‘ஒன் ஹார்டு மார்னிங்...’
‘பாப்பா... கதை ஆரம்பிக்கும் போது இப்படியா பாப்பா ஆரம்பிக்கிறது?... ஒன் ஃபைன் மார்னிங்னு ஆரம்பிக்க வேண்டாமா?’
‘மாமா.. பாட்டி ஏமாந்து போயிடுவாங்கள்ள ... அப்ப எப்படி அது ஃபைன் மார்னிங் ஆகும்?’
‘பாட்டிக்கு வேணும்னா அது ஹார்டு மார்னிங்கா இருக்கலாம் பாப்பா.. ஆனால் கதை கேட்கிறவங்களுக்கு அது ஃபைன் மார்னிங் தானே?’
‘எங்க டீச்சர் இப்படித்தான் சொல்லித் தந்தாங்க...’
‘அப்ப சரி பாப்பா... கன்டினியூ பண்ணுங்க’
‘ஒன் ஹார்டு மார்னிங் எ கிரான்ட் மா வடா சுட்டிங்’
‘பாப்பா... என்ன இது.. வடா சுட்டிங்... இப்படியா டீச்சர் சொல்லித் தந்தாங்க?’
‘ஆமா...’
‘இல்ல .. இஸ் பிரிப்பேரிங்னு.சொன்னா நல்ல இருக்கும்ல’ (டேய் தம்பி... நீ பீட்டர்ல வீக்... அநாவசியமா மாட்டிக்காதடா... சின்னப் பொண்ணுட்ட அவமானப் படணுமாடா... என் மனதின் எச்சரிக்கையை உதாசிணப் படுத்திவிட்டு தொடர்ந்தேன்)
‘கதை சொல்லட்டுமா .. வேண்டாமா?’
‘சொல்லுங்க’
‘சரி.. ஒன் ஹார்டு மார்னிங் எ கிராண்ட் மா வடா சுட்டிங்.. அட் தேட் டைம் எ க்ரோவ் கேம் தேர்... மாமா.. ம் சொல்லவே மாட்டேங்கிறிங்க’
‘நீங்க கதை சொல்றதையே கவனிச்சிட்டு இருந்தேனா.. ம் சொல்ல மறந்துட்டேன்... சரி... “ம்”..’
‘இட் டுக் எ வடா அண்டு பிளை அவே’
‘ம்’
‘இட் சேட் இன் எ பிராஞ்ச் ஆப் எ ட்ரீ’
‘சரி.. அப்புறம்’
‘அட் தேட் டைம் எ ஃபாக்ஸ் கேம் தேர்’
‘சரி..’
‘நான் விளையாடப் போறேன் மாமா..’
‘மீதியையும் சொல்லிடுங்க பாப்பா’
‘ம்... நீங்க ஒரு ஏமாளி மாமா’
‘....’
சொல்லி விட்டு துள்ளிக் குதித்து ஓடி விட்டாள்... எப்படித்தான் கண்டுபிடிப்பாய்ங்களோ... ஐந்து நிமிடந்தானே பேசிக் கொண்டு இருந்தேன்... நான் நரியில்லையா பின்னே?... நீங்களே சொல்லுங்களேன்?
Tuesday, November 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment