Sunday, November 29, 2009

ஏன் இப்படி எழுதுற?

“என்ன பண்ற?”

“இப்ப தான் எழுந்தேன்”

“ஏன் இப்படி எழுதுற?”

“எதை சொல்ற?”

“அழுதுட்டேன் தெரியுமா?”

“எதைம்மா படிச்ச?”

“நீ இனிமே இப்படி எழுதாத!”

“நான் நடந்த விசயங்களைத் தான எழுதி இருக்கேன்”

“நடந்த விசயந்தான்... அப்படியே தான் எழுதி இருக்க... இனிமே இப்படி எழுதாத... அழுதுட்டேன்”

“நீ அழுக வேணும்னு நான் எழுதலைடா... !”

“ஆனா அழுக வருதே...!”

“சரி ... இனிமே சிரிப்பு வர்ற மாதிரி மட்டும் எழுதறேன்”

“இல்லை... கொஞ்சம் சிரிப்பு .. கொஞ்சம் சோகம்... இப்படி..”

“இனிமே சிரிப்பு மட்டும் தான்...!”

“ஓ.கே...”

என் மனதில் எழும் சோகங்களை எங்கேயாவது கொட்டி வைப்போம் என்று ஆரம்பித்த ஒரு விசயம் இன்று தெரிந்தோ தெரியாமலோ அன்பு உள்ளங்களைப் பாதித்து இருக்கிறது...

ஸோ... இனிமே நோ ஃபிலிங்ஸ்...!

No comments:

Post a Comment