Saturday, November 14, 2009

வரம்...!

எம் விரல் பிடித்து நடை
பயிர்ப்பித்தாய்!

தீயினில் வெந்து எம்மை
வளர்த்திட்டாய்!

தீமைகளினின்றும் எம்மை
காத்திட்டாய்!

கருவிழி காக்கும் இமை போல
அரணாய் நின்றாய்!

என்ன குற்றம் செய்திட்டேன் எம்மை
விட்டு தொலைதூரம் சென்றாய்?

எமது தேவைகளைப் பார்த்துப் பார்த்து பூர்த்தி
செய்தாய்... நினது தேவைகள் என்று ஒன்று இல்லையோ?

பாரம் என்று நினைத்து எம்மை
பிரிந்தாயோ? பிரிவு மிகப் பெரிய பாரம் என்று அறியாயோ?

என் முன்னேற்றங் கண்டு மகிழ்ச்சியுற நீ இங்கு இல்லை அழியாத் தீயில் விடப் போகிறோம் என்று அறியாமல் விட்டு விட்டாயோ...?

என்ன தவம் செய்து விட்டேன் நான் இங்கு உனது
மகனாய் பிறந்திடவே...

நின்னைப் போல் உழைக்கும் போதே மரித்திடும் வரம்
அருள்வாய்... !

இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று தோன்றுகிறது... என் கண்ணீர் கைகளை நனைக்கிறது.... ஒவ்வொரு முறை எனக்கு நல்லது நடக்கும் பொழுது மகிழ்ச்சிக்கு பதில் என் மனது வெறுமையை சந்திக்கிறது...

அந்த வெறுமையின் வேதனை நிமிடங்கள் ஒரு யுகமாக மாற்றம் கொண்டு என் சிந்தையை வெறுமையாக்குகிறது... வெற்று பூத ஊடல் தொலைதூரப் பயணத்திற்குத் தன்னைத் தயார் செய்கிறது...


கிளம்பிட்டோம்ல... ;-)...

பயணத்தைத் தொடர்கிறேன்... மீண்டும் சந்திப்போம்... ;-)

No comments:

Post a Comment