“இன்னைக்கு எப்படி?”
“கண்டிப்பா வர்றேன் கிருஷ்!”..
அவரது இருப்பிடத்திற்கு நேற்றே வருவதாய் வாக்களித்திருந்தேன். சில பல காரணங்களினால் அது இன்று தள்ளிப் போனது ஏற்கனவே சங்கடங்களில் ஆழ்ந்திருந்த என் மனதை இன்னும் சங்கடத்தில் ஆழ்த்தி இருந்தது.
“கிருஷ்.. அந்த ஜெர்மன் பொண்ணு?”
“அவளைப் பார்த்தா நீங்க சாப்பிடக் கூட மாட்டிங்க..” அருகில் இருந்து ஒரு குரல்.. ஆஹா.. அவ்வளவு அழகா.. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல .. மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
“அவளோட பாய் பிரண்ட் வெக்கஷன்ல பார்க்க வந்திருக்கான்” என்றார் கிருஷ்.
“கொக்கா மக்க.. அது என்னடா நீ ரிசர்வேஷன் பண்ணலாம்னு போன ஒன்னு வெயிட்டிங் லிஸ்ட்ல போயிடுது .. இல்லாட்டி ஊடால வந்த யாராவது புக் பண்ணிட்டு போயிடுறாய்ங்க?.. ராசியே இல்லைடா...” மனது காரணமே இல்லாமல் அழுத்துக் கொண்டது.
“சரிங்க கிருஷ்... சாயங்காலம் சேர்ந்து கிளம்பலாம்”
எல்லா சம்பரதாயங்களும் முடித்து விட்டு கிருஷின் இடம் தேடி சென்றேன். மணி மூன்று கூட ஆகவில்லை.. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே..
“ஹே கிருஷ்..”
“என்னப்பா.. அதுக்குள்ளே”
“ஹீம்.. ஏதோ ..ஷாப்பிங்... ப்ரியா விடுங்க கிருஷ்..” அருகில் தூங்கிக் கொண்டு இருந்த கணிணியை உசுப்பினேன்..
“கிளம்பலாமா?”
“வேலையை முடிச்சிட்டா...!”
இந்த யுகத்தில் வேலை முடியாது என்பது போல என்னைப் பார்த்தார்... திரும்பவும் அவராகவே...
“ஐந்தரை மணி”
“பார்க்கலாம்”
........
“கிளம்பாலாம்பா... இப்போ கிளம்புனா ஸ்டே அட் போயிட்டு அங்கேயிருந்து என்னோட ரூமுக்குப் போயிரலாம்... சரியா”
தலையை ஆட்டி வைத்தேன்... எனது அறையில் இருந்து கிளம்பி நேராக சமையலுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கச் சென்றோம்.
“கிருஷ்... நான் இரண்டு பாட்டில் சரக்கு வாங்கிக்கறேன்..”
“குடிக்கிறது இல்லைன்னு..”
“ எனக்கு இல்லைங்க... பசங்களுக்கு...”
“சரி.. நான் போயி சமையலுக்குத் தேவையான சரக்கு வாங்கிறேன்.. நீ போயி உனக்குத் தேவையான சரக்கு வாங்கிட்டு இரு”
“கிருஷ்.. நீங்க வர்ற வரைக்கும் நான் அங்கேயேதான் இருப்பேன்..”
ஆல்கோ... நம்ம ஊர் டாஸ்மாக் மாதிரின்னு வைச்சுக்கோங்களேன்... ஆனால் டாஸ்மாக்கை விட ஆயிரம் மடங்கு நல்ல சரக்கும் நல்ல சூழ்நிலையும் அமைந்த கடை... கடைக்குள் நுழைந்தேன்... என்னுள் இருந்து ஒரு நிழல் உருவம் கிளம்பி எனக்கு முன் செல்லத் தொடங்கியது... அந்த நிழல் உருவம் எனது மனதின் பிம்பமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்... அதன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி..
