பயணத்தைத் தொடர இன்னொரு விமானத்தைப் பிடிக்க வேண்டும். ஆனால் அதற்கு இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. நினைக்கும் பொழுதே எங்கேயாவது படுத்துத் தூங்கி விட வேண்டும் என்று மனது தொந்தரவு செய்யத் தொடங்கியது. இருந்தாலும் சாப்பாடு, கடைகளைச் சுற்றிப் பார்த்தல் என்று சில மணி நேரத்தை ஒப்பேற்றி பார்த்தோம். வேற வழியே இல்லை என்னும் பொழுது ஒரு அருமையான இடமாகக் கண்டுபிடித்து இந்த ஐந்தரை அடி உயர பீப்பாயை கிடைமட்டமாகக் கிடத்தினேன்.
“மிஸ்டர். கார்த்திகேயன்... கொஞ்சம் என்னையும் என் பையையும் பார்த்துக்கிறிங்களா?”
“சரிங்க...!”
"கைப்புள்ள இன்னும் ஏன்டா முழிச்சிக்கிட்டிருக்க.. தூங்குடா...."
என்னை முழுவதுமாகத் தூக்கத்திற்கு ஒப்புக் கொடுத்து விட்டேன். உறக்கத்தின் ஊடே என் காதிற்குள் பாடல் ஒலிக்க ஆரம்பித்த்து. சற்றென்று விழித்துப் பார்த்தேன்... எங்கேயும் யாரையும் காணவில்லை...
“கனவு;-)” ...
மறுபடியும் தூங்கத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் மறுபடியும் பாடல் ... சரி யாரோ தாலட்டுகிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டு கண்ணை இறுக்கி மூடிக் கொண்டேன்... ஒருவாறு தூக்கத்தை முடித்துக் கொண்டு எழுந்த பொழுது
“உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு...!”
என் காதினில் ரீங்காரமிடத் தொடங்கியது. நொடிப் பொழுதில் மனது பலவிதக் கணக்குகளைப் போடத் தொடங்கியது..
“வேண்டாம் கை... அந்த எண்ணமே ஆகாது” .
தனது முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்ரமாதித்தன் போன்றவனாகிய நான் (கொஞ்சம் ஓவர் தான்... கொடுமையோட கொடுமையா இதையும் பொறுத்துக்கோங்க;-)..) மறுபடியும் முருங்கை மரத்தில் ஏற முயன்ற மனம் என்னும் வேதாளத்தை இரக்கமே இல்லாமல் இழுத்துத் தோளில் போட்டுக் கொண்டேன்... தலை வேறு “ங்...கொய்” என்று வலிக்க ஆரம்பித்தது... அப்படியே திரும்பிப் பார்த்தேன்... சிவாஸ் ரீகல் என்னைப் பார்த்து கை அசைத்தது... கால்கள் என்னிடம் ஒப்புதல் வாங்காமலே கண் போன போக்கில் போக ஆரம்பித்தது...
“கை... வேண்டாம்... சொன்னாக் கேளு”...
கேட்க வில்லை... மிக அருகில் சென்று விட்டேன்.
“சரக்கு கிடைக்கிறப்பெல்லாம் குடிக்கிறவன் குடிகாரன் கிடையாதுடா... சரக்கு கண் முன்னாடி இருந்தாலும் யார் குடிக்காம இருக்கிறானோ அவன் தான்டா கைப்புள்ள உண்மையான குடிகாரன்... நீ உண்மையான குடிகாரனா?”
மசியவில்லையே...
“சரி.. கை..நீ இப்போ ஆரம்பிச்சேன்னா... இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு... பயணம் தடை பட்டு போச்சுன்னா... உன்னையையும் நம்பி அனுப்பி வைச்சிருக்காங்கா.. அந்த நம்பிக்கையை கெடுத்துடாத... வேற ஒரு வழி இருக்கு... அடுத்த விமானத்தில ஏறின பத்தாவது நிமிடம் உனக்கு தேவையானது கிடைக்கும்.. ஓசியில....”
ஒரு வழியாக அந்த இன்னொரு நுழைவுவாயிலை நோக்கி மற்றவர்களுடன் நடக்கத் தொடங்கினேன் மனதை வெற்றி கொண்ட மகிழ்ச்சியில்...
ஒரு மிக நீ..ண்ட சுரங்கப் பாதையைக் கடந்து தான் நாங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கான நுழைவு வாயிலை அடைய முடியும்... அந்த நீண்ட சுரங்கப் பாதையின் இரு புறமும் தரையோடு நகரும் படிக்கட்டுகள்(?!) அமைக்கப் பட்டு இருந்தன... அதில் ஏறி நின்று கொண்டேன்.. அதன் தாழ்வாரம் ஒரு கீழ்நோக்கிய அரை நீள் வட்டத்தினைப் போன்று இருந்தது.. அதன் இரு புறங்களிலும் மின் விளக்குகள் பொருத்தப் பட்டிருந்தன... சிறிது நேரத்திற்கு ஒரு முறை சிறிது தூரத்திற்கு ஒரு முறை நிறம் மாறிக் கொண்டே வந்த்து... என் மனதினைப் போல....
ஒரு வழியாக விமானத்தில் என் இருக்கையில் என்னைக் கிடத்தியாயிற்று... உணவு பரிமாறத் தொடங்கினார்கள்... கைப்புள்ள உற்சாகமானான்... பத்து வரிசைக்கு கொடுத்து முடிக்க இவ்வளவு நேரமா? சலித்துக் கொண்டது என் மனம்... எனக்கு முன்னால் இருக்கும் வரிசைக்கு வந்தாயிற்று... அப்பொழுது தான் அந்த விமானப் பணிப்பெண்ணின் குரல் என் காதில் கேட்கத் தொடங்கியது...நம்பினால் நம்புங்கள் அத்துனை இனிமை... சிறு குழந்தையின் மழலை மொழி போல... உற்று கவனித்தேன்... அது அவளின் இயற்கையான குரல் தான்... செயற்கை வேடம் தரிக்கவில்லை...
‘ஃபார் யூ சார்’
"உன் குரலிலேயே ஏற்கனவே மயங்கிப் போய் கிடக்கிறேன்..." அவள் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் குடித்து விடும் முடிவுக்கு வந்து விட்டான் கைப்புள்ள...
“ யூ கேவ் ஆரஞ்ச் ஜீஸ்?”..
“யெஸ் ”
வாங்கிக் கொண்டேன்...இன்னும் சிறிது நேரம் அந்தக் குரலைக் கேட்கலாமென்றால்... கொடுப்பினை இல்லை...
ஆனால் எப்படியோ வழக்கம் போல கைப்புள்ள ஏமாந்து போயிட்டான்....
“ஹீம்... வடை போச்சே” ...
இந்த ஐந்து நாட்களுக்கும் ஏதாவது சொல்லி... செய்து ஒப்பேற்ற வேண்டும் ;-)...
..............
Tuesday, November 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment