Tuesday, November 10, 2009

நீ ... கிளிப்பிள்ளை ;-)...

‘நான் எழுதுறதை நிப்பாட்டிட்டேன்...’

‘ம்... ஏன்?’

‘எழுத உட்கார்ந்தா அவளைப் பற்றி மட்டும் தான் எழுத வேணுமென்று தோன்றுகிறது!... என் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாம என் மனதை எளிதாகக் காயப்படுத்தி விடுகிறார்கள்...’

‘உன் தப்பு தான்’

‘என்ன தப்பு? என்னுடைய தளத்தில் நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன்.. அதுக்கு எனக்கு முழு உரிமை இருக்கு’

‘இல்லைன்னு சொல்லலையே... என்னைக்குப் பொதுவில் உன் பிரச்சினையை எடுத்துட்டு வர்றியோ.. அப்பவே அதற்கான விமர்சனத்துக்கும் நீ தயாரா இருக்க வேணும்...’

‘விமர்சனம் பண்ணினால் பரவாயில்லை... ஆனால்...’

‘சரி... உன் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலா ஏன் உன்னுடைய தளத்தை உருவகப் படுத்துற’

‘இல்லை ... என்னுடைய நோக்கம் அது இல்லை’

‘நோக்கம் ... எதுவாக வேணுமென்றாலும் இருக்கட்டும்... உறுதிப்படுத்தப் படாத ஒரு விசயத்தை நீ இவ்வளவு தூரம் எடுத்துட்டு வந்ததே தப்பு’

‘.....’

‘சொல்லவும் மாட்ட... வெளியிலேயும் தெரியக் கூடாதுங்கிற.. மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு கிடக்கிற... போதும் சகிக்கலை...’

‘உனக்குமா?’

‘ஹா..ஹா...ஹா... நான் அந்த அர்த்தத்தில சொல்லலை...நீ எப்படி இருந்த ... எப்படி இருக்கிற... எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தான் இருக்கிறேன்... மாத்திக்க வாய்ப்பு இருக்கு’

‘.....’

‘உனக்கு அப்படியே எழுத வேணும் என்று தோனுச்சுனா... வழக்கம் போல காகித்தில எழுதி .... கிழிச்சிடு...’

‘அதுவும் சரிதான்... பகிர்ந்து கொள்ளக் கூடிய விசயத்தை மட்டும் பதிவில் போடுறேன்’

‘நீ ... கிளிப்பிள்ளை ;-)...’

No comments:

Post a Comment