குட்டிக் கரணம் அடித்துக் கொண்டு முன்னே சென்றது... பின் தொடர்ந்தேன்... அது நேராக நெப்போலியன் இருக்கும் இடத்திற்கு தேடிச் சென்றது.. அதே இடம்... அதே பாட்டில்.. எல்லாம் அதே... இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்... நீண்ட நாள் கழித்து சந்தித்த இரு நண்பர்களைப் போல இருவரும் பேசாது நின்றனர்.. நேரம் ஆகிக் கொண்டு இருந்தது... நிழல் உருவம் என்னை நெருங்கியது... “நெப்போலியனும் நம்மோட வர்றானாம்.. கூட்டிட்டு போலாம் .. ப்ளிஸ் ...” கெஞ்சத் தொடங்கி இருந்தது.
“போகும் போது பார்க்கலாம்”.. என்று அந்த நிழல் உருவத்திடம் நான் பதில் கூற.. “சரி... வேறென்ன மாறி இருக்குன்னு பார்க்கலாமா?” என்றது.. என்னைக் கை பிடித்து அந்தக் கடையின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிக் காட்டியது.. எல்லாவற்றையும் பார்த்தாயிற்று... ஜோதிகா சந்திரமுகியாக மாறும் போது அவள் கண்களை நோக்கி லைட் அடிப்பார்களேஅது போல அந்த நிழல் உருவத்தின் கண்கள் ஒவ்வொரு சரக்கைப் பார்க்கும் போது பளிச்சிட்டன...
“என்ன வாங்கியாச்சா?”
“ஒரு நிமிஷம் கிருஷ்”... நிழல் உருவத்தைப் பார்த்தேன் ஏமாற்றத்துடன் நின்றது... தேவையானவற்றை வாங்கிக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தாகி விட்டது... நிழல் மட்டும் கடையை விட்டு வெளியே வரவில்லை... நெப்போலியனுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு என்னையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தது..
“இதில இருக்கிற சரக்கு உனக்கு தான்டா செல்லம்” என்றேன் என் நிழல் உருவத்திற்கு மட்டும் கேட்கும் படியாக.... ஒருவழியாக அது என்னை நோக்கி வரத் தொடங்கியது.. ஏமாற்றமாக இருந்தாலும் கையில் இருப்பதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே என்னுள் ஐக்கியமானான்..
விட்டுப் போன தொட்டுப் போன விசயங்கள் எல்லாவற்றையும் வீட்டைநெருங்குவதற்குள் பேசி முடித்திருந்தோம்.. அழைப்பு மணியை அழுத்தத் தொடங்கினார்... அது நம்மூர் சைக்கிள் பெல் போல ஒலி எழுப்பியது..
“யாருய்யா வீட்டிற்குள்ள சைக்கிள் ஓட்றது?”
“அது தான்பா இங்க காலிங் பெல்..” என்றார் சீரியஸாக...
கதவு திறக்கப் பட்டது... கதவிற்குப் பின் ஒரு ஆறடி மாநிறப் பையன் நின்றிருந்தான்.. முடி நீளமாக வளர்க்கப் பட்டு முடிந்த அளவு பராமரிக்கப் பட்டு இருந்தது...
“ஹாய்... ராகேஷ்” கையை நீட்டினான்...
“சேக்..” அறிமுகப் படுத்திக் கொண்டேன் கையை குலுக்கிக் கொண்டே...
“தெரியும்”... ஆச்சர்யமானேன்... அந்த ஆச்சர்யம் பரந்து விரிந்து “இந்தப் பயலுக்கு எப்படி இந்த விஷயமெல்லாம் தெரியுது... யார் சொல்றா?”
சிறிது நேரம் எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு சமையலைத் தொடங்கினார்கள்... களைப்பு மிகுதியாக இருந்த எனக்கு அங்கிருந்த ஷோபா கருணையுடன் அரவணைத்து இடம் கொடுத்து உதவியது... எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் என்று நினைவில் இல்லை...
