் மாறி விட்டது. அலுவலகத்தில் இருந்து அன்று அதிகாலை தான் வீடு திரும்ப நேரிட்டது... கண்கள் சோர்வினால் எரியத் தொடங்கி இருந்தது... என்ன இருந்தாலும் தூக்கம் என்னை உடனே ஆட்கொள்ள மறுத்தது... வலுக்கட்டாயமாக தூங்க முயற்சித்துக் கொண்டு இருந்த பொழுது ஒரு சிறு உரையாடல் என் கவனத்தைத் திசை திருப்பத் தொடங்கியது...
இனி அந்த உரையாடல்;-
‘சில வாரங்களுக்கு முன்னால வரை எவ்வளவு நிம்மதியா நம்ம சுற்றத்தாரோட இருந்தோம்?’
‘ஆமா.. எல்லாத்துக்கும் அங்கே படுத்துக்கிட்டு இருக்கானே அவன் தான் காரணம்’
நானா... நான் என்ன செய்தேன்?
‘நம்மை இப்படிக் கொண்டு வந்து தனியாக சிறை வைத்துக் கொடுமைப் படுத்துகிறான்’
‘வர வர நமக்கு சாப்பாடும் போடுவதில்லை’
‘இவனைப் போன்றவர்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை’
‘ஆசை என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்திற்கு அளவே இல்லை’
‘என்ன செய்ய... நம் விதி இதோடு முடியப் போகிறது’
‘இதற்கெல்லாம் சேர்த்து இவனுக்கு நாம் சாபம் இட வேண்டும்’
‘வேண்டாம்... எனக்கு சாபம் எதுவும் கொடுத்து விடாதீர்கள்... நான் ஏதாவது தவறு இழைத்து இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்’ மன்றாடத் தொடங்கினேன்...
‘இல்லை ... எங்கள் முடிவில் மாற்றம் இல்லை...’
‘பிடி சாபம்... அடுத்தப் பிறவியில் நீ எங்களைப் போன்று ரோஜா செடியாகப் பிறக்கக் கடவாய்’
மூன்று வாரங்களுக்கு முன் வீட்டிற்கு வாங்கி வந்த
இரண்டு ரோஜா செடிகளுக்கு நான் விரைவாகத் தண்ணீர் ஊற்ற எழுந்து சென்றேன்.... தூக்கக் கலக்கத்துடன்

Subscribe to:
Posts (Atom)