“ரெடி ஆகிடுச்சுப்பா.. எழுந்திரு”
எழுந்து பார்த்தேன்.. ஒரு முழு கோழி அப்படியே பொரிக்கப் பட்டு இருந்த்து... “கோழி குனிந்து இருக்கும் பொழுது அடிச்சிட்டாய்ங்களோ?” மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்... ஆந்திரா ஸ்பெஷலாக பருப்பும், தயிரில் ஒரு டிஷ்ஷூம் இருந்தது..
“யூ ஆர் த கெஷ்ட்... ஸோ.. இட் ஆல் த சிக்கன்”
“பாஸ்... ஐ கான்ட்...வில் ட்ரை ட்டூ கிவ் கம்பெனி ட்டூ யூ.. ப்ளிஸ் யூ ஆல்சோ டேக்..” தெய்வீக உணவை ஒரு வழியாக முடித்து விட்டேன்... உண்மையைச் சொல்வதானால் சற்று அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்( எல்லாருக்கும் மிச்சம் சோறு இருந்ததுப்பா... எல்லாரும் என்னைய சந்தேகக் கண்ணோடு பாக்கதிங்க :-)...)
“சரி ஐஸ்.. சாப்பிடலாம்..”
“கிருஷ்.. எனக்கு பயங்கரமா தலை வலிக்குது... பத்தாதிற்கு வர்ற வழியில வேற மழையில ஆட்டம்...”
“கொஞ்சம்...?”
“கூட வேணாம்...”
அதற்குப் பின் ராகேஷ் தனது கிட்டாரை எடுத்து வாசித்துக் கொண்டே பாடத் தொடங்கினான்.... அந்த ரம்யமான சூழ்நிலை... வயிறு நிரம்பிய ஒரு நல்ல வேளை.... என்ன சொல்ல அந்த இசை என்னை நிகழ்காலத்தை மறக்கச் செய்தது... எனது கண்கள் ராகேஷின் கைகளின் அசைவதற்கு ஏற்ப அசைந்து கொடுத்தது.. இதற்கிடையே கிருஷ் ஐஸ் கீரிம் எடுத்து வந்து வைத்திருந்தார்... மேலும் சில பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்... அந்த இடத்தை விட்டு அகன்று விடவே மனது இல்லை...
“கிளம்புப்பா... நீ போயி தான் பேக்லாம் பண்ணனும்..” நிகழ்காலத்திற்குத் திரும்பினேன்... விடை பெற்றுக் கொண்டு திரும்பும் பொழுது அங்கிருந்த ஐஸ் கீரிமை நோட்டமிட்டேன்... என்னுடன் சேர்ந்து அதுவும் உருகி இருந்தது....
“இந்தியாவுல பார்க்கலாம்...”
“நீங்க திரும்பி வருவீங்க.. நம்ம திரும்பவும் இங்கேயே சந்திப்போம்” ராகேஷின் வார்த்தைகளில் திக்குமுக்காடிய நான்... “ஐ விஸ் அஸ் யூ விஸ்” என்றேன்..
தனிமையில் எனது அறையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்... எனக்குத் துணையாக மழைத் தூரல் மட்டுமே... தெருக் கம்பங்கள் தங்கள் தலையில் விளக்கை மாட்டிக் கொண்டு கீழ்நோக்கி எதையோ தேடிக் கொண்டிருந்தன... தொந்தரவு செய்யாமல் விலகி நடக்கத் தொடங்கினேன்.. மரங்கள் நான் பிரியப் போவதை நினைத்து என் மேல் தனது இலைகளைத் தூவி வழி அனுப்பி வைத்தது..
தூரத்தில் இருள் என்னுடைய வருகைக்காகக் காத்திருந்தது... சற்று நேரத்திற்கெல்லாம் இருள் தனது கரங்களில் இருந்த பொன்னாடையை என் மேல் போர்த்தியது... தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்த மரங்கள் செடிகள் எல்லாவற்றிற்கும் நான் ஒரு புள்ளியாகத் தெரிந்து மறைந்தேன்...!
Sunday, November 